அன்பு மிக்க 'அதிரை வரலாறு' வாசகர்களே, இந்த கட்டுரை அதிரை வரலாற்றுடன் தொடர்புடையது. இனி வரும் தொடர் கட்டுரைகளையும் வாசிக்கும் போது அதிரை வரலாற்றுடன் எந்த வகையில் தொடர்புடைவை என்பதை அறிவீர்கள். இன்ஷாஅல்லாஹ்.
கடல் கொண்ட குமரி(லெமுரியா)க் கண்டத்திலிருந்து பல பகுதிகளுக்கும் தமிழர்கள் இடப்பெயர்வு மேற்கொண்டு அங்கேயே அவர்கள் வாழ்விடங்களை அமத்தனர்.
அவர்கள் தான் பிந்தைய நாட்களில் தனி இனமாக உருவெடுத்தனர் அவர்களில் ஒரு பிரிவினர்தான் எகிப்தியர்.
இதையெல்லாம் ஆயிரமாயிரம் வரலாற்றாய்வுகள் நிரூபிக்கின்றன.
"குமரியக் கிழக்கு மலையாளப் பாண்டியப் பண்டு நாட்டிலிருந்து செங்கடல் வந்து நைல் நதிக்கரையில் குடியேறிய (தமிழர்களே) மக்களே எகிப்தியர் என்று புராதன கிழக்கு வரலாறு (The Ancient History Of The Near East) பக்கம் 92ல் தனது நூலில் ஆர்.ஹெச் ஹால் என்பவர் கூறுகிறார்.
அவரே, திராவிட மக்களும் எகிப்தியரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார்.
இதே கருத்தினை Outline Of The History By H.G.WELLS , Man's Place In Nature And Other Eassayas p- 233- Thomas Huxl மற்றும் ரிக்வேத இந்தியா என்ற தமது நூலில் பண்டிதர் சவுரிராயர், மற்றும் மெகஸ்தனிஸ் ஆகியோரும் குறிப்பிடுகிறார்கள்"(1)
நமது தமிழகத்திலிருந்து எகிப்து சென்ற மக்கள் (தமிழர்கள்) அரசாண்டுமுள்ளனர்.
"கி.மு. 4500 இல் எகிப்து நாட்டை மீனன் என்ற தமிழன் ஆண்டான். இதுப்பற்றிய அக்கால குருவான மனேதா என்பவர் மீனன் முதல் 300 அரசர் வரலாற்றை அவர் அங்கு எழுதிவைத்தார்.
இ.மு. 4000இல் பரவன் என்ற தமிழ் மன்னன் எகிப்து அரசனாக விளங்கினான்...."(2)
எகிப்து நாட்டிற்கு, இடம் பெயர்ந்த நம்மவர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும் தங்கள் இனத்தையும் தாய் நாட்டின் உறவையும் மறந்ததில்லை!
இங்குள்ள தமிழரும் எகிப்திய(தமிழரும்) மக்களும் ஒருவருக்கொருவர் கொடுக்கல் வாங்கல்களில், வணிகத்தில் தாராளமாகவே ஈடுபட்டனர்; திருமண உறவையும் மேற்கொண்டிருந்தனர்.
"தமிழகத்திலிருந்து எகிப்திற்கு வாசனை கோந்துகள், புதிய வாசனை மரங்கள், யானைத்தந்தத்தில் பொன்னெழுத்துக்களால் செய்த பொருட்கள், கேசித்து என்ற மரம், அகிற்கட்டை,தூய சாம்ராணி,கண்மை, ஒலி பனம், நாய்தலையுள்ள குரங்குகள்,நீண்ட வால் குரங்கு,வேடை நாய்கள், புலித்தோல் உள்ளிட்ட பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
சந்தனக்கட்டை, தந்தம், குரங்கு, மயில் போன்றவற்றைக் குறிக்க எகிப்திலும் தமிழ் மொழியிலேயே அழைத்தனர் என்று ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் குறிப்பிடுகிறார்.(3)
இங்கு நடக்கும் அரசியல் பூசல்களால் அவதியுற்ற தமிழர்கள் சில வேலைகளில் குழு குழுவாக கப்பல்களில் எகிப்து சென்று தஞ்சமடைந்தனர்.
அதே போல் எகிப்தில் ஏற்படும் அரசியல் நெருக்கடியால் துன்புறும் மக்களும் தாய்த் தமிழ் தேசம் வந்து வசிக்கத் தொடங்கினர்.
இந்த இடப்பெயர்வுகள் இப்போதிலிருந்து கடந்த ஆயிரம் ஆண்டுகளில்தான் அதிகம் நடந்துள்ளது, என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இஸ்லாம் பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்திலேயே எகிப்திற்கு காலடி எடுத்துவைத்துவிட்டது. இதன் மூலம் இஸ்லாம் அவர்களுக்கு நன்கு அறிமுகமான மார்கமாக இருந்தது!
"இரண்டாம் கலீபா ஹழ்ரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் அவர்களின் தளபதிகளில் ஒருவரான அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் தலைமையில் எகிப்தை கைப்பற்ற உத்தரவிட்டார்கள்.
கலீபா ஹழ்ரத் உமர்(ரலி) அவர்களின் உத்தரவின்படி தளபதி அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் கி.பி. 624ம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று எகிப்தை கைப்பற்றினார்கள்.அத்துடன் தளபதி அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்களே கவர்னராக இருந்து இஸ்லாமிய ஆட்சியை நடாத்தினார்கள்.(4)
உசாதுணை குறிப்புகள்:
(1) செங்கடல் தாண்டிய சிந்து வணிகம் பக்கம் 100
(2) செங்கடல் தாண்டிய சிந்து வணிகம் பக்கம் 27
(3) செங்கடல் தாண்டிய சிந்து வணிகம் பக்கம் 101
(4) இஸ்லாமிய சிந்தனை முந்திங்கள் வெளியீடு பக்கம் 19
ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து
தொடரும்...
2 comments:
அதிரை வரலாற்று எகிப்து வரை போகிறது....அல்ஹம்துலில்லாஹ்
உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .
பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும்
நன்றி
தமிழ்10.காம் குழுவினர்
Post a Comment