Loading...
Friday 3 September 2010

அதிரை மக்களின் திரவியம் தேடல்: அதிரை ஹிதாயத்

"திரைகடலோடியும் திரவியம் தேடு"  என்ற நமது தமிழ் முதுமொழிக்கிணங்க பொருளீட்ட உலகின் நாலாப் பக்க நாடுகளிலும் நம் மக்கள் பரவி உழைக்கின்றனர்.

யுகயுகமாக கடல் கடந்து வியாபாரம்,வேலை செய்து பழக்கப்பட்டு போனவர்கள் இவர்கள்.

பல நூற்றாண்டு காலமாக இலங்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்டுடிருந்தனர்.

இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கும் அதிராம்பட்டினத்திற்கும் இடையே உள்ள தூர அளவு இருபத்தேழு (27) மைல்கள் மட்டுமே! இலங்கையை வேற்று நாடாக ஒருநாளும் அவர்கள் நினைத்ததில்லை;அடுத்த ஊராகவே உளப்பூர்வமாக எண்ணினர்.

நினைத்த மாத்திரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து அதிராம்பட்டினத்திற்கும் நெத்து தேங்காய்,நாறப்பாக்கு,ஒடியங்கி
ழங்கு,பினாட்டு,தேயிலை போன்றவையும் இங்கிருந்து பசுமாடு, தவிடு,வண்டிமாடுகள்,காப்பிக்கொட்டை போன்றவற்றையும் ஜாஃப்னாவிற்கு (யாழ்ப்பாணம்) கொண்டு சென்று விற்பனை செய்தனர். இதில் நல்ல லாபம் ஈட்டினர்.

இலங்கையின் பலப் பகுதிகளிலும் கொப்பரை மண்டி, மளிகை கடை போன்ற நிறுவனங்களை ஸ்தாபித்து நல்ல முறையில் நடத்தி வந்தனர்.அங்கு வேலை செய்வதற்கு அதிரையிலிருந்தே ஆட்களையும் அழைத்துச் சென்றனர்.

பொருளீட்டுவதுடன் நின்றுவிடாமல் பல சமூக காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்(அல்லாஹ் அவர்களுக்கு நிரம்பக் கூலிகளை அளிப்பானாக!) இதன் காரணமாக அனைத்து இன மக்களின் பாசத்தையும் மரியாதையையும் பெற்றிருந்தனர்.

அங்குள்ள சோனக(முஸ்லிம்) பெண்களை முறைப்படி திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஊர்வரும்போது அவர்களை அதிரை பட்டினத்திற்கு அழைத்து வருவதும் அதிரையிலுள்ள மனைவி மக்களை அழைத்துப் போவதுமான நெருங்கிய உறவு முறையினை ஏற்படுத்தி இருந்தனர்.இதன் காரணமாக இன்றும் அந்த உறவு முறை பேணி காக்கப்பட்டு வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்!

இந்த நிலையில், 1944ல் ஓர் சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்தது. அதன்படி 'இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்'. என்பதே அந்த சட்டத்தின் சாரம்சம். இதனால், வேறு வழியின்றி பெரும்பாலானவர்கள் இலங்கை மண்ணை விட்டும் சோகமே உருவாக வெளியேறினர்.

இலங்கை ‍‍‍அதிராம்பட்டினம் தொடர்பு காலத்தை பொற்காலம் என்று அழைக்கலாம்!!!

நாடு திரும்பிவிட்டனர்.....வருமானமும் இல்லை. உள்நாட்டில் வியாபாரம் செய்ய ஒரு வழியும் தெரியவில்லை. ஏனெனில்,அயல் நாடான இலங்கையை அறிந்த அளவுக்குக் கூட அயல் ஊரை அறிந்த்திருக்கவில்லை. என்ற போதும் சிலர் வைராக்கியத்துடன் தமிழக தலைநகர் சென்னை துறைமுகப் பகுதியில் உள்ள மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெரு, லிங்கிச் செட்டித் தெரு, தம்புச் செட்டித் தெரு போன்ற பகுதிகளில் தங்கி பலையகாட் கைலியை வியாபாரம் செய்யலாயினர்.

சிலர் மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்குச் சென்றனர். பலருக்கு, பல காலம் வறுமையிலும் பஞ்சத்திலுமே காலம் கடந்தது.

பின்பு ஸவூதி, துபை,குவைத், பஹ்றைன், சிங்கப்பூர்,உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்றனர். வறுமை என்ற நிலைமாறி தன்னிறைவு என்ற நிலையை அடைந்தனர். புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!

சமீப காலமாக, அதாவது 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்கா, இலண்டன், ஆஸ்திரேலியா,ஜப்பான்,ஃபிரான்ஸ்,டென்மார்க்,ஜெர்மன்,கொரியா,இத்தாலி,ஸைப்ரஸ் போன்ற வளர்ந்த நாடுகளிலும் சென்று குடியேறினர்.

இதில் சில நாடுகளில் சொந்த வியாபாரமும் செய்கின்றனர். ஓரிருவர் அந்நாடுகளில் திருமணத்தையும் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. என்ற போதும் ஊரையும்,நமது கலாச்சாரத்தையும் மறப்பதில்லை என்பது மிக்க மகிழ்ச்சி தரும் செய்தி!

இறைவன் நாடினால்...!
இன்று விஞ்ஞானம் அடைந்துள்ள வியக்கத்தக்க வளர்ச்சிகள் நம்மை வியப்பிலாழ்த்துன்றது.

விரைந்து பாயும் ஏவுகணைகளைச் செலுத்தி மனிதன் விண்ணில் வலம் வருகின்றான். நிலவிலும் கால் பதித்துவிட்டான். பிற கோள்களுக்குச் செல்லும் முயற்சிகளும் நடை பெற்று வருகின்றன.

இந்த அத்தனை முயற்சிகளும் மனிதன் அங்கு வாழமுடியுமா என்பதற்கே. இதில் வெற்றி கிடைத்து அங்கும் செல்ல முடியுமென்றால் நாமும் செல்வோம்!


நமது மக்களின் பூர்வீக தொழில்கள்!

* கப்பல் மூலம் வியாபாரம்

* உப்பு உற்பத்தி

* தேங்காய்


* தென்னை சார்ந்த தொழில்கள்

* அரிசி மற்றும் அது சார்ந்த தொழில்கள்

* நவரத்தின கற்கள்

* எண்ணெய்

* கைலி


சமீப கால தொழில்கள்

* பதிப்பகம்

* புத்தக விற்பனையகம்

* பிரிண்டிங்


* விளம்பர ஏஜென்ஸி

* மார்க்கெட்டிங்

* ஜெனரல் ஸ்டோர்ஸ்

* ஜவுளி

* டிராவல் ஏஜென்ஸி

* ரியல் எஸ்டேட்

* வெளிநாட்டு பொருட்கள் விற்பனையகம்

* மூக்கு பொடி(SUNFF)

* மருந்து வியாபாரம்


ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

20 comments:

அஜீஸ் said...

//ஓரிருவர் அந்நாடுகளில் திருமணத்தையும் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது// நெசந்தான். அமெரிக்காவுல ஒருத்தரும் லன்டன்ல இருவரும் திருமணம் முடித்திருக்காங்க.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.தம்பி நல்ல லாவகமா சொன்ன விதம் போட்டுல போய் தண்ணிய கையில கோரிவிட்டுக்கிட்டு சுத்திட்டு வந்த மாதிரி சுகானுபவமா இருக்கு.வாழ்துக்கள் தொடரட்டும் உம்முடைய எழுத்துப்பணி.அந்த காலத்துல துபாயிக்கு கல்லத்தோணியில சிலர் நம்மூரிலிருந்து போனாங்கலாமே அதைபற்றி ஏதும் சுவையான அரிதான தகவல் உண்டா?

அஹமது இர்ஷாத் said...

ஏகப்பட்ட விஷயம் கையில இருக்கு போல. தொடருங்க.

தாஜுதீன் (THAJUDEEN ) said...
This comment has been removed by the author.
தாஜுதீன் (THAJUDEEN ) said...

இலங்கை தமிழும் அதிரை தமிழும் பல வகையில் ஒன்றுப்பட்டிருப்பதை இக்கட்டுரையின் மூலம், தெரியதவர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

நல்ல தகவல் தந்த சகோதரர் ஹிதாயத் அவர்களுக்கு நன்றி.

இளம் தொழில் அதிபர்களை உருவாக்கிவரும் (அதிரையில்) தகவல் தொழில்நுட்ப தொழில் மற்ற ஊர்காரர்களை அதிரை பக்கம் திரும்ப செய்திருக்கிறது என்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

Uk- Adirai said...

//ஓரிருவர் அந்நாடுகளில் திருமணத்தையும் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது// நெசந்தான். அமெரிக்காவுல ஒருத்தரும் லன்டன்ல இருவரும் திருமணம் முடித்திருக்காங்க.//

அஜிஸ் யாருண்டு சொல்லுங்க, லண்டன்ல யார் இரண்டு பேர் திருமணம் செஞ்சது...?
உங்க கமெண்ட் பாத்துட்டு அதிரை லண்டன் வாசிகளுக்கு (வீட்டுகாரங்களின்) ஒரே போனாம்.

பிளீஸ்.... சொல்லுங்கமா...

Shameed said...

அதிரை வாசிகள் பல வெளிநாடு போய் திரவியம் தேடியும் அரபு நாடுகள் வந்த பின் தான் அதிரை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது என்பது மட்டும் உண்மை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட.. என்ன(தம்பி) ஹிதாயத் ! சுருக்கமா அழகான அதுவும் தகவல் பெட்டகம் உள்ளடக்கிய பதிப்பு, தொடரவும் (வாழ்த்துக்கள்) !

Shahulhameed said...
அதிரை வாசிகள் பல வெளிநாடு போய் திரவியம் தேடியும் அரபு நாடுகள் வந்த பின் தான் அதிரை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது என்பது மட்டும் உண்மை///

என்ன சாஹுல் நீங்க என்னான்னா தரம் உசந்திடுச்சுன்னு சொல்றீங்க ஆனா மத்தவங்க "தாரம்" உயர்ந்திடுச்சுன்னு (எண்ணிக்கை) சொல்றாங்களே... எல்லாத்துக்கு ஒரு கால் தான் பிரச்சிய்னையே அத எடுத்தா நிம்மதியா இருப்பாங்களோ ஊர் பெண்டுகள் :))

crown said...

என்ன சாஹுல் நீங்க என்னான்னா தரம் உசந்திடுச்சுன்னு சொல்றீங்க ஆனா மத்தவங்க "தாரம்" உயர்ந்திடுச்சுன்னு (எண்ணிக்கை) சொல்றாங்களே... எல்லாத்துக்கு ஒரு கால் தான் பிரச்சிய்னையே அத எடுத்தா நிம்மதியா இருப்பாங்களோ ஊர் பெண்டுகள் :)
-------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அபுஇபுறாகிம். நலம் நலமறிய ஆவல்.புனித ரமலான் எனக்காக துஆசெய்யவும்.ஒரு காலினால் தான் இந்த பிரட்சணை சரிதான் அதனால் தான் திருமணத்தை கால்கட்டு(வெட்லாக்)ன்னு சொல்றாங்களோ???ஒருகால் அவ்வாறு நடக்காமல் இருந்தால் அக்காள்,தங்கை மூக்கால்(சிந்தி)அழாமல் மனம் வருந்தி நொருங்காமல் இருப்பார்கள்.பின் தன் நாக்கால் காலமெல்லாம் நம்மை புகழ் பாடி இருப்பார்களோ??? சொல்லுங்களே மறுக்காமல் உங்கள் பதிலின் மூலம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

crown said...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அபுஇபுறாகிம். நலம் நலமறிய ஆவல்.புனித ரமலான் எனக்காக துஆசெய்யவும்.//

அலைக்குமுஸலாம் (வரஹ்), நலமே அங்கே எப்படி (அடங்களின்) நலம் ?

//ஒரு காலினால் தான் இந்த பிரட்சணை சரிதான் அதனால் தான் திருமணத்தை கால்கட்டு(வெட்லாக்)ன்னு சொல்றாங்களோ???ஒருகால் அவ்வாறு நடக்காமல் இருந்தால் அக்காள்,தங்கை மூக்கால்(சிந்தி)அழாமல் மனம் வருந்தி நொருங்காமல் இருப்பார்கள்.பின் தன் நாக்கால் காலமெல்லாம் நம்மை புகழ் பாடி இருப்பார்களோ??? ///

அப்படி ஏதும் நடப்பதாக இதுவரை யாரும் Call போட்டுச் சொல்லவில்லை ஒருவேளை கால் கால் போட்டுகிட்டு யோசிச்சா வெளங்கும்ன்னு நினைக்கிறேன் :)

நானுன் உன்னுடைய மூத்த சகோதரரும் ஹாஸ்டல் ரூமில் உறங்கிக் கொண்டிருக்கும்போது கோல் என்று சத்தம் வந்தது என்னமோ ஏதோன்னு பதறிப் போய் எழுந்து பார்த்தா ஒருகாலைப் பிடித்துக் கொண்டு தடவிக் கொண்டிருந்தார் நண்பர் என்ன ஆச்சுன்னு கேட்டா தூக்கத்தில் கோல் போட்டிருக்கிறார் அது என்னடான்னா காட்டில் காலுக்கும் அவரது காலுக்கும் சண்டையாகிவிட்டது ! :)

வாழ்க்கை(த்)தரம் உயருமென்று சென்றவர்கள்
வாழ்க்கை(க்குத்)தாரம் உயர்த்திக் கொண்டார்கள் (அதிரை வரலாறு உபயம்)

குறிப்பு : அந்த நண்பர் யாரென்று கேட்டுக்கொள்(ளவும்) மூத்தவரிடம்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

crown said...
புனித ரமலான் எனக்காக துஆசெய்யவும்.///

நிச்சயமாக இன்ஷா அல்லாஹ் !

அஜிஸ் said...

//அஜிஸ் யாருண்டு சொல்லுங்க, லண்டன்ல யார் இரண்டு பேர் திருமணம் செஞ்சது...?
உங்க கமெண்ட் பாத்துட்டு அதிரை லண்டன் வாசிகளுக்கு (வீட்டுகாரங்களின்) ஒரே போனாம்.

பிளீஸ்.... சொல்லுங்கமா...//

லண்டனில் திருமணம் முடித்த இருவரை சொல்லட்ட?
பின்னூட்டம் போடுங்க. மெஜாரிட்டி கருத்து படி சொல்லலாமா,வேண்டாமா? என்று முடிவு செய்வோம்.

முதல் தகவல் அவர் ஒரு இலக்கியவாதி‍,பத்திரிக்கையாளர்.........!

அஜிஸ் said...

//அஜிஸ் யாருண்டு சொல்லுங்க, லண்டன்ல யார் இரண்டு பேர் திருமணம் செஞ்சது...?
உங்க கமெண்ட் பாத்துட்டு அதிரை லண்டன் வாசிகளுக்கு (வீட்டுகாரங்களின்) ஒரே போனாம்.

பிளீஸ்.... சொல்லுங்கமா...//

லண்டனில் திருமணம் முடித்த இருவரை சொல்லட்ட?
பின்னூட்டம் போடுங்க. மெஜாரிட்டி கருத்து படி சொல்லலாமா,வேண்டாமா? என்று முடிவு செய்வோம்.

முதல் தகவல் அவர் ஒரு இலக்கியவாதி‍,பத்திரிக்கையாளர்.........!

அஜிஸ் said...

//அஜிஸ் யாருண்டு சொல்லுங்க, லண்டன்ல யார் இரண்டு பேர் திருமணம் செஞ்சது...?
உங்க கமெண்ட் பாத்துட்டு அதிரை லண்டன் வாசிகளுக்கு (வீட்டுகாரங்களின்) ஒரே போனாம்.

பிளீஸ்.... சொல்லுங்கமா...//

லண்டனில் திருமணம் முடித்த இருவரை சொல்லட்ட?
பின்னூட்டம் போடுங்க. மெஜாரிட்டி கருத்து படி சொல்லலாமா,வேண்டாமா? என்று முடிவு செய்வோம்.

முதல் தகவல் அவர் ஒரு இலக்கியவாதி‍,பத்திரிக்கையாளர்.........!

அஜிஸ் said...

யூகிக்க முடிதா?

அஜிஸ் said...

யூகிக்க முடிதா?

crown said...

அபுஇபுறாஹிம்.....
நானுன் உன்னுடைய மூத்த சகோதரரும் ஹாஸ்டல் ரூமில் உறங்கிக் கொண்டிருக்கும்போது கோல் என்று சத்தம் வந்தது என்னமோ ஏதோன்னு பதறிப் போய் எழுந்து பார்த்தா ஒருகாலைப் பிடித்துக் கொண்டு தடவிக் கொண்டிருந்தார் நண்பர் என்ன ஆச்சுன்னு கேட்டா தூக்கத்தில் கோல் போட்டிருக்கிறார் அது என்னடான்னா காட்டில் காலுக்கும் அவரது காலுக்கும் சண்டையாகிவிட்டது ! :
-----------------------------------
சில நேரங்களில் அந்த சம்பவத்தைப்பற்றி பேச்சு வரும் கூடவே சிரிப்பும் வரும் அவ்வளவு ஆர்வம் உதைபந்தின்(கால் பந்து) மேல்.

Shameed said...

காளை வச்சு எண்ணமா ஒரு விளையாட்டு விளையாடு ரீங்க .கால் இல்லாட்டி கலைய போயிடும்

crown said...

Shahulhameed, 5 September 2010 15:44

காளை வச்சு எண்ணமா ஒரு விளையாட்டு விளையாடு ரீங்க .கால் இல்லாட்டி கலைய போயிடும்
------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.காலை வைத்துக்கொண்டு காளைகள் விளையாடிய விளையாட்டு மைதானத்திலும்,திரைகடலோடியும்....எதிலும் ஒரு நிதானம் இருந்தால் தப்பாகாது விளையாட்டு.

Anonymous said...

""கவியன்பன்" பட்டம் நீங்களே வச்சுகிட்டதுதான்னு எல்லோருக்கும் தெரியும் அதுக்காக இப்படியா ?" சிறிக்க முடியல. மனுசன் இனி "பட்டம்"விட மாட்டார்.நம்புகிறேன்.

விட்டா...


விட்டா.........பட்டம் எப்படி கிழியும் என தெரியும்.

Labels

 
TOP