Loading...
Tuesday 7 September 2010

அதிரையின் சில முக்கிய நிகழ்வுகள்

கடந்த  2002 ஆம் ஆண்டில் 'அதிரை  கலைக் களஞ்சியம்' என்ற  பெயரில் சிறப்பு மலர்  ஒன்று வெளியாயிற்று.  இதனைத்  தொகுத்தளித்தவர், அல்ஹாஜ்  M.A. அப்துர்ரஹ்மான் (மர்ஹூம்)  அவர்கள். 

இதில் பாதிக்கு  மேல் தொகுப்பாசிரியரின்  குடும்பத்தவர்கள் பற்றிய  செய்திகள்தாம் (சுயபுராணம்) இடம்பெற்றுள்ளன.  முக்கியமான சில தகவல்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. 

பெரிய அளவில் விளம்பரங்களும் நன்கொடைகளும் பெறப்பட்டு, ஒரு சிறப்பு மலராக (கலைக் களஞ்சியம் அன்று) வெளியிடப்பட்டுள்ளது.  இருப்பினும், இதில் இங்கொன்றும் அங்கொன்றுமாக அதிரை பற்றிச் சில அரிய தகவல்களும் இல்லாமலில்லை.  எனவே, பொறுக்கு மணிகளாகச் சில தகவல்களை இதிலிருந்து தேர்ந்தெடுத்து, 'அதிரை வரலாறு' திரட்டியில் தருகின்றோம்.) -   அதிரை அஹ்மது

அதிரையின் சில முக்கிய  நிகழ்வுகள்:

* அதிராம்பட்டினம் புகைவண்டி நிலையம் 1-4-1938 முதல்  இயங்கத் தொடங்கியது.
    
* இதே நாளன்றுதான் அதிரையின் வீதிகளில் மின்சார விளக்குகள் எரியத் தொடங்கின.
    
* 1953 முதல் அதிரைப் புகைவண்டி நிலையத்தில் மின்சார வசதி செய்யப்பட்டது.
    
* அதிரையின் 'ஜாவியா'வில் 'புகாரி ஷரீஃப்' சிறப்பு நிகழ்ச்சி 1942 ஆம் ஆண்டு முதல் தொடக்கி வைக்கப்பட்டது.
    
* அதிரையில் 31-11-1952 பகலில் ஒரு புயலும், 31-11-1955 இரவில் ஒரு புயலும், 22-12-1964 மற்றும் 24-12-1964 அன்று ஒரு பெரும்புயலும் அடித்து, அதிரையின் பொருளாதாரத்தையே அடியோடு மாற்றிப் போட்டுவிட்டது!  (இதனால்தானோ என்னவோ, நவம்பர், டிசம்பர் மாதங்கள் அதிரைக்கு ஆபத்தான மாதங்களாகும் என்று கருதப்படுகின்றன.)
    
* 25-6-1949 அன்று 'காயிதெ மில்லத்' இஸ்மாயீல் சாஹிப் மர்ஹூம் அவர்களால் 'காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி' திறந்து வைக்கப்பட்டது.
    
* 5-7-1955 அன்று, அதே 'காயிதெ மில்லத்' அவர்களால் காதிர் முகைதீன் கல்லூரியும் தொடங்கி வைக்கப்பட்டது.
    
* முதன்முதலாக அதிரையில் (நிலக்கரியில் ஓடும்) பேருந்து வசதி 1942 ஆம் ஆண்டு முதல் தொடங்கிற்று.
    
* 30-7-1939 அன்று அதிரையில் இஸ்லாமிய மாநாடு நடந்தது.  அதில் புதுக்கோட்டை திவான் கலீபுல்லா அவர்களின் தலைமையில்,  அறிஞர் அண்ணா, ஈ.வெ.ரா. பெரியார், 'அஞ்சா நெஞ்சன்' பட்டுக்கோட்டை அழகிரி, அதிரை ஷெய்குனா ஆலிம், மஹ்தூம் ஆலிம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
    
* இங்குள்ள அரசு மருத்துவ மனை 11-4-1954 இல் அப்போதையத் தமிழக அமைச்சர் பக்தவத்சலம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
    
* 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' 1920 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  இன்னும் செயபட்டு வருகின்றது.
   
* 'சமுதாய நல மன்றம்' 1955 ஆம் ஆண்டில் தொடக்கம் பெற்றது.  

(இம்மன்றத்தின் செயல்பாடுகள் பற்றித் தனிக் கட்டுரை இடம்பெறும்.)
Enhanced by Zemanta

15 comments:

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

* அதிராம்பட்டினம் புகைவண்டி நிலையம் 1-4-1938 முதல் இயங்கத் தொடங்கியது.

* இதே நாளன்றுதான் அதிரையின் வீதிகளில் மின்சார விளக்குகள் எரியத் தொடங்கின.//

முட்டாள் தினம் என்று சொல்லப்படும் ஏப்ரல் ஒன்றாம் தேதி துவக்க பட்டதால்தான், புகைவண்டி விசயத்திலும் மின்சாரம் விசயத்திலும் ஏமாற்றப்பட்டு வருகிறோமோ???

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹா அரிய தகவல்கள் :::

* 25-6-1949 அன்று 'காயிதெ மில்லத்' இஸ்மாயீல் சாஹிப் மர்ஹூம் அவர்களால் 'காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி' திறந்து வைக்கப்பட்டது.

* 5-7-1955 அன்று, அதே 'காயிதெ மில்லத்' அவர்களால் காதிர் முகைதீன் கல்லூரியும் தொடங்கி வைக்கப்பட்டது.

* 30-7-1939 அன்று அதிரையில் இஸ்லாமிய மாநாடு நடந்தது. அதில் புதுக்கோட்டை திவான் கலீபுல்லா அவர்களின் தலைமையில், அறிஞர் அண்ணா, ஈ.வெ.ரா. பெரியார், 'அஞ்சா நெஞ்சன்' பட்டுக்கோட்டை அழகிரி, அதிரை ஷெய்குனா ஆலிம், மஹ்தூம் ஆலிம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

* இங்குள்ள அரசு மருத்துவ மனை 11-4-1954 இல் அப்போதையத் தமிழக அமைச்சர் பக்தவத்சலம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

* 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' 1920 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இன்னும் செயபட்டு வருகின்றது.

* 'சமுதாய நல மன்றம்' 1955 ஆம் ஆண்டில் தொடக்கம் பெற்றது.
-------------------------

இவைகளை திரட்ட எந்தப் புத்தகத்தை புறட்ட வேண்டுமென்று யோசித்ததில்லை, தொடருங்கள்....

Shameed said...

அதிரையில் 31-11-1952 பகலில் ஒரு புயலும், 31-11-1955 இரவில் ஒரு புயலும், 22-12-1964 மற்றும் 24-12-1964 அன்று ஒரு பெரும்புயலும் அடித்து///

புயல் அடித்த தேதியில் என்ன ஒரு ஒற்றுமை இந்த ஒற்றுமை நம்மிடம் இல்லையோ என்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது .

crown said...

ஒற்றுமை இல்லாவிட்டால் சமுதாயத்தில் புயல் தான் சேதம் தான்.

அஹமது இர்ஷாத் said...

ரொம்ப உபயோகமான,தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி ஹிதாயத், புதிய பதிவுகள் தாமதம் ஏன் ?

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் said...

அபுஇபுறாஹிம்,

தம்பி ஹிதாயத், புதிய பதிவுகள் தாமதம் ஏன் ?"

காக்காமார்களின் கட்டுரைகள்... அவப்போது நாமும்!
இன்ஷாஅல்லாஹ்.

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்

Abu Khadijah said...

//தம்பி ஹிதாயத், புதிய பதிவுகள் தாமதம் ஏன் ?"//

அதிரை வரலாற்றுக்கு தளத்திற்கு கிடைத்த வெற்றியின் ரகசியமே அந்த தாமதம் தான்... என்ன புரியலையா? புரியலைன தளத்தின் உரிமையாளரிடமே கேட்டு கொள்ளுங்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Adirai Express, 19 September 2010 23:55
//தம்பி ஹிதாயத், புதிய பதிவுகள் தாமதம் ஏன் ?"//

அதிரை வரலாற்றுக்கு தளத்திற்கு கிடைத்த வெற்றியின் ரகசியமே அந்த தாமதம் தான்... என்ன புரியலையா? புரியலைன தளத்தின் உரிமையாளரிடமே கேட்டு கொள்ளுங்கள் ///

தம்பி உங்க "Adirai Express"(ion) நல்லாதான் இருக்கிறது அதை தெரிந்தே வைத்துக் கொண்டு அங்கே கேட்டகச் சொல்லிட்டீங்களே, நீங்களே சொல்லியிருக்கலாம், பரவயில்லை "உரிமையாளர்" சொல்லட்டுமேன்னு காத்திருப்போம்.

adirai pamaran said...

??????????,
??????????????!
adirai pamaran. Ksa.

adirai pamaran said...

yannaaga solla variha?

Unknown said...

வரலாற்று நாயகர்களே, வரலாற்று உரிமையாளர்கள்;
தள இயக்குனர்கள், நெறியாளர்களே நாம்!

"அதிரை வரலாற்றுக்கு தளத்திற்கு கிடைத்த வெற்றியின் ரகசியமே அந்த தாமதம் தான்..."

உண்மை சொன்னீர் Adirai Express!

aa said...

//அதிரையில் 31-11-1952 பகலில் ஒரு புயலும், 31-11-1955 இரவில் ஒரு புயலும்....//
அது சரி! நவம்பருக்கு 30 நாள் தானே. அப்புறம் எப்படி 31-11 சாத்தியாமானது. வரலாற்றை பதியும்போது அதிக கவனம் தேவை!

Labels

TOP