Loading...
Thursday 7 October 2010

அதிவீரராமபாண்டியன் அதிராம்பட்டினத்தை ஆட்சிசெய்திருப்பாரா? அதிரை ஹிதாயத்

அதிவீரராமபாண்டியன் அதிராம்பட்டினத்தை ஆட்சிசெய்திருப்பாரா என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் முதலில் அதிவீரராமபாண்டியன் காலத்தில் பாண்டியர்களின் நிலையென்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்:

பாண்டியர்களின் நிலை?

தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர்கள் என்று மூன்று குலத்தைச் சேர்ந்தோர் பிரதானமாக அரசாண்டுள்ளனர். அவர்களில் பாண்டியர்கள் மிகவும் தொன்மையானவர்; நீண்ட காலம் பதவி வகித்தவராவர் அவர்களின் வரலாற்றை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஆராய்வர்.

அவை:

1) சங்க காலப் பாண்டியர் (கி.பி. முதல் மூன்று நூற்றாண்டுகள்)

2) கடுங்கோன் வழி வந்த பாண்டியர் அல்லது முதல் பாண்டிய பேரரசு (சுமார் கி.பி. 550 முதல் 950)

3) இரண்டாம் பாண்டிய பேரரசு (கி.பி.1190 முதல் 1310)

4) பிற்காலப் பாண்டியர் (கி.பி.1310க்குப் பிறகு) (1)

அதிவீரராம பாண்டியன் (கி.பி.1564 -1606) காலகட்டத்தை சேர்ந்தவராவார். என‌வே, பிற்கால பாண்டியர் கி.பி.1310க்குப் பிறகுள்ள வரலாற்றைக் காண்போம்:

கி.பி 1317 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது மதுரையை விசய நகரத் தலைவன் வீரகம்பணன் கைப்பற்றிய‌ பிறகு பாண்டிய நாட்டை அவர்களின் பிரிதிநிதியைக் கொண்டு ஆட்சி செலுத்தினர்.

மதுரை நாயக்கர் வம்சத்தினர் விசய நகரத்தின் பிரதிநிதியாய் இருந்தனர்.

பாண்டிய மரபினர் மீண்டும் மதுரையை கைப்பற்ற முடியவில்லை. பதிநான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து அவர்களது கால்வெட்டுகள் பாண்டிய நாட்டின் வட பகுதிகளில் காணப்படவில்லை.

திருநெல்வேலி, தென்காசிப் பகுதிகளில் மட்டுமே இவர்களது கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.ஆகவே அக்காலம் முதற்கொண்டு இவர்கள் தங்களது தலை நகரான மதுரையை இழந்து தென்பாண்டி நாட்டிற்குச் சென்றுவிட்டனர்.

திருநெல்வேலியைத் தலைநகராகக் கொண்டு ஒரு குறுகிய நலப்பரப்பை மட்டும் ஆண்டு வந்தனர். விசய நகரப் பேரரசர்களும் பழம் பெரும் பாண்டிய மரபினரை அகற்றிடாமல் அவர்களைத் தொடர்ந்து சிறிய பகுதியில் இயங்க அனுமதித்தனர்.(2)
பதினான்காம் நூற்றாண்டிலிருந்து கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டு இறுதிவரை இவர்கள்(பாண்டியர்) தென்பாண்டிய நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்தனர்.

அவர்கள்:
1) சடை வர்மன் பராக்கிரம பாண்டியன்(கி.பி.1422 1461)

2) அழகன் பெருமாள் குலசேகரன் அல்லது ஸ்ரீ வல்லபன் (கி.பி.1429,30 1473)

3) ஸ்ரீ வல்லபன் (கி.பி.1534 43)

4) முதலாம் அதிவீரராம பாண்டியன் (கி.பி. 1564 1606)

5) வரதுங்க ராமன் (கி.பி. 1588 1609)

6) வரமுகுண ராமன் குலசேகரன் (கி.பி. 1615...) (3)

இவைத்தான் பிற்கால பாண்டியர்களின் அரச நிலை; இவர்கள்தான் எந்த தனியதிகாரமும் இல்லாத குறுநில அதுவும் வேற்று மன்னர்களின் கீழ் கொளரவ பதவியாக இருந்தவர்கள். இல்லை; இருக்க வைக்கப்பட்டவர்கள்!

இவர்கள் எப்படி இன்னொரு நிலத்தை கைப்பற்றி அரசாண்டிருக்க முடியும்?
அதுவும் யார் தங்ககளை 'சிறு ஊர் தலைவராக'(மன்னர்கள் என இவர்களை சொல்ல முடியுமா? தெரியவில்லை!) இருக்க அனுமதித்தார்களோ அவர்களுக்கு எதிராகவே படை திரட்டும் அளவு பாண்டியர்கள் ஒன்றும் அரசியல் தெரியாதவர்கள் அல்ல.

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் பல நூறு மைல்கள் தாண்டி,தங்கள் எஜமானார்களுக்கு எதிராக‌ படையெடுத்து வந்து போரிடும் அளவு அப்படியென்ன அவசியம்,கட்டாயம் அல்லது முக்கியத்துவம்?

அதிராம்பட்டினத்தில் தங்க மலையோ, முத்து,பவழ குவியலோ கிடையாது.
அதிராம்பட்டினத்தில் கிடைக்கும் தேங்காய்,உப்பு,கடலுணவு இவைகளுக்காக படை திரட்டியிருப்பான் என்பதை ஒத்துக்கொள்ள மாட்டேன்.

தமிழார்வம் உள்ளவன் என்பதை வைத்துப்பார்த்தாலும் அதுவும் பொருத்தமில்லை. எந்த வரலாற்றாய்வாளரும் சொல்லவும் இல்லை; ஏற்றுக்கொள்ளவுமில்லை!

இப்படி பாண்டியர் வரலாற்று நிலையிலும் அதிவீரராம் பாண்டியன் நிலையிலும் அதிராம்பட்டினதினத்தை அரசாண்டான் என்பது எந்த வடிகட்டிய பொய்யான கர்பனை என்பதை தவிர வேறில்லை!


உசாதுணை நூல்கள்:

(1) பாண்டியர் வரலாறு பக்கம் 1

(2) பாண்டியர் வரலாறு பக்கம் 137

(3) பாண்டியர் வரலாறு பக்கம் 138

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து





அதிராம்பட்டினத்திற்கும் அதிவீரராம பாண்டியனுக்கும் சம்மந்தமில்லை என்று வரலாற்றின் அடிப்படையில் உண்மையான முடிவுக்கு நாம் வந்துவிடோமே, அப்படியானால் அதிராம்பட்டினம் என்று எப்படி பெயர் வந்தது என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

அதற்கான உண்மையான‌ வரலாற்றாதாரம் நம‌து முன்னோர்களால் காலம் காலமாக வாழையடி வாழையாக கர்ண பரம்பரைக் கதையாக சொல்லப்பட்டுவந்தவகைகளை வரும் பதிவுகளில் பார்ப்போம்.
                அதுவரை உங்கள் கருதுக்களை சொல்லுங்கள்

14 comments:

இப்னு அப்துல் ரஜாக் said...

அதிரையின் முன்னோர்கள் முஸ்லிம்களே.அவர்கள் அரபு நாட்டிலிருந்து வந்தவர்கள்,இந்து பெண்களை மணமுடித்து இங்கேயே தங்கி விட்டனர்.இதுதான் உண்மை வரலாறு என ஆவணங்கள் கூறுகின்றன

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஓ இதைச் சொல்லாமல் சொன்னததால்தான் தம்பி ஒ.அ. அங்கே உடனே கருத்திருந்தார் "கர்ண பரம்பரை" பற்றி.. தம்பிமார்களா இருவரிடமும் நல்லத் திறனும் ஆராயும் உறுதியும் இருக்கு ஒன்றாக இதனைச் சேகரித்து எங்களுக்காக பதியலாமே !

Shameed said...

தமிழகத்தை சேர, சோழ, பாண்டியர்கள் என்று மூன்று குலத்தைச் சேர்ந்தோர் பிரதானமாக அரசாண்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் அண்ணன் தம்பிகள்தானே?
இவர்கள் எப்படி மூன்று குலத்தை சார்ந்தவர்களாகஇருக்க முடியிம் ? கொஞ்சம் விவரம் தாருங்கள்.

Unknown said...

shahuhameed said:"இவர்கள் மூவரும் அண்ணன் தம்பிகள்தானே? இவர்கள் எப்படி மூன்று குலத்தை சார்ந்தவர்களாக இருக்க முடியிம்? கொஞ்சம் விவரம் தாருங்கள்."

வரலாற்று அடிப்படையில், இம்மூன்று இனத்தவரும் தமிழர்கள்தாம் என்று இருந்தாலும், மனோநிலை, பண்பாடு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றில், இம்மூவரும் வேறுபட்டே இருந்தனர். மதுரைப் பகுதியில், 'அண்ணேய்!' என்று விளிப்பதும், திருநெல்வேலிச் சீமையில், 'அண்ணாச்சி' என்று விளிப்பதும், தஞ்சை மாவட்டத்தின், 'அண்ணே' என்ற விளியும், குமரிப் பகுதியின், 'அண்ணா' என்ற விளியும், அவ்வப்பகுதிகளை ஆண்ட ஆட்சியாளர்களின் சிறிதே வேறுபட்ட வழக்கைப் பொருத்து அமைந்த மொழி / இனப் பாகுபாடுகளாகும். மற்றபடி, இவ்வாட்சியாளர்கள் மூவரும் தமிழர்கள்தாம். ஆனால், நீங்கள் கூறுவது போன்று, இவர்கள் சகோதரர்கள் அல்லர்; மூன்று இனத்தவர்களே.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

படிக்கிற காலத்தில ஒரு வாத்தி(யார்)கூட இந்த மாதிரி விளக்கம் சொல்லித் தரவில்லை... அதிரை வரலாறு (வலைப்பூ) ஆலமரமாக வேர் ஊண்ட வேண்டும் இன்ஷா அல்லாஹ்...

crown said...

Blogger அபுஇபுறாஹிம் said...

படிக்கிற காலத்தில ஒரு வாத்தி(யார்)கூட இந்த மாதிரி விளக்கம் சொல்லித் தரவில்லை... அதிரை வரலாறு (வலைப்பூ) ஆலமரமாக வேர் ஊண்ட வேண்டும் இன்ஷா அல்லாஹ்...
-----------------------------------
இதற்கான "வேர்"வை அதிகம் சிந்தித்தான் இந்த தகவல்கள் கிடைத்ததை அறிவேன் .

Shameed said...

நான் இத்துனை நாட்களாக இவர்கள் சகோதரர்கள் என நினைத்து இருந்தேன்,

உங்கள் விவரமான விளக்கம் கண்டு தெளிவுற்றேன்.நன்றி.

தாரிக் said...

அதிவீரராமபாண்டியன் அதிரையை ஆளவில்லை என்ற‌ இப்போதுதான் விடைகிடைத்துள்ளது

நாகூர் அனஸ் said...

மிகவும் பயன் உள்ள தளம்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Paynetsda said...

அதிவீரராமபாண்டியன் அதிரையை ஆளவில்லை என்ற‌ இப்போதுதான் விடைகிடைத்துள்ளது

முனைவர் ந.இராஜேந்திரன் said...

நன்று

Unknown said...

உங்கதகவல் தவறு, என்னுடைய தம்பி VST தோட்டத்தில் அடிவீரராமபாண்டியன் கோட்டை மேடு (சுண்ணாம்பு கல் மலை )இருந்தது, அதில் கோட்டை நமகோடி சித்தர் கோயில், மதுரைவீரன் கோயில் இருந்து அந்த கோட்டை பகுதி முழுசா அகற்ற Amma travels bay ல் முடிவு எடுத்து அதன் வரலாறு தெரியாமல் அழித்து VST இடம் 2000ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டு விட்டது. அந்த இடத்தில் தற்போது கோயில் மட்டும் உள்ளது. இது அதிரை திராவுப்பதை அம்மன் கோயில் வட கிழக்கு பகுதியில் நஸ்வினி ஆற்று வடக்கு பகுதியில் உள்ளது பேக்கிலி காடு வாழை கொல்லை க்கு இடை பட்ட இடம். அங்கு சிவன் கோயில் இருந்துள்ளது அது மாலிக் கபூர் படை எடுத்து வந்த போது அழிந்து உள்ளது. மேலும் அதிராம்பட்டினம் என்பது அந்த தமிழ் மன்னன் மேல் உள்ள அறிவை போற்றும் வகை காரண, நினைவை போற்றும் வகையில் உண்டான பெயர்
அவர் அந்த பகுதியை ஆண்டு இருக்கலாம். இல்லை என்றால் 1200 ஆண்டுகள் முற்பட்ட மன்னர்களாக இருக்கலாம். நிச்சயம் 16ம் century இருக்க வாய்ப்பு இல்லை முஸ்லீம் 1600 வாக்கில் தமிழ் நாட்டுக்கு வந்தவர்கள்.

Unknown said...

குடை மேல் இருந்து குஞ்சுரம் இருந்தோறும் நடை மெலிந்து நண்ணிலும் நன்னுவர் என்ற அதி வீர பாண்டியர் வாக்கு போல் அந்த இடம் கோட்டை அழிந்து புல் மேடு ஆக உள்ளது. இந்த பாடல் முழுசா எழுதாமல் விட்ட தற்கு மன்னிக்கவும். சுந்தர், தம்பிக்கு நல்லவன் கோட்டை.

Labels

 
TOP