முஃதஸிலா கொள்கையும் எகிப்திலிருந்து தமிழகம் திரும்பிய முஸ்லிம்களும்!
ஹஸன் பஸரி(ரஹ்) அவர்களின் உற்ற நண்பராக இருந்த வாஸில் இப்னு அதா கருத்து வேற்றுமையின் காரணமாக ஹஸன் பஸரி(ரஹ்)அவர்களிடமிருந்து, பிரிந்து தம்முடன் அம்ர் இப்னு உபைதாவையும் இன்னும் பலரையும் சேர்த்துக்கொண்டார்.
இவரையும் இவர் கொள்கை, கோட்பாடுகளையும் ஏற்று செயல்பட்டவர்களை முஃதஸில்லாக்கள் என்னும் பெயரைக்கொண்டு இஸ்லாமிய உலகம் அழைத்தது. முஃதஸில்லா என்னும் அரபு சொல்லுக்கு பிரிவினைவாதிகள் என்று பொருள் கொள்ளலாம்.
* இறைவனுக்கும் மனிதனுக்கும் எவ்வித ஒற்றுமையும் கற்பிக்ககூடாது. இறைவனுக்கு தாத் உண்டேயன்றி அவனுக்கு ஸிஃபத்துகளை கற்பிக்ககூடாது. அது, ஷிர்க் இணைவைப்பாகும்.
* இறைவனுடைய சொற்கள், படைக்கப்பட்டவை அனைத்தும் அழிந்துவிடுவது போன்று அவையும்(சொற்கள்) அழிந்துவிடும்.
* ஒரு விசுவாசி மிகப்பெரும் பாவம் செய்து அதற்குப் பாவமன்னிப்பு கோராது இறந்துவிடில் அவன் நிரந்தரமாகத் தண்டனையை நுகர வேண்டியதுதான். எனினும் இறை மறுப்பவனுக்கு அளிக்கப்படும் தண்டனையை விட இவனுக்கு அளிக்கப்படும் தண்டனை இலேசாக இருக்கும்.
* இறைவனை மறுமையில் மனிதன் தன் கண்ணால் பார்க்க இயலாது. அப்பொழுது இறைவன் ஒருவித உணர்வை உண்டு பண்ணுவான் அதன் மூலமாக அவனைப் பார்க்க இயலும்.
* திருக்குர் ஆன் இறக்கப்படவில்லை; படைக்கப்பட்டது.
என்பனப்போன்ற பல கொள்கைகளை கொண்டிருந்தனர். இவர்களில் 24 உட்பிரிவுகள் இருந்ததாக ஷர்ஹுல் மவாகிஃப் என்னும் நூல் வழி அறிய முடிகிறது.
எகிப்து நாட்டை ஆட்சி செய்த-அப்பாஸியக் கலீபாக்களான அல்மாமூன்,அல்முஃதஸிம்,அல்வாதிக் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் இந்த பிரிவினைவாதிகளான முஃதஸிலாக்கள் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தனர்.
இதன் காரணமாக முஃதஸிலா கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்களை பெரும் கொடுமைக்கு ஆளாக்கினர். எதிர் பிரச்சாரம் செய்தோர் நாடுகடத்தப்பட்டார்கள். பெருங்கொடுமைக்கு ஆளானவர்களில் ஒருவர்தான் இமாம் அஹ்மது இப்னு ஹம்பல்(ரஹ்) அவர்கள்.
கலீபா அல்வாதிக் பெரும் கொடுமை இழைத்த பொழுது கெய்ரோ அருகில் முகத்தம் மலையடிவாரத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகளுமாக 224 பேர் பக்ரீ குடும்பத்தை சேர்ந்த முஹம்மது கல்ஜி என்பாரின் தலைமையில் மரக்கலமேறி கி.பி.875ல் (கி.பி. 842ஆம் ஆண்டு என்ற கருத்தும் உள்ளது) இந்தியாவின் கீழ்க்கடற்கரையில் உள்ள ஒரு பகுதியில் வந்திறங்கினர். அந்த இடத்தை பழைய காயல் என்று வழங்கப்படுகிறது.
எகிப்திலிருந்து தமிழக கடற்கரையோரம் வந்த இந்த முஸ்லிம்கள் தமிழகத்திற்கு அந்நியர்களல்ல. என்பதை அறிய மீண்டுமொருமுறை முந்திய கட்டுரையை வாசிக்கவும்.
உசாதுணை குறிப்பு:
மர்ஹூம் எம்.ஆர்.எம்.அப்துற்றஹீம் அவர்கள் எழுதிய இஸ்லாமியக் கலை களஞ்சியம், இன்னும் பல வரலாற்று குறிப்புகள்.
ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து
தொடரும்...
4 comments:
அது என்னப்பா உசாதுணை குறிப்புகள்?
தமிழக முஸ்லிம்கள் அந்நியர்கள் இல்லை என்பதை உங்கள் கட்டுரை உணர்த்துகிறது.பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு ஈஜிப்ட் சென்றவர்கள்தான் மீண்டும் திரும்பி இருக்கிறார்கள். சி. முத்துக்குமார்,கே.கே.நகர், சென்னை.
தமிழக முஸ்லிம்கள் அந்நியர்கள் இல்லை என்பதை உங்கள் கட்டுரை உணர்த்துகிறது.பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு ஈஜிப்ட் சென்றவர்கள்தான் மீண்டும் திரும்பி இருக்கிறார்கள். சி. முத்துக்குமார்,கே.கே.நகர், சென்னை.
Dears Adirai Bros,I heard from my Grand Mother said Maraikayar almost living in the sea shores who returns from North Africa,still the particular community living in this area is called Merocca is a real fact.By.Aboobakkar.Nadutheruvan.
Post a Comment