Loading...
Tuesday 20 July 2010

'எங்கிருந்து வந்தோம்? அபு அஸீலா

நமதூர் அதிரை எக்ஸ்ப்ரஸ் வலைப்பூவில் சகோதரர். அபு அஸீலா அவர்கள் 'எங்கிருந்து வந்தோம்? அதிரையின் வரலாற்றைத் தோண்டும் முயற்சி'யாக‌ எழுதியதை நன்றியோடு பதிகிறோம்.

அத்துடன் அதற்குண்டான பின்னூட்டங்களையும் இங்கே தருகிறோம். உங்களின் புதிய பின்னூட்டங்களையும் இங்கே தொடருங்கள்...

அதிரை-அதிராம்பட்டினம்-அதிவீர ராமபாண்டியன் பட்டணம்-செல்லி நகர் மற்றும் அராபிய வணிகர்களால் அதிரமி என்றெல்லாம் வரலாற்றில் அறியப்படும் நமதூர் குறித்த அரிய பல சுவாரஸ்யமான தகவல்கள் இணையதளங்களில் காணக்கிடைக்கின்றன.


சோழத் தலைநகர் தஞ்சாவூரின் காவிரிக் கடைமடை பகுதியிலிருக்கும் நம் அதிரையை, அதிவீரராம பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஆண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. அதிவீரராம பாண்டியன் ஆட்சிசெய்த அதிரையின் எல்லைகள் எது? அதன் தலைநகர் எது? மன்னன் தவிர ஏனைய அமைச்சர்கள் யாவர்? அவர்கள் எப்பகுதியைச் சாந்தவர்கள்? என்ற குறிப்புகள் இன்றி வாய்வழிக் குறிப்புகளாகவே நமதூர் வரலாறு அறியப்படுகிறது.


சைவசமயத்தைச் சார்ந்த சோழமன்னர்களின் தலைநகரின் ஒரு கடைகோடி கடற்கரைப் பகுதியை நேரெதிரியான பாண்டிய மன்னன் ஆண்டதாகச் சொல்லப்பட்டாலும் அதிரையின் பெரும்பான்மையினர் முஸ்லிம்களாக இருப்பது தொடர்பின்றியும் ஒன்றுக்கொண்டு முரண்பாடாகவும் உள்ளது.


நமதூரின் வரலாறு அதிவீர ராம பாண்டியனிலிருந்து தொடங்குகிறதா? அல்லது அதற்கும் முன்பு யாரேனும் ஆண்டுள்ளார்களா? மொகலாயர்களின் எல்லைக்குள் வராத தஞ்சைப் பகுதியில் முஸ்லிம்கள் எப்படி தோன்றினார்கள்?


அதிரை வரலாற்றைத் தேடும் அதேவேளையில் அதிரை முஸ்லிம்களின் பூர்வீகத்தையும் தேட வேண்டிய அவசியம் எழுகிறது. நமதூர் வரலாற்றை நானறிந்து வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு அறிஞர்கள் தொகுக்க முனைந்துள்ளார்கள். அவர்களில் ஆஸ்பத்திரித் தெரு லக்கி ஹாஜியார் மர்ஹும். அப்துல் ரஹ்மான் ஹாஜியார் (ஸலாமத் பதிப்பகம்) மற்றும் முஸ்லிம் லீக் பிரமுகர் K.A.S.அப்துல் ரஹ்மான் (முழு விபரம் நினைவில் வரவில்லை)ஆகியோர் ஓரளவு தகவல்களைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.


நமதூர் முஸ்லிம்கள் எகிப்திலிருந்து காயல்பட்டணம் வழியாக அதிரையில் தங்கிச்சென்ற பரம்பரையைச் சார்ந்தவர்களாக மட்டும் இருக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்குமென நினைக்கிறேன். அதேபோல் ஆதிஅதிரையின் தொடக்கம் நமதூரின் கடற்கரைத் தெரு,பிறகு மரைக்காயர் பள்ளி, துலுக்கா பள்ளி தற்போதைய தக்வா பள்ளி அமைந்துள்ள நடுத்தெரு பிறகு காலியார் தெரு (ஹாலியார் தெரு?)மற்றும் மேலத்தெருவரையிலான பகுதியே அதிரை முஸ்லிம்களின் பகுதிகளாக இருந்திருக்க வேண்டும் என்பது என் துணிபு.


அதிரை குறித்த ஆவணப்படமொன்றை அதிரைடாட்காமில் முன்பு காணும் வாய்ப்புகிடைத்தது. அதில் அதிரையின் ஆதிகுடிகள் எந்தத்தெருவைச் சார்ந்தவர்கள் என்பது குறித்து மாறுபட்ட தகவல்களை M.S.T.தாஜூதீன் காக்கா மற்றும் M..M.S.அப்துல் வஹ்ஹாப் (சாச்சா) சொல்லக்கேட்டேன். (மூத்தோர்களின் வாய்வழித் தகவல்களையும் திரட்டி ஆவணப்படுத்த வேண்டியதும் நம் வரலாற்றைத் தொகுக்கவும் அதுகுறித்த இணைய தேடல்களுக்கும் உதவும். உள்ளூரிலுள்ள அதிரை எக்ஸ்ப்ரஸ் பங்களிப்பாளர்கள் நமதூர் மூத்தகுடி மக்களைப் பேட்டிகண்டு யூடூபில் போட்டு வைக்கலாமே.)


இலங்கையுடன் நெருங்கிய வர்த்தத் தொடர்பு கொண்டிருந்த நமதூர் வணிக பிரமுகர்கள் (மரைக்காயர் அல்லது மரக்கல ராயர்) இலங்கை சம்மாங்கோடு பகுதியில் இறையில்லம் (சம்மாங்கோடு பள்ளிவாசல்) கட்டி நிர்வகித்தும் வந்துள்ளனர். இவையன்றி மலேசியாவில் (பினாங்கு, மலாக்கா) போன்ற பகுதிகளிலும் முக்கியப் பிரமுகர்களாக இருந்துள்ளதாகச் சொல்லக்கேட்டு இருக்கிறேன். இவர்களின் சந்ததியினரிடம் இதுகுறித்த புகைப்படங்கள், சுவடிகள் மற்றும் ஆவணங்கள் கைவசமிருக்கலாம் என்று நினைக்கிறேன்.


இப்படியாக வாய்வழிச் செய்தியாக அறிந்துள்ளவற்றை அதிரை எக்ஸ்ப்ரஸ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதன்மூலம் நமதூரின் வரலாறை ஓரளவு உறுதி படுத்த்திக்கொள்ளலாம் என்று நம்புகிறேன். இடையிடையே இணைய தளங்களில் நமதூர் பிரமுகர்கள் குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளத் திட்டமுள்ளது.


தனிநபராகச் செய்வதைவிட கூட்டாகச் செய்தால் மேலும் சிறப்பாகத் தொகுத்தளித்து நம்இளைய சந்ததியினரின் வசதிக்காக ஆவணப் படுத்தலாம் என்பதால் ஆர்வமுள்ள பங்களிப்பாளர்கள் இணைந்து செய்ய அழைக்கிறேன்.


எதிர்கால வரலாற்றைத் தீர்மானிக்கும் இணைய ஆவணமாக விக்கிபீடியா போன்ற கலைக் களஞ்சிய இணையதளங்களில் நம்மைப்பற்றி யாரும் எதை வேண்டுமானாலும் பதிவுசெய்து வைக்க முடியும்.நமதூர் குறித்த வரலாற்றுத் தகவல்களைத் தொகுத்து ஆவணப்படுத்தும் திட்டமிருப்பதால் தயவு செய்து மேலதிக விபரம் அறிந்தோர் பின்னூட்டங்களாகப் பகிர்ந்து கொள்ளவும்.


அபூஅஸீலா

யாசிர், March 28, 2010 2:35 PM

wow....very interesting article posted by Abu-Aseela.... dear vistors ..provide more info if you have....as i heard...there were too much immigrants from Kayalpattinam to adirai and Dhala Maraikayar was (correct me if i am wrong ) one of them was the first immigrant
அன்புத்தோழன், March 28, 2010 2:42 PM

நல்ல முயற்சி...... அவசியம் செய்ய வேண்டிய ஒன்று..... எதிர்கால நமது சந்ததிகளுக்கு குழப்பமான வரலாற்றை விட்டு செல்வதென்பது நம் மக்களை மை இருட்டில் நாமே தள்ளிவிடுவதற்கு சமம்.... தங்களின் இப்பணி சிறக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரியட்டுமாக... ஆமீன்....

எனது பெரியப்பாவகிய புலவர் பஷீர் அஹமது அவர்கள் சொல்ல நான் கேட்ட சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்... அதிராம்பட்டிணத்தின் பெயர் காரணமாக சொல்லப்படும் அதிவீர ராமபாண்டிய பட்டிணம் என்பதில் சிறு குழப்பம் இருப்பதாகவே தோன்றுகிறது..... ஏனனில் அவர்களில் ஊடே பெற்ற செவி வழி செய்தி படி... அரேபிய தீப கற்பத்தில் செங்கடலுக்கு அருகில் வாழும் மக்களை "ஹல்த்ரமைன்" என்று அலைக்கபடுவதாகவும்... வர்தகத்தொடர்பின் வழியாக நமது ஊரில் குடியேறிய நமது முன்னோர்களான ஹல்த்ரமைன் மக்கள் வாழத்தொடங்கிய கடல் பகுதியாக நமதூர் இருந்தமையால் அதிராம்பட்டினமாக பிற்காலத்தில் பெயர் மாற்றம் பெற்றதாக கேட்ட ஞாபகம்..... எனினும் இவற்றை உறுதி செய்துகொள்ளவும் இன்னும் பல அரிதான தகவல்கள் அவர்களிடம் இருந்து பெறமுடியும் என்பதாலும்.... தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் புலவர் பஷீர் அஹமது (பெரியப்பா) அவர்களை தொடர்பு கொண்டால் மேலும் பல சுவையான வரலாற்று பின்னணிகளை அறிய முடியும் (ஆதரங்களுடன்) என்ற எனது கருத்தினை பதிகிறேன்....
Diary, March 28, 2010 3:00 PM

கடற்கரை தெரு அல்லது மேலத்தெரு முத்த அப்பாகளிடம் விஷயம் கிடைப்பதற்கு வாய்புள்ளது..காஜா ஒளியுள்ளா அல்லது மேலத்தெரு ஒளியுள்ளா (பெயர் தெரியவில்லை) இவர்களின் கட்டு கதையை தவிர நம் அப்பாகளிடம் வேறு எதுவும் கேட்டதுயில்லை, பன்னா மீனுக்கு கட் ஆவுட் எடுத்து அதன் வரலாரை பரைசாட்டும் இளைஙர்கள் இதில் கவனம் செலுத்தலாம் மேலும் அங்குவுள்ள தவ்கித் சகோதர்கள் (ஓர் இறை கொள்கை) முயற்சி செய்யளாம்... எனெனிள் இந்த இருத்தெருவின் சார்பாக ஆவனப்படத்தில் எம். எம். எஸ் தவிர வேறு யாரும் இல்லை
Dubai Man, March 28, 2010 3:16 PM

dear diary..here is some avlia name

just for fun

அவ்லியாக்களின் பெயர்களைப் பாரீர்!
1. பீடி மஸ்தான் (பீமா பள்ளி)
2. கட்டி மஸ்தான் (பொறையார் )
3. சட்டி மஸ்தான் (பொதக்குடி)
4. சங்கிலி மஸ்தான் (கோயம்பத்தூர்)
5. மோனகுரு மஸ்தான் (ஊமைப்பிள்ளை அவ்லியா-தொண்டி)
6. குரங்கு மஸ்தான். தஞ்சை
7. அனுமான் அவ்லியா தஞ்சை
8. அணிப்பிள்ளை அவ்லியா தஞ்சை
9. பாஸ்போர்ட் அவ்லியா தஞ்சை
10. கப்ரடி அவ்லியா (திருவிதாங்கோடு)
11. காட்டு பாவா அவ்லியா (தக்கலை அருகில், பேட்டை )
12. வேப்ப மரத்து அவ்லியா (கோட்டார்)
13. மாமரத்து அவ்லியா (நீலவெள்ளி)
14. மரத்தடி அவ்லியா (கோட்டார் )
15. மரக்கட்டை அவ்லியா (சென்னை ராயபுரம்)
16. மோத்தி பாவா (சென்னை,அண்ணா சாலை)
17. மிஸ்கீன் அவ்லியா நெல்லை
18. பச்சை அவ்லியா நெல்லை
19. பக்கீர் மஸ்தான். நெல்லை
20. பிச்சை அவ்லியா (திலி பேட்டை)
21. அப்துர் ரஸ்ஸாக் மஸ்தான். (திருவனந்தபுரம்)
22. மலுக்கர்; மஸ்தான் (மஞ்சேரி, கேரளா)
23. மைதீன் பிச்சை அவ்லியா (பொட்டல் புதூர்)
24. ஆத்தங்கரை அவ்லியா (ஆத்தங்கரை)
25. அக்கரைப்பள்ளி அவ்லியா (குளச்சல்)
26. அம்பலத்து அவ்லியா (திருவிதாங்கோடு)
27. மக்கட்டி லெப்பை அவ்லியா (திருவிதாங்கோடு)
28. காத்தாடி அவ்லியா (ஆளூர்)
29. பல்லாக்கு அவ்லியா (கீழக்கரை)
30. ஸந்தூக் அவ்லியா திருவை)
31. கால்துட்டு அவ்லியா (காயல் பட்டணம்)
32. சாலை சாஹிப் அவ்லியா (புது ஆயங்குடி)
33. நிர்வாண அவ்லியா(மஜ்தூப் வலி)(காயல் பட்டணம்)
34. ஹயாத் அவ்லியா (கோட்டார்)
35. ஹயாத்தே அவலியா (திட்டு விளை,
36. பிரேக் ஷா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
37. ஹாஸ் பாவா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
38. கேத்தல் பாவா அவ்லியா (புதுப்பட்டினம்)
39. பட்டாணி சாஹிப் அவ்லியா (திலி பேட்டை)
40. கோட்டு மூஸா அவ்லியா (கூத்தா நல்லூர்)
41. மொட்டைப பக்கீர் அவ்லியா (சிவகங்கை)
42. கோதரிசா அவ்லியா (பொட்டல் புதூர் அருNயுள்ள மலை)
43. அப்பா ராவுத்தர் அவ்லியா (கூத்தா நல்லூர்)
44. படேஷா ஹஸ்ரத் அவ்லியா (மஞ்சக்குப்பம்)
45. வண்ணம் தீட்டும் அவ்லியா (நக்ஷபந்த் அவ்லியா)
46. கோயுன் பாபா அவ்லியா (ஆடுகளின் தந்தை, துருக்கி)
47. தக்கடி அப்பா அவ்லியா (பஸீர் வலி மேலப்பாளையம்) புலிகள்
பாம்புகளிடையே வந்து காப்பாற்றியவர்)
48. ஜஹான்ஷா அவ்லியா (கொடிக்கால் பாளையம்)
49. ஒட்டகாஸ் அவ்லியா (உடன்குடி)
50. காட்டப்பா அவ்லியா ”
51. புளியடி அவ்லியா ”
52. காட்டானை அவ்லியா (வேதாளை)
53. கப்படா சாஹிப் அவ்லியா (காரைக்கால்)

அப்பப்பா அவ்லியாக்களில் தான் எத்தனை எத்தனை ரகங்கள்! எத்தனை எத்தனை வகைகள்!

இவர்களெல்லாம் எப்படி முளைத்தார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?

இவர்கள் யார் ? எந்த ஊர் ? எப்போது பிறந்தார்கள் ? எப்போது இறந்தார்கள் ?

இங்கே எதற்கு வந்தார்கள் ? இவர்கள் மக்களுக்காக செய்த சேவைகள் என்னென்ன?

மார்க்கத்திற்காக என்ன தியாகம் செய்தார்கள் ?சமுதாயம் அடைந்த பயன்கள் என்ன ?

இவர்கள் செய்த சாதனைகள் என்ன ?

இவர்கள் குர்ஆன் நபிவழியில் வாழ்ந்தவர்களா?

என மக்களைக் கேட்டால் மக்கள் திருதிரு என்று முழிக்கிறார்கள்.
அபூ அஸீலா - துபாய், March 28, 2010 3:21 PM

யாசிர்,

பெரும்பாலான செய்திகள் வாய்வழி வரலாறாகவே பதியப்பட்டுள்ளன. பூர்வகுடி என்பதற்கு ஆவணச்சான்று மூலமே உறுதி செய்யமுடியும். நம் மக்களின் சிலர் வெளிர் நிறமாகவும் சிலர் கருத்த நிறமாகவும் இருப்பதன் மூலம் நம் முன்னோர்கள் தமிழர்-அராபியர் கூட்டுக்கலவையாக இருந்திருக்கவும் மரபணு ரீதியில் வாய்ப்புள்ளது.

தாத்தா-பாட்டிகளிடம் கதைகேட்டுத் தூங்கிய சமகால தலைமுறையினர் ஓரளவு கடந்த நூறாண்டுகளின் வரலாற்றை பல்வேறு கதைகளின் மூலம் அறிந்திருப்பர். (கோனா ஆலிம்சா வகையறா பற்றி எங்கள் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன்)

தற்போதெல்லாம் கதை கேட்டுத் தூங்கும் குழந்தைகள் இருப்பார்களா என்று தெரியவில்லை.TOM & JERRY, POWER RANGERS,HULK,BEN 10 வீடியோ DVDயைப் பார்த்துக்கொண்டுதான் பலர் குழந்தைகள் தூங்கச் செல்கின்றனர்.

அவரவர் தெரிந்ததைப் பகிர்ந்து கொண்டு நம் பூர்வ சரித்திரம் காண்போம்.
அபூ அஸீலா - துபாய், March 28, 2010 3:26 PM

அன்புத்தோழன்,

புதுமலர்கள் புலவர் பஷீர் அவர்களின் உறவினரா நீங்கள்? (நானும் தூரத்து உறவு முறை என்று நினைக்கிறேன்) எப்படியோ புலவரப்பாவிடமிருந்து வாய்வழித் தகவல்களைப் பதிவு செய்து தொகுத்தளித்தால் இம்முயற்சி வெற்றிபெற உதவக்கூடும். தங்கள் சார்பில் இதைச் செய்ய முடியுமா?
அபூ அஸீலா - துபாய், March 28, 2010 3:31 PM

தம்பி Diary,

என்னா Diaryam இருந்தால் நமதூர் வரலாற்றைப்பற்றிப்பேசும் இப்பதிவில் பண்ணா மீன் வரலாற்றைப் பேசுவே?
(தொட்ர்ந்து லூட்டியடித்தால் ரசிகர் மன்ற பொறுப்பிலிந்து நீக்கப்படுவாய்!

Dubai Man,
உங்கள் காப்பி பேஸ்ட் லிஸ்டிலுள்ள அவ்லியாக்கள் எல்லாம் அதிராம்பட்டினமா? பதிவுக்குத் தொடர்புடைய தகவலைத் தந்துதுவினால் உங்களுக்கும் ஒரு தர்......வேண்டாம் ஆமா!
ADIRAI TODAY, March 28, 2010 5:48 PM

எனக்குத் தெரிந்து தமிழ் அவ்லியாக்கள் என்பவர்கள் அனேகமாக நல்ல தொழுகையாளியாக மார்க்கம் பேணி நடந்திருப்பார்கள் அன்பின் காரணமாக அவர்கள் இறந்தபின் முதலில் ஒரு கொட்டகையைப் போட்டு பிரியமானவர்கள் அங்கேயே ஓதிக்கொண்டு தங்கியிருந்திருப்பார்கள் பின் அது தர்கா வடிவமாகிவிட்டது என்று நினைக்கிறேன். நிற்க..அடுத்து முக வடிவை வைத்து எகிப்தியர்கள் வம்சாவளிதான் இங்குள்ள திராவிடப் பெண்களுடன் மணம்புரிந்து நம்மை ஈன்றிருக்கலாம் என்பதில் எனக்கு முழு உடன்பாடு இல்லை.ஆனால் காயல்பட்டினத்தாருக்கும் எகிப்தியருக்கும் முகவெட்டில் சில ஒற்றுமை தெரிகிறது.(எனக்கு ஏற்பட்ட சில நேரடி அனுபவம்)ஆனால் நம்மூரார்கள் முகவெட்டு ஒரே மாதிரி இல்லை. நம் ஊர் மக்களுக்கு முகம் குடும்பதுக்கு குடும்பம் மாறுபடுகிறது. ஏமன், மொராக்கோ மக்களின் முகச்சாடையும் நமக்கு அடிக்கிறது.சில கலாச்சாரமும் ஒத்துப்போகிறது. (உ-ம்) வேட்டி கட்டுவது போன்ற மற்ற பழக்க வழக்கங்களும். ஆப்ரிக்காவில் உள்ள ஜான் ஜிபார் என்ற நாட்டில் மக்க்ள் கருப்பர்களாக இல்லை. தமிழ் முஸ்லீம் முகச்சாயலை ஒத்திருக்கும். சம்சா, முட்டை ரொட்டி,புடவை,தென் இந்திய முகம் நல்ல கலர் போன்ற எல்லா அம்சங்களும் அவர்களிடம் இருக்கிறது. (தேடவும்: கூகுள்/டிஸ்கவரி/ட்ராவெல் அன்ட் லிவிங்/யூட்யூப்) நம் முன்னேர்கள்(தந்தை வழி) அரப் வம்சம் என்பது சந்தேகமில்லை. எந்த நாட்டின் வம்சாவளி என்பதுதான் கேள்வி?
அபுஅஃப்ஸர், March 28, 2010 6:43 PM

//கடற்கரைத் தெரு,பிறகு மரைக்காயர் பள்ளி, துலுக்கா பள்ளி தற்போதைய தக்வா பள்ளி அமைந்துள்ள நடுத்தெரு பிறகு காலியார் தெரு (ஹாலியார் தெரு?)மற்றும் மேலத்தெருவரையிலான பகுதியே அதிரை முஸ்லிம்களின் பகுதிகளாக இருந்திருக்க வேண்டும் என்பது என் துணிபு./


நெசவுத்தெருவில் பெரிய சங்கம் ஒன்று உள்ளது, இதன் வரலாறையும் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். இதுவும் ஒரு சமுதாயக்கூடமாக இருந்துள்ளது.

நல்லமுயற்சி சகோதரரே, நிச்சயம் இதுக்கு விடை தேடவேண்டிய நேரம்
அதிரை அஹ்மது, March 28, 2010 8:20 PM

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும். இது ஒரு நல்ல முயற்சி. எனக்குத் தெரிந்தவரையில், சில ஆண்டுகளுக்கு முன், தம்பி ஹிதாயத்துல்லாஹ் (தஸ்தகீரின் சகோதரர்) இத்துறையில் தம்மால் இயன்ற ஆய்வில் ஈடுபட்டு, ஒரு தொகுப்பை உருவாக்கி என்னிடம் பார்வையிடத் தந்தார். நானும் பார்வையிட்டு, மேலும் சில தகவல்களைச் சேர்க்கப் பரிந்துரைத்து அவரிடம் திருப்பிக் கொடுத்தேன். அவருக்கு வரலாற்று ஆய்வாளரான பேரா. செ. திவான் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் ராஜா முஹம்மது போன்றோரின் தொடர்பும் உண்டு. அவருடைய ஆய்வையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு பரிந்துரை செய்கின்றேன்.
crown, March 28, 2010 9:21 PM

அஸ்ஸலாமு அலைக்கும்.அஹமது சாச்சாவின் நினைவூட்டலுக்கு நன்றி நானே இது விசயமாய் பதியலாம் என்று இருந்தேன் சுய விளம்பரம் என்றாகிவிடுமோ?(அவ்வாறு ஆக்கிவிடுவார்களே)என்பதால் தம்பி ஹிதாயத்துல்லா தொகுத்துள்ள ஒரு பட்டிணத்தின் கதை தொகுப்பு ஏறக்குறைய நம் ஊரின் வறலாறு சொல்வதாக உள்ளது.தம்பி கூட சில காலம் முன் அதைப்பற்றி வெளியிட இருந்தார்.வேலைப்பழுவின் காரணமாக முடிவிக்காமல் போயிற்று.
MohamedThasthageer.
crown, March 28, 2010 9:42 PM

அஸ்ஸலாமு அலைக்கும். நண்பன் அபூஅசீலாவின் முயற்சிக்கு வாழ்துக்கள் முன்பே இது பற்றி எழுத ஆரம்பதில்தான் அதிரை உண்மையினுடன் கருத்து போர் பற்றி எரிந்த்ததாலும் தெருப்பிரட்சனை பற்றி சிலர் எழுப்பியதாலும் அவர்(ன்)மனதுக்கு சோர்வு வந்து அதை விட்டுவிடார்(ன்).ஒருவிசயம் பற்றி சொல்ல வரும் போது வேறு விசயம் பற்றி ,பற்றினால்(அறுவை)அதன் விசயத்தை பதியமுடியாமல் போகிவிடும் வாய்ப்பு உள்ளதால் தயவு செய்து யாரும் அவரின் நோக்கத்தில் இடையூறு செய்யாமல் தமக்கு தெரிந்த தகவல் குறித்து வுதவினால் அவனால் இந்த சீரிய பணியை சிறப்பாய் செய்து முடிக்கமுடியும்.ஜமா()ய்ங்க!
தாஜீதீன், March 29, 2010 12:27 AM

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.

இன்னும் தெருப் பாகுபாடில் சிக்கி கொண்டிருக்கும் அதிரையில், மிகவும் கவணமாக செய்திகள் சேகரிக்க வேண்டும்.

சில விசையங்களில் அதிரையில் இன்னும் சில இடங்களில் கலிமா சென்னவர் என்று பார்ப்பதை விட எந்த தெருக்காரர் என்பதைத் தான் பார்க்கிறார்கள். இது தெருவாசிகள் வேவ்வேறு வம்சாவளிகள் என்பதால் வந்ததா வினையா? இல்லை வியாபாரம், பொருளாதாரத்தால் வந்ததா? தைரியசாலிகள், கொழைகள் என்பதால் வந்ததா? யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கள்.

உண்மை வரலாறு தெரிஞ்சாவது அதிரை மக்களிடம் இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கும் பிரிவினைகள் கொஞ்சம் விட்டு விலகும் என்று நம்புவோம்.
newdreamworld, March 29, 2010 2:04 AM

அட இது நம்ம ஆலு ஹிதாயத்துல்லா வின்

"ஒரு பட்டிணத்தின் கதை"

கதை கூடிய சீக்கிரம் முழு தொகுஇப்ப வெளிவரும்று என்று நம்புகிறேன்.
harmys, March 29, 2010 3:01 AM

i wanna a share some information about adirai. i think it was 1999 or 2000 in ramzan malar from dinamani i got some information.according to that people of adirai,kayal,keezakkarai,thalacheri(kerala),pazaverkaadu(near to chennai) are came from madina.700 hundred people were deported from one KALIFA due to some reason.we could see some similarities to those people likewise in marriage etc.in addition the people of pazaverkaadu still they are using the same instrumental to see time and they dont get marry with other areas people like in our town.
brother anbuthozan mentioned the word HATHARMINE.i heard that word the people hatharmine still they are living in gulf but they dont have any boundries.they are well rich in economically and business.hathramines mostly they are doing gold business.those people in gulf could get more info about them.specially in jeddah and medina because hathramines mostly dominated in those area.
அதிரைpost, March 29, 2010 7:19 AM

அஸ்ஸலாமுஅலைகும்(வரஹ்)

தன் சொந்த வரலாற்றை தெரிந்துகொள்ளாத சமுதாயத்தை அழித்துவிடுவது மிக எளிது.என்பார் மால்கம் X அவர்கள்.

இந்த அடிப்படையில் அதிராம்பட்டின வரலாற்றை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அது ஒரு தொகுப்பாகவே வந்தது!

அதற்கு "ஒரு பட்டினத்தின் கதை" என பெயரிடப்பட்டு வரலாற்று ஆய்வாளரான பேரா. செ. திவான், தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் ராஜா முஹம்மது மற்றும் கேப்டன் அமீர் அலீய் போன்றோர் மதிப்புரையும் வாத்துரையும் தந்தார்கள்.அதிரை அஹ்மது காக்கா அவர்களும் பல ஆலேசனைகளையும் தந்தார்கள்.


இந்த "ஒரு பட்டினத்தின் கதை"இலவச புத்தகமாகும் முயற்சியில், இதையே அடிப்படையாக வைத்து" ஒரு பட்டினத்தின் சொல்ல மறந்த கதை" என நம்முடைய அனைத்துவிசயங்களையும் நாவலாகவும் எழுதிவருவதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது!

இதன் புத்தக வடிவத்தில் உள்ளது; அதனை ஸ்கேன் செய்து அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை போஸ்டில் கூட விருப்பம்தான்.
ஆனால், அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் அனைத்தும் அரசின் தொல்லியல் துறை ஏற்றுக்கொண்டவைகள். இதனை மேற்சொன்ன வரலாற்றாய்வாளர்களும் உண்மை படுத்தினார்கள்.

எனவே, அதன் தகவல்களும் தரவுகளும் 100 சதம் உண்மை!

அதன் அடிப்படையில் சொல்கிறேன்.
நாம் இதுவரை நம்பிவரும் தகவல்கள் முற்றிலும் பொய்!

குறிப்பாக:
1)அதிவீர ராமபாண்டியனனுக்கும்(காலம்:1422‍/1461) அதிராம்பட்டினத்திற்கும் .1 சதம் கூட தொடர்பில்லை!
2)கடற்கரைத்தெரு அதிரையின் முதல் தெருதான்.
ஆனால், அதிரை உருவான காலம் (1180 ஆம் ஆண்டு) கடல் எங்கிருந்தது...?
3)அதிரையின் முதல் பள்ளிவாசல் தஹ்லா மரைக்காயர் கட்டிய மரைக்காயர் பள்ளி!(காலம் 1180)
4)இன்றைய கடற்கரைத்தெருதான் முதல் தெரு, அங்குதான் நம்மவர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நெடிய தூரத்தில் எப்படி பள்ளியை கட்டுவார்கள்.
கடற்கரை தெரு பள்ளி 1453ல் தான் ஜீவப்ப நாயக்கர் என்னும் அரசனால் நிரம்ப இடம் கொடையளிக்கப்பட்டு கட்டப்பட்டது!
5)அதிவீர ராம பாண்டியன் 1422/1461 ஆண்டு அவன் பிற‌ப்பதற்கு 242 வருடங்களுக்கு முன்பே அதிரை‍ அபாப் பட்டினம் உருவாயிற்று!
இன்னும் உள்ளது...முழு புத்தகமாக இன்ஷாஅல்லாஹ் விரைவில் பார்ப்போமே!

தயவு செய்து வரலாற்றை வரலாறாக பார்க்கவும்!


வரலாற்று நூலும் நாவலும் இலவசம்தான் இன்ஷாஅல்லாஹ்!

மல்லிப்பட்டினம் சகோதரர்களுக்கு,

மல்லிப்பட்டினத்தி உண்மை பெயர் துலுக்கன் வயல் ஏன் மாறியது அல்லது மாற்றியது வரலாற்று ஆதாரம் வேண்டுவோர் தொடர்புகொள்ளவும்.


அன்புடன்
ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்.
'ஒருவனின்' அடிமை, March 29, 2010 7:43 AM

அப்துர் ரஹ்மான் பட்டினம் என்பதே பிறகு மருவி அதிராம் பட்டினம் என் ஆனது,பிறகு வந்த பொய் வரலாற்று ஆய்வாளர்கள் திருத்தி(து)வெளியிட்டுவிட்டனர்.பட்டினத்தின் கதை வெளிவந்தால் உண்மை வெளிவரும்,உடனடியாக வெளிக் கொணர்ந்தால் நலம்.
அபூ அஸீலா - துபாய், March 29, 2010 12:08 PM

Crown பிரதர்ஸ் நமதூர் வரலாற்றைத் தொகுக்கத் திட்டமிட்டிருப்பது கூடுதல் மகிழ்வளிக்கிறது.தொல்லியல் மற்றும் வரலாற்றாய்வாளர்களின் துணையுடன் செய்வது மேலும் உறுதிப்படுத்தும்.

//4)இன்றைய கடற்கரைத்தெருதான் முதல் தெரு, அங்குதான் நம்மவர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நெடிய தூரத்தில் எப்படி பள்ளியை கட்டுவார்கள்.//

மனிதர்கள் நீர்நிலைகள் மற்றும் கடல் பகுதியிலிருந்துதான் பரவினரென்பதே மானுடவியல் வல்லுநர்கள் கூற்று. சான்றாக நைல்,சிந்து நதிக்கரைகளில் இருந்தே மனித இனம் தோன்றியதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

அவ்வகையில் சீனாவுடன் வர்த்தக உறவு கொண்டிருந்த எகிப்தியர்கள் இந்தியா வழியாகச் செல்லும்போது கேரளாவில் சிலகாலம் தங்கி மீண்டும் மேற்குக் கடற்கரைகள் வழியாகவே பயணித்தனர். அவ்வகையில் கடல் பிரதேசமான காயல்பட்டணத்திலிருந்து நமதூருக்கும் வந்திருப்பர்.

நெடுங்கடல் பயணம் செய்தவர்களுக்கு கடற்கரை தெருவிலிருந்து நடுத்தெரு ஒன்றும் தூரமல்ல. நமதூரில் மேலத்தெரு பழைய ஜும்மா பள்ளியே முதல்பள்ளியாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. நடுத்தெரு மரைக்காயர் பள்ளியில் ஜும்ஆ நடந்ததாக எவ்வித சான்றுமில்லை. நடத்தப்பட்டிருந்தால் ஏன் நிறுத்தப்பட்டது. நானறிந்து தற்போதைய மேலத்தெரு ஜும்ஆ பள்ளியை நடுத்தெரு ஆலிம்ஷாஅப்பா குடும்ப வகையினரே பலஆண்டுகள் நிர்வாகம் செய்து வந்தனர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். எப்போது நிர்வாகம் கை மாறியது?ஏன் மாறியது என்பதெல்லாம் தெரியாது.

அதிரை அஹமது காக்கா, ஜமீல் காக்கா போன்ற மூத்தவர்கள் இதை உறுதி செய்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

இன்னொரு பக்கம் கரையூர் தெரு செல்லியம் கோவிலுக்கும் செல்லி நகர் என்பதற்குமுள்ள தொடர்பையும் ஆய்ந்தால் ஏன் செல்லிநகர் அதிவீர ராமன்பட்டினமாக மாறியது என்பதும் தெரியவரும்.

அதிராம்பட்டினத்தை அதிரஹ்மான் பட்டினம் என்று பெயர்மாற்றம் செய்யுங்கள்.இல்லாவிட்டால் இங்கு ராமன் பிறந்தானென்று சொல்லி பிற்காலத்தில் பிரச்சினைகள் எழும் என்று மர்ஹூம் பழனிபாபா நமதூரில் முன்பு பேசினார்.

மதராஸ்=சென்னையாக மாறும்போது அதிராம்பட்டினம் அர்ரஹ்மான் பட்டினமாகவும் மாறலாம். :-)
அதிரைpost, March 29, 2010 4:09 PM

//4)இன்றைய கடற்கரைத்தெருதான் முதல் தெரு, அங்குதான் நம்மவர்கள் வாழ்ந்தார்கள் என்றால் நெடிய தூரத்தில் எப்படி பள்ளியை கட்டுவார்கள்.//

மனிதர்கள் நீர்நிலைகள் மற்றும் கடல் பகுதியிலிருந்துதான் பரவினரென்பதே மானுடவியல் வல்லுநர்கள் கூற்று. சான்றாக நைல்,சிந்து நதிக்கரைகளில் இருந்தே மனித இனம் தோன்றியதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். //

சகோதரர் அபு அஸீலாவின் கூற்று உண்மை!
அதிரை (அபாப் பட்டினம்) உருவாகிய காலகட்டத்தில் இன்றைய ஜாவியால் வரை கடற்கரை இருந்ததாக தக்க சான்றுகள் உள்ளது.

அபாப்பட்டினத்தின் முதல் குடிமகன் தஹ்லா மரக்காயர் அவர் மனைவி ஆமினா உம்மா, அவர்களின் 7மகன்தான் அப்துர்ரஹ்மான்.

இன்றைய மேலத்தெரு ஜும்மாப்பள்ளி 1638 ஆண்டில் செய்யது அப்துல் காதிர்(ரஹ்) என்ற மகுதூம் சின்னினா லெப்பை அவர்களால் கட்டப்பட்டது!

தஹ்லா மரைக்காயர் அவர்கள் காயல் பட்டினத்திலிருந்து வரவில்லை கீழக்கரையிலிருந்துதான் வந்தார்கள்.
கீழக்கரைதான் உண்மையான காயல்!
இதனை இம்பீரியல் கெஜட்டீர் ஆப் இந்த்தியா (தொகுதி 15 பக்கம் 195 ) பதிவு செய்துள்ளது!


தொடரும்...
அஹமது இர்ஷாத், March 29, 2010 4:55 PM

அதிரை போஸ்ட் நம்ம ஊர் விவரங்களை தனிப்பதிவாக போடலாமே.
Diary, March 29, 2010 6:02 PM

கடற்கரை தெருவில் இருந்துதான் நடுக்கூடில் அதவது நடுத்தெருவுக்கு கூடிபெயர்ந்தார்கள் என்ற ஒரு கருத்துயிருக்கு

//அதிரை (அபாப் பட்டினம்) உருவாகிய காலகட்டத்தில் இன்றைய ஜாவியால் வரை கடற்கரை இருந்ததாக தக்க சான்றுகள் உள்ளது.
//

ஜாவியால் வரை கடற்கரை இருந்ததாக சான்று இருந்தால் நடுத்தெருதனே கடற்கரை தெருவாக இருந்துதிற்க வேன்டும்....அதிரை போஸ்ட் விளக்கம் தேவை
thuvilahana, March 29, 2010 7:33 PM

அஸ்சலாமு அலைக்கும் அதிராம்.பட்டிணம் பூர்வீகம் அல்லது,வரலாறூ படிக்கவேசந்தோசம்மாக‌இருக்கிர, இந்தமுயர்சி தொடரட்டும் இன்சாஅல்லாஹ்./ சுமார்.20வருடத்துக்கு முன்பு எங்கல் அப்பா(தாத்தா)சொன்ன.ஒருதகவல் தஞ்சவூர்மஹராஜ நம்மவூர்வழியாக மல்லிபட்டிணம்கோபுரம்கட்டுமாணாவேலையை,பார்வை.இட‌போய்கொன்டு,இருந்தாரம் அப்பராஜாக்கு.கடுமையானதணீர்தாகம் ஏர்பட்டதாம் தம்முடன்வந்தசிப்பாய்கலை அனுப்பி பக்கத்தில் ஏதாவதுகுழம்.இருக்குதா,என்ருபாத்துவரசொன்னாராம் பக்கத்தில் ஒரு.சிரிய,குட்டைஒன்ருகிடக்குது என்ருசிப்பாய்கல் சொன்னார்கலாம் ராஜாஉடனெஇரங்கிபோய் அந்தகுட்டையில்.தண்னிகுடித்தாராம்தண்ணீர்நன்ராஇருந்தாம் தாகம்தனிந்தாம் உடனெஅதிகாரிகலிடம் இந்தகுட்டையை,குழம்மாகவெட்ட,உத்தர‌வுவிட்டாரம் அந்தகுழம்தான் மண்னபன்குழம்மாம்(மனப்பகுழம்)
அதிரை அஹ்மது, March 29, 2010 9:30 PM

சற்று முன் தம்பி ஹிதாயத்துல்லாவுடன் பேசிக்கொண்ட விவரங்களின்படி, அதிரை எக்ஸ்பிரஸின் இந்த முயற்சியில் தமது ஆய்வையும் பகிர்ந்துகொள்ளச் சம்மதம் தெரிவிக்கிறார். அத்துடன், இதற்கான ஆய்வாளர் குழுவைத் தெரிவு செய்து கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வது நன்று என்ற கருத்தையும் வெளியிட்டார். நானும், என் பங்குக்கு, நம்மூர் மூத்த அறிஞ்ர்கள் சிலரையும், ஆர்வமும் அறிவும் கொண்ட இளம் மார்க்க அறிஞர் சிலரையும் பரிந்துரை செய்துள்ளேன். இன்ஷா அல்லாஹ், இம்முயற்சியில் ஒரு தெளிவான 'அதிரைப் பின்புலம்' கிடைத்து, அதனை ஆவனப்படுத்தவும் வாய்ப்புண்டு என நம்புகின்றேன். அல்லாஹ்வின் துணையை நாடுவோம்!
crown, March 29, 2010 11:17 PM

இன்சா அல்லாஹ் அதி விரைவில் ஆதி தெரிய இருப்பது மிக்க ஆவலைத்தூண்டுகிறது.அல்லாஹ் துணைனிற்பானாக.ஆமின்.
அதிரைpost, March 30, 2010 5:19 AM

//ஜாவியால் வரை கடற்கரை இருந்ததாக சான்று இருந்தால் நடுத்தெருதனே கடற்கரை தெருவாக இருந்துதிற்க வேன்டும்....அதிரை போஸ்ட் விளக்கம் தேவை//
இன்ஷாஅல்லாஹ் "ஒரு பட்டினத்தின் கதை" வரும்போது,எல்லா வினாக்களுக்குமான விடை கிடைக்கும்!
இன்று பார்க்கும்,கேட்கும் அதிரை வேறு வரலாற்று அதிரை வேறு!!
அதனை எல்லாவகையான ஆதரங்களையும் முன்வைத்து பார்க்கும் போதுதான் உண்மையை நாம் உணர்வோம்!
ARH
நம்ம ஊர், March 30, 2010 12:20 PM

எல்லாருமே ரொம்ப எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறார்கள். காலம் கடத்தாம கொஞ்சம் சீக்கிரமா வெளியிட்டா நல்லாயிருக்கும். பிலீஸ்...ரொம்ப சர்பிரைஸ் வானாம்...
முத்துவாப்பா, March 30, 2010 1:00 PM
This post has been removed by the author.
முத்துவாப்பா, March 30, 2010 1:17 PM

தமிழக முஸ்லிம்களை மூன்று வகைகளில் காணமுடிகிறது.

காயல்பட்டிணம்,கீழக்கரை,அதிராம்பட்டினம், தேங்காய்பட்டினம், கோட்டாறு ஆகிய ஊர்களில் வசிக்கும் அராபியர்களை ஒத்த பேச்சு,சமூக,உணவு பழக்க வழக்கமுடைய ஒரு குழுவினர்.

நாகை,புதுவை,முகவை,மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் வாழும் பிற சமயத்து தமிழர்களை ஒத்த பேச்சு,சமூக,உணவு பழக்க வழக்கமுடைய மற்றொரு குழுவினர்.

சென்னை,வேலூர்,கடலூர்,வட மற்றும் தென் ஆற்காடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழும் உருது மொழியும் பேசி ஐதராபாத், வட இந்திய பழக்க வழக்கங்கள் கொண்ட பிரிதொரு குழுவினர்.

இம்மூன்று குழுவினரும் முறையே அராபிய வம்சாவழி,இஸ்லாத்தை ஏற்ற தமிழ்க்குடி, முகலாய வம்சாவழியினராய் இருக்கும் சாத்தியங்களை இக்குழுவினரிடையே காணப்படும் சமுதாய நடவடிக்கைகளிலிருந்து கணிக்க முடிகிறது.

காயல்பட்டிணம் வலைத்தளத்தில் காயல் வரலாறு சுருக்கமாக கிடைக்கிறது.

அதில் சில விஷயங்களை படித்து காயல் நண்பர்களிடம் உரையாடியபோது வியப்பாக இருந்தது.

முடுக்கு என்று சொல்லப்படும் சந்து தொடக்கத்தில் பெண்கள் நடமாட்டத்திற்காகவே இருந்தது. அதில் ஆண்கள் புழங்கக்கூடாது.

தைக்கால் என்பது ஆண் உஸ்தாது அல்லது ஹஜ்ரத் இல்லாமல் முழுவதும் பெண்களே அமல்கள் செய்வதற்கான மஜ்லிஸ்.

இந்த நடைமுறைகளை அறியும்போது அதிரையின் வரலாறு அராபிய-எகிப்திய-காயல் வரலாற்றின் தொடர்ச்சியாக இருக்ககூடும் என்று அனுமானிக்க தோன்றுகிறது.

என்றாலும் வரலாற்றை ஊகங்களின் அடிப்படையில் பதிவு செய்யக்கூடாது. இன்றைய தகவல் புரட்சி யுகத்தில் நமது இளைஞர்களே குழுவாக அமைத்து ஆதாரபூர்வ அதிரையின் வரலாற்றை தொகுக்கும் சாத்தியங்கள் இல்லாமலில்லை.

http://www.kayalpatnam.in/History/kayalhistory.html

பின்னர் பதித்தது:

Crown-பிரதர்ஸின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
அஹமது இர்ஷாத், March 30, 2010 1:25 PM

தமிழ்'ல தெளிவா எழுத இங்கே போங்கள்..

http://www.google.com/transliterate/Tamil
அன்புத்தோழன், March 31, 2010 6:30 PM

அன்புச்சகோதரர் அபூ அஸீலா,
தாங்கள் எங்கள் தூரத்து உறவு முறை என்று அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.... குடும்பத்தில் அனைவரும் நலம் தானே...

//எப்படியோ புலவரப்பாவிடமிருந்து வாய்வழித் தகவல்களைப் பதிவு செய்து தொகுத்தளித்தால் இம்முயற்சி வெற்றிபெற உதவக்கூடும்//

தங்கள் கனிவுடன் கேட்ட இம்முயர்ச்சியை செய்ய இயலாமைக்கு வருந்துகிறேன், தற்போது சவுதி அரேபியாவில் வேலையில் இருப்பதனால்... (மன்னிக்கவும்....)


அதிரையின் வரலாறுகள் அவர்களிடம் ஆதாரப்பூர்வமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.... இதன் விழைவாகவே சில காலம் முன்பு ஐம் என்ற ஒரு அமைப்பை முழுக்க முழுக்க அதிரையின் வரலாற்றுக்காகவே தொடங்க சென்னை மன்னடி பள்ளியில் இதற்கான முயற்சிகளை சில வருடத்திற்கு முன் எடுத்தார்கள் பெரியப்பா.... அப்போது கைகளால் எழுதப்பட்ட குரான் முதற்கொண்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.... நமதூர் முக்கிய பிரமுகர்கள் சிலர் இதில் கலந்து கொண்டு முயற்சியை பாராட்டினாலும்.... மக்களின் சரியான பங்களிப்பின்மை காரணமாக அதன் செயல்பாடுகள் முடங்கி போயிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.... எனினும் இது தொடர்பாக அவர்களை தொடர்பு கொள்ளும் பட்சத்தில் மிகுந்த ஒத்துழைப்பும், வழிகாட்டுதலும் தர தயாராக இருப்பார்கள் என்று நம்புகிறேன்....

இவ்வேளையில் நான் அறிந்த எனது குடும்ப வட்டத்திற்குள்ளான சில விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன்..... அ. மு. க. குடும்பமாகிய எங்கள் குடும்பம் முந்தைய காலகட்டத்தில் வியாபாரத்தையே அடிப்படையாக கொண்டிருந்தார்கள் என்றும்.... எமது முன்னோர்களின் வர்த்தக தொடர்பு அரபு நாடுகள், கொழும்பு, பர்மா, பினாங்கு போன்ற இடங்களுக்கு இருந்ததாகவும், வர்த்தகம் செய்த சான்றுகளாக சில ஒப்பந்த பத்திரங்கள் சில காலம் முன்புவரை அங்குமிங்கும் வீட்டில் கிடந்து அலைந்து கொண்டிருந்ததாக எனது தந்தை சொல்ல கேட்டிருக்கிறேன்..... அன்றைய காலத்திலே டன் கணக்கில் நமதூரிளிருந்து கப்பலில் பர்மாவிற்கு தவுடு ஏற்றுமதி செய்த சான்றுகள் பத்திரப்படுத்தப்படாமல் இழந்துவிட்டோம்.... சென்னையை முதலில் நம் மக்களுக்கு அறிமுகம் செய்ததும் எமது முன்னோர்கள் என கேள்விபட்டிருக்கிறேன்(செவி வழி செய்தியே).... தொடக்கத்தில் கடற்கரை தெருவில் குடியிருந்த எமது குடும்பம், பிறகு தற்போதிருக்கும் தட்டாரத்தேருவுக்கு குடிபெயர்ந்து பெரிய வீடு என்று அழைக்க பெற்ற வீடை கட்ட பர்மாவிலிருந்து தேக்கு மரங்கள் நம்மூருக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டதாகவும் இன்றளவும் செய்திகள் உண்டு.... எங்கள் வீட்டில் இருந்த பெரும்பாலான பழைய கிதாபுகள் அரபுத்தமிழிலே எழுதப்பட்டிருந்தவையாக இருந்ததை நான் சிறுவயதில் கண்டிருக்கிறேன்(எழுத்து அரபியிலும் படித்தால் தமிழாகவும் இருக்கும்)... பெரிய வீட்டின் சொத்து விவரங்களில் மாஸ்டர் பிளானில் கூட அரபுத்தமிழே பயன் படுத்தி இருந்ததை கண்டு ஒருமுறை அதை படம் எடுத்தும் வைத்துக்கொண்டேன் (விவரம் வந்தவுடன்)....

இன்றலும் மக்கத்து அப்பா (எ) அ.மு.க.அப்துஸ் ஷுக்கூர் அப்பா அவர்களின் அப்பா போன்றவர்களின் வரலாறுகள் சொல்லி கொண்டு இருப்பார்கள் அடிக்கடி வீட்டில்.... இவை அனைத்தும் செவி வழி செய்தியாக உலா வந்து கொண்டிருந்தாலும் தெளிவான விளக்கம் புலவர் பஷீர் அஹமது பெரியப்பா அவர்களை ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொண்டால் கிடைக்கும்....
அன்புத்தோழன், March 31, 2010 6:57 PM

//ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்//

முயற்சிகள் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக... ஆமீன்..

செவி வழிச்செய்திகள் பெரும்பாலும் 4 5 தலைமுறையை கடந்து போவதில்லை... ஆதாரபூர்வமான தேடலே உண்மையான வராற்றை பறைசாற்றும்... அந்த வகையில் தொல்பொருள் ஆய்வு போன்றவற்றின் ஆதாரங்கள் கொண்டு தொகுக்கப்படும் "ஒரு பட்டினத்தின் கதை" உண்மையை உலகிற்கு சொல்லும் என்று நம்புவோம் எதிர்பார்ப்புகளுடன்.....
அதிரை அஹ்மது, March 31, 2010 11:32 PM

எதிர்வரும் ஆப்ரல் 2,3 தேதிகளில் நமதூரில் நடக்கவிருக்கும் இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில், "அதிரை ஊரும் பெயரும்" எனும் தலைப்பில் அல்ஹாஜ், தமிழ்மாமணி, புலவர் அ. அஹ்மது பஷீர் அவர்கள் ஆய்வுரை ஒன்றை நிகழ்த்த உள்ளதாக, எனக்கு இன்று (31-03-2010 இரவு 9 மணிக்கு) வந்த மாநாட்டு அழைப்பிதழ் கூறுகின்றது. அவர்களின் ஆய்வுரையையும் கேட்போமே. அந்த ஆய்வரங்கிற்கு, தொள்ளியல் ஆய்வாளர் முனைவர் ராஜா முஹம்மது தலைமை ஏற்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
Naina Mohamed, April 2, 2010 12:50 PM

இதன் நோக்கம் என்னவெனில், நமதூர் பற்றிய அரிய தகவல்களை (கட்டுக்கதை, கப்ஸாக்கள் போக) திரிக்காமல் வரலாற்றை உள்ளது உள்ளபடி கூறி நம் இன்றைய கால, வருங்கால சந்ததிகளுக்கு ஒரு பொக்கிசமாக்க ஒரு சிறு முயற்சி எடுத்துள்ளார். அவர் தற்பொழுது துபையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். (ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்தவர்) கையிலெ பச்செ கொடி இல்லாட்டியும் ப்ரச்சினை இல்லெ ஆரம்பிச்சி உடுங்கெ ஹாக்கா.......



நம்முன்னோர்கள் அரேபியத்தீபகற்பத்தில் உள்ள யமன் தேசத்தில் இருந்து வியாபார நோக்கில் வந்து குடியேறியவர்கள் என்றும் நான் யாரோ, எங்கோ சொல்லக்கேட்டிருக்கின்றேன். நம்மூர் அருகில் உள்ள மல்லிபட்டிணம் மனோராவிலிருந்து தஞ்சை வரை சுரங்கப்பாதை சோழ மன்னனால் கட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்க, பாண்டிய மன்னன் ஒருவன் (அதி வீர ராம பாண்டியன் என்று எல்லாரும் சொல்ராங்கெ) எப்படி சோழ மன்னனின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு ஊரை ஆட்சி செய்ய முடியும்? யாருகிட்டெ காதுலெ பூவு சுத்துறீங்கெ? கேட்பவன் கேனையனாக இருந்தால் எறும்பு கூட ஏரோப்ளேன் ஓட்டுமாமே? கணம் நீதிபதி அவர்களே, நம்மூர் பற்றி இன்னும் பல அரிய தகவல்களை நம் மக்கள் இங்கு அள்ளித்தந்துதவுமாறு ஆசையுடன் கேட்டுக்கொள்கின்றேன்...



கட்டுக்கதைகளும் அதனுடன் கூடி வரும் கப்ஸாக்களும் இங்கு கண்டிப்பாக தணிக்கை செய்யப்பட வேண்டும். அதி வீர ராம பாண்டிய மன்னன் என்ன ட்ரான்சிட் மூலம் நம்மூர் வந்து சென்றானா? எது உண்மையோ அது உண்மையாக்கப்பட வேண்டும். கட்டுக்கதைகளெல்லாம் களைந்தெடுக்கப்பட வேண்டும். நம்மூரை யார் ஆண்டார்கள்? என்பது இங்கு முக்கியமல்ல. நம் முன்னோர்கள் எப்படி நம்மூரில் குடியேறினார்கள்? என்பது பற்றிய உண்மைகளை உலகுக்கு கொண்டு வருவது தான் நம் முக்கியப்பணி.



இங்கு யாரையும் கொச்சைப்படுத்துவதோ அல்லது வரலாற்றை திரித்தெழுதுவதோ நம் நோக்கமல்ல. அதிவீர ராமபாண்டியன் என்ற மன்னன் உண்மையில் நம்ம ஊரை ஆட்சி செய்திருந்தால் அதுவே வரலாறாகட்டும். அதற்கு தெளிவான விளக்கம் தெரிந்தவர்களால் நிச்சயம் தரப்பட வேண்டும். (அந்த காலமாக இருந்தால் இப்படி எழுதி இருக்கலாம். மன்னனின் கடுங்கோபத்திற்கு ஆளாகி அரண்மனையில் தலைகீழாக கட்டித்தொங்கவிடப்பட்டு மூக்கிலும், கண்ணிலும் மூக்குப்பொடி போடும் தண்டனைகளெல்லாம் நமக்கு வேண்டவே வேண்டாம்.)





நம்ம ஊர் மற்றும் அதன் வரலாறு பற்றி வயதானவர்களிடம் கேட்டால் (வழுப்பம்) வண்டி நிறைய செய்திகளை வெற்றிலை/மூக்குப்பொடி எச்சிலுடன் வாரி வழங்குவார்கள். தொல் பொருள் ஆராய்ச்சிக்கழகங்கள் எல்லாம் மூக்கில் கை வைக்கும் அளவுக்கு நம்மூர் பற்றிய ஆராய்ச்சி (யாரையும் கொச்சைப்படுத்தாமல், மனம் புண்படும்படி இல்லாமல்) இனிதே தொடரட்டும்..



மு.செ.மு. நெய்னா முஹம்மது - சவுதியிலிருந்து...
தாஜீதீன், April 2, 2010 1:57 PM

அதிரை வரலாறு புத்தக வடிவில் வெளிவந்தால் ரொம்ப நல்லது, தகவலுக்காக படித்து தெரிந்து கொள்ளலாம். வரலாறு திரட்டிக்கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

இந்த முயற்சி, அதிரைவாசிகளின் உண்மை பூர்விக வரலாறு
நம்முடை ஒற்றுமையின்மையும், சமூக அவலங்களையும் தீர்க்க உதவுமா? நம்பிக்கையோடு எதிர்பார்கிறோம்.

4 comments:

தையூப் said...

ஆஹா நாளுக்கு நாள் வளர்கிறது அல்ஹம்துலில்லாஹ்

தையூப் said...

படங்களும் அருமைப்பா. மாஷாஅல்லாஹ்.

Kavianban KALAM, Adirampattinam said...

//இன்னும் தெருப் பாகுபாடில் சிக்கி கொண்டிருக்கும் அதிரையில், மிகவும் கவணமாக செய்திகள் சேகரிக்க வேண்டும்.

சில விசையங்களில் அதிரையில் இன்னும் சில இடங்களில் கலிமா சென்னவர் என்று பார்ப்பதை விட எந்த தெருக்காரர் என்பதைத் தான் பார்க்கிறார்கள். இது தெருவாசிகள் வேவ்வேறு வம்சாவளிகள் என்பதால் வந்ததா வினையா? இல்லை வியாபாரம், பொருளாதாரத்தால் வந்ததா? தைரியசாலிகள், கொழைகள் என்பதால் வந்ததா? யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கள்.

உண்மை வரலாறு தெரிஞ்சாவது அதிரை மக்களிடம் இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கும் பிரிவினைகள் கொஞ்சம் விட்டு விலகும் என்று நம்புவோம்.
newdreamworld, March 29, 2010 2:04 AM //

இதே கருத்தை நான் சொன்னால் மட்டும் ஏற்கவில்லையே? அது ஏன்?

Sembian said...

கோட்டெபட்டினத்தை ஆண்ட முஹம்மது ஃபத்ல் (ராவுத்தர் அப்பா) போரில் ஷஹீதான பின் அவர்களின் மூதத மகன் (கபீப் முஹம்மது என்ற ஹபீப் முஹம்மது) குடும்பதினர் அதிரையில் குடியேறினர். அவர்கள் தற்போது - க.மு - மு.க.செ - ஒ.க.மு - மு.மு - என்ற குடும்பத்தினராக அதிரையில் வாழ்கிறார்கள்.

Labels

 
TOP