Loading...
Sunday, 18 July 2010

அதிராம்பட்டினத் துறைமுகம்:முனைவர் ராஜா முஹம்மது

தொல்லியல் ஆய்வாளர் முனைவர் ராஜா முஹம்மது அவர்கள் அதிரை பற்றி ஆய்வு செய்தளித்த குறிப்புகள்:
(in Chronological Order)

அதிராம்பட்டினத்தில் சீன நாட்டு வணிகர்கள்: முனைவர் ராஜா முஹம்மது.
அவர்கள் தொகுப்பின் முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி...


* அதிராம்பட்டினத் துறைமுகத்திலிருந்து மரைக்காயக் கப்பல் வணிகர்கள் முத்துப்பேட்டை, நகப்பட்டினம், கீழக்கரை, தொண்டி, காரைக்கால், காயல்பட்டினம் ஆகிய துறைமுக வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

* எலவாப்பிள்ளை மரைக்காயர் என்பவர், பல தோணிகளுக்கு உறிமையாளராக இருந்தார். இவருடைய தோணிகள் வடக்கே மசூலிப்பட்டினத்துடம் வாணிபம் செய்து வந்தன. நாகூர் வணிகர்களுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. (தமிழ்நாடு ஆவணக் காப்பகம், தஞ்சை மாவட்டப் பதிவுகள், தொகுதி 4252).

* கப்பல் வணிகர், கப்பல் உரிமையாளர் முஹம்மது தம்பி மரைக்காயர், 'கப்பல்காரர்' எனவும், இவர் வீடு, 'கப்பல்கார வீடு' எனவும் அழைக்கப்பட்டது. இவருடைய கப்பல்களான 'முஹைதீன் சமதானி' மற்றும் 'சுல்தான் ஐதுருஸ்' ஆகியன காக்கிநாடாவுக்கும் இலங்கைக்கும் சென்றுவந்தன.

* தங்க வாப்பு மரைக்காயர், முஹம்மது மொய்தீன் மரைக்காயர், ஷேக்தம்பி மரைக்காயர், ஹுசைன் மரைக்காயர் ஆகியோர் அதிராம்பட்டினம் துறைமுகத்தில் வாணிபம் செய்துவந்த கப்பல் வணிகர்களுள் குறிப்பிடத் தக்கவர்களாவர்.

* ஆங்கிலேயரின் வணிகப் பதிவேடுகள் முஸ்லிம் வணிகர்கள் இன்னும் பலரின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன.

* இவ்வூரின் மரைக்காயர் வணிகர்களின் வசிப்பிடங்கள் நகர்ப்புறம் சார்ந்த (Urban) தன்மையுடன் விளங்கியதாகவும், அவர்கள் பெரும் மாளிகை போன்ற வீடுகளில் வசித்ததாகவும் ஆங்கிலேயரின் பதிவேட்டுச் செய்திகள் அறிவிக்கின்றன.

* இவ்வூரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், மாற்றுச் சமய மக்களுடன் சமய நல்லிணக்கத்துடனும் நல்லுறவுடனும் வாழ்ந்துவந்தனர்; இன்னும் வழ்ந்துவருகின்றனர்.

* இவ்வூரின் பொருளாதார வளர்ச்சியில் தென்னந்தோப்புகள் முக்கிய இடம் வகிக்கின்றன. 1954 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலின் காரணமாக மரைக்காயர்கள் பலரின் தோப்புகள் அழிந்து, பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது என்று ஒரு செய்தி கூறுகின்றது.

* இவ்வூரின் முஸ்லிம்கள் மீன்பிடித் தொழிலிலும் ஈடுபட்டிருந்தனர்.

* சுமார் 150 ஏக்கர் பரப்பளவுக்கு இங்கு உப்பலங்கள் இருந்தன. அவை அன்றைய ஆங்கிலேயர்களின் ஏகபோக உரிமைக்குள் இருந்ததாக அரசுக் குறிப்பு கூறுகின்றது. 1930களின் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயரின் உப்புவரிக் கொள்கையை எதிர்த்து இவ்வூர் முஸ்லிம்கள் பலர் போராட்டத்தில் பங்குபெற்றுள்ளனர்.

* ஏ.எம்.கே. முஹம்மது ஷேக் மரைக்காயர் அதிராம்பட்டினத்தில் கதர் நெசவு மையம் ஒன்றை 1920களில் தொடங்கி, ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் கதர்த் துணியை விற்பனை செய்தார்.

* எஸ். மொஹிதீன் வாவாத்தம்பி மரைக்காயர் 1930இல் நடைபெற்ற வேதாரணியம் உப்பு சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்.

* தியாகி எஸ்.எஸ். இபுராஹீம், அந்நியத் துணிகள் பகிஷ்கரிப்பு, உப்பு சத்தியாக்கிரஹம் ஆகிய போராட்டங்களில் கலந்துகொண்டு ஆறு மாதம் சிறை சென்றவர்.

* எம்.எம்.எஸ். ஷேக் தாவூது, எஸ்.எம். அபூபக்கர் போன்றவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றோருள் சிலராவர்.

* அதிராம்பட்டினத்தில் திருமணத்திற்குப்பின் பெண்களுக்கு வீடு கொடுக்கும் பழக்கம் உள்ளதால், இங்குள்ள வீடுகளுள் 80 விழுக்காடு வீடுகள் பெண்களின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாக இவ்வூர் ஊராட்சி மன்றப் பதிவேடுகள் மூலம் அறிய முடிகின்றது.

தொகுப்பு: அதிரை அஹ்மது

அதிராம்பட்டினம் குறித்து, இவை போன்ற இன்னும் ஏராளமான செய்திகள் கிடைக்கின்றன. எனவே, இவ்வூரின் பெயராய்வு மேலும் தொடரும்......!

5 comments:

Unknown said...

கருத்தாளர்களுக்கு நன்றி.தொடர்ந்து கருத்துச் சொல்லுங்கள்.கருத்துக்களே ஆக்கங்களை செம்மைப்படுத்தும்.

Anonymous said...

கருத்து என்கிற பெயரில் கும்மியும் அடிப்பார்கள்

Kavianban KALAM, Adirampattinam said...

புதிராய் சிலர்க்கு புரியாதி ருந்த
அதிரை வரலாறு காண்

"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)
அபுதபி (இருப்பிடம்)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு வரலாற்றுத் தொடர் வாசிக்கும் வாய்ப்பு அதுவும் நம் ஊரைப் பற்றி - தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.திரைக்கடல் ஓடி திரவியம் கொண்டுவந்து நம் மண்னையும் , நாட்டையும் செழிப்படைய வைத்தவர்கள் நம் முன்னோர்கள் என அறியும் பொழுது மிக்கச்சந்தோசமும்,பிரமிப்பும் எழுகிறது.தோண்டத்தோண்ட புதையல் கிடைப்பதுபோல் பல அரியத்தகவல்கள் வரும் போலிருக்கிறது.நம் துறைமுகப்பட்டிணத்தை இளையத்தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் இந்த தொல்லியல் தொடர் தொய்வில்லாமல் வர அல்லாஹ் துணை நிற்பானாக.ஆமீன்.

Labels

 
TOP