Loading...
Tuesday, 28 September 2010

அதிரையர்கள் இலங்கையில் கட்டிய பள்ளிவாசல்!

இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள சம்மாங்கோடு பள்ளி என்றறியப்படும் சிவப்பு பள்ளியைக் (RATHU PALLIYA / RED MASJID)கட்டியவர்கள் நமதூர் கோனா ஆலிம் வகையறாக்கள்.

இலங்கையின் வரலாற்றுச்சிறப்புமிக்க கட்டிடங்களில் இப்பள்ளியும் ஒன்று. இதன் முகப்புத்தோற்றம் இலங்கை தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பண்டைய காலத்தில் அதிரையிலிருந்து வர்த்தகர்கள் இலங்கைக்குப் படகில் சென்று வந்துள்ளனர் என்பதும், அப்போது கடலிலிருந்து வெகுதூரத்தில் மேற்கண்ட சம்மாங்கோடு பள்ளி கம்பீரமாகத் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

இதன் டிரஸ்டிகளில் ஒருவராக நமதூர் மர்ஹூம்.முஹம்மது அபூபக்கர் ஆலிம் அவர்களின் மூத்தமகனார் மரியாதைக்குறிய மு.அ.முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம் அவர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: அபுஅஸீலா

2 comments:

cm.தமீஜிதீன்/அமெரிக்கா said...

அதிரை வரலாற்றைப் பார்த்தால் ஆயிரம் தலைப்புகளுக்கு மேல் வரும் போல் தெரிகிறதே.
நான் இதுவரை எந்தவூருக்கும் அவ்வூரின் வரலாற்றை சொல்ல தனி தளத்தை பார்க்கவில்லை. தினமும் தேடி தேடி பார்க்கிறேன். இல்லை என்பதால் கிடைக்கவில்லை.
அதிரை வரலாறு தளத்தை பார்த்து,மற்ற ஊர்காரர்கள் பொறாமைப் படுகிறார்கள்.
ஆட்டை கழுதையாக்கியவர்கள் என்ற நையாண்டி சொல் இனி மாறும்.
இந்த வகையிலும் நான் அதிரைவாசி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

cm.தமீஜிதீன்/அமெரிக்கா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள சம்மாங்கோடு பள்ளி என்றறியப்படும் சிவப்பு பள்ளியைக் (RATHU PALLIYA / RED MASJID)கட்டியவர்கள் நமதூர் கோனா ஆலிம் வகையறாக்கள்.///

தகவல் புதியது, இன்னும் இந்தப் பள்ளியின் உதயம் / அல்லது கட்டியவர்களின் மேல் விபரங்களை சேகரித்து தாருங்களேன் இன்ஷா அல்லாஹ்...

Labels

 
TOP