Loading...
Thursday, 14 October 2010

அதிவீரராமபாண்டியன் காலத்தில் அதிராம்பட்டினத்தை அரசாண்டது யார்?

அதிவீரராமபாண்டியன் காலத்தில் அதிராம்பட்டினத்தை அரசாண்டது யார்? அதிரை ஹிதாயத் 

அதிராம்பட்டினத்தை அதிவீரராம பாண்டியன் அரசாண்டான் என்பது ஒரு கற்பனை  நம்பிக்கை என்பதை தக்க சான்றுகளுடன் முந்தைய கட்டுரைகளில் பார்த்தோம்.
என்றாலும், அதிவீரராம பண்டியன் காலத்தில்(கி.பி.1564 -1606) அதிராம்பட்டினத்தை யார் அரசாண்டது என்பதை ஒரு சிறு குறிப்புகள் மூலம் பார்த்தோமென்றால், இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

தஞ்சை நாயக்கர்கள்:
தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்தனர். இவ்வம்சத்தின் முதல் மன்னன் சேவப்ப நாயக்கன்  என்பவனாவான். சேவப்ப நாயக்கன், விஜயநகரப் பேரரசன் கிருஷ்ண தேவராயனுக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் அமர நாயக்கனாகவும் இருந்த திம்மப்ப நாகக்கனின் மகன்.

   1. 1532 - 1560 செவ்வப்ப நாயக்கர்
   2. 1560 - 1600 அச்சுதப்ப நாயக்கர்
   3. 1600 - 1632 இரகுநாத நாயக்கர்
   4. 1633 - 1673 விஜயராகவ நாயக்கர்

அதிவீரராம பாண்டியன் பிறப்பதற்கு 32வருடங்களுக்கு முன் ஆரம்பித்து,அவன் இறந்து 67 வருடங்கள் வரை தஞ்சை நாயக்கர்கள் ஆட்சியில் இருந்தார்கள்.

அதாவது,1532ஆம் ஆண்டு துவக்கம் 1673ம் ஆண்டு முடிய சரியாக 141 வருடங்கள் தஞ்சை நாயக்கர்களின் ஆட்சி இருந்துள்ளது.

பீஜப்பூர் படையின் தளபதிகளால் ஒருவரான ஏகோஜி எனும் மராட்டியர் தஞ்சை நாயக்க மன்னர் விசயராகவ நாயக்கரை கி.பி. 1675- ஆம் ஆண்டில்
சண்டையிட்டுக் கொன்று, தஞ்சையில் மராட்டியர் ஆட்சி முறையைத் தோற்றுவித்தார். அதுவரை சோழமண்டலத்தில் யாரும் சிறு பகுதியையையும் கைப்பற்றவில்லை!

1675 ஆம் ஆண்டில் துவங்கிய தஞ்சை மராட்டியர் ஆட்சி 1855 ஆம் ஆண்டுவரை தொடர்ந்தது!

தஞ்சை மராட்டியர்கள் / marAttiyars of Tanjore


    * 1675 - 1684 வெங்கோஜி / vegkOji
    * 1694 -1712 ஷாஜி /shAji
    * 1712 - 1728 சரபோஜி /carapOji
    * 1728 - 1736 துக்கோஜி / tukkOji
    * 1737 பாபா சாகேப் / pApa cAkEp, காட்டு ராஜா (ஷாஜி) / kATTu rAjA cAji
    * 1738 சையாஜி / caiyAji
    * 1739 - 1763 பிரதாப் சிங் / pratAp cig
    * 1763 - 1787 துளஜாஜி / tuLajaji
    * 1787 - 1798 அமர்சிங் / amarcig
    * 1798 - 1833 இரண்டாம் சரபோஜி / carpOji II
    * 1833 - 1855 சிவாஜி /civAji

ஆங்கிலயர் ஆட்சி காலத்திலும் தஞ்சை மராட்டியர்கள் எந்த அச்சுறுத்தலுமின்றி  இருந்துள்ளனர். அதன் ரகசியம் இதோ:

"தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா சேதுபாவாசத்திரம் , ராஜாமடம் அருகே சரபேந்திரராஜன் பட்டினம் (மல்லிப்பட்டினம்)*ஊராட்சியில் வங்கக் கடலோரம் , தென்னை மரங்கள் சூழ அமைந்துள்ளது மனோரா என்ற எழில் கோபுரம்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னமாக அகழி கோட்டை , தங்கும் அறைகள் , 9 அடுக்குகள் கொண்ட கலங்கரை விளக்க கோபுரம் போல் விளங்கும் இந்த மனோராவை தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி கட்டினார் .

உலக நாடுகளில் காலனி ஆதிக்கத்தை நிறுவ ஆங்கிலேயர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் , ஏனைய மேலை நாட்டினரும் போரிட்டு கொண்டிருந்த நாளில் ஆங்கிலேயர் ஆட்சி கீழ் தம் அரசை நடத்த வேண்டிய சூழலில் சரபோஜி மன்னர் இருந்தார் . இந்நிலையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வந்த பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட் 1813-ம் ஆண்டு லிப்சிக் என்ற இடத்தில் நடந்த போரில் தோல்வியடைந்தார் .

பின்னர் 2 வது முறையாக 1815-ம் ஆண்டு வாட்டர்லூ போரிலும் தோல்வியடைந்தார் . நெப்போலியனின் லிப்சிக் போர் தோல்வி , ஆங்கிலேயர்களின் நண்பராகத் திகழ்ந்த தஞ்சை சரபோஜி மன்னர் இந்த மனோரா கோட்டையை ஒரு ஆண்டிற்குள் கட்டி முடித்தார் .ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு நிரந்தர நினைவுச் சின்னமாக்கினார் . மனோரா கோட்டையில் தமிழ் , தெலுங்கு , மராட்டி , உருது , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 5 கல்வெட்டுக்கள் உள்ளன .


தமிழ் கல்வெட்டு : இங்கிலீசு சாதியார் தங்கள் ஆயுதங்களினால் அடைந்த செய சந்தோஷங்களையும் , போன பாற்தேயின் தாழ்த்தப்படுதலையும் நினைவு கூறத்தக்கதாக இங்கிலீசு துறைத்தனத்தின் சினேகிதரும் படைத் துணைவருமாகிய தஞ்சாவூர் சீர்மை மகாராஜா சத்திரபதி சரபோஜி மகாராஜா இந்த உப்பரிகையை 1814 கட்டி வைத்தனர் என்று கூறப்படுகிறது."

என்ற வரலாற்று சான்று நம்முடைய அதிராம்பட்டினம் பாண்டியர் கையில் மட்டுமல்ல வேறு யார் அதிகாரத்திலும் செல்லவில்லை என்பதைதான் காட்டுகின்றது.

(*மல்லிப்பட்டினத்தின் ஆரம்பகால பெயர் 'துலுக்கன்வயல்' இதனை அவர்கள் ஆய்வுக்குட்படுத்த வேண்டியது காலத்தின் தேவை!)

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து

8 comments:

crown said...

(*மல்லிப்பட்டினத்தின் ஆரம்பகால பெயர் 'துலுக்கன்வயல்' இதனை அவர்கள் ஆய்வுக்குட்படுத்த வேண்டியது காலத்தின் தேவை!)
---------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.தம்பி சொல்வது போல் அந்த ஊரைச்சேர்ந்தவர்கள் முன்வரவேண்டியது அவசியம்.

மஸ்தூக்கா said...

அதிரை வரலாறு இப்போது தூசு தட்டப்படுவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இத்துனை காலமும் 'சிலரால்' திரிக்கப்பட்ட வரலாறு இங்கே 'அக்கு வேறு ஆணி வேறாக' அலசப்படுவது பாராட்டுக்குரியது. சகோதரர் அதிரை ஹிதாயத் அவர்களின் முயற்சி இந்தத் தலைமுறை அதிரைவாசிகளுக்கு மிகவும் பயன்தரும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கடைக்குட்டியின் கலக்கல் ! உன் தேடல் எங்களுக்கு அற்புதமான தகவல் மட்டுமல்ல நேர்த்தியான பதிவை தந்து கொண்டிருக்கிறது எம் அதிரைப்பட்டினத்தின் "அதிரை வரலாறு"

இனிமேல் அந்த read access memoryஐ பயன்படுத்தாதீர்கள் விளக்கியே வையுங்கள்.

இப்படிக்கு
அதிரைப்பட்டினத்தான்

Shameed said...

ஆங்கிலேயர்களின் நண்பராகத் திகழ்ந்த தஞ்சை சரபோஜி மன்னர் இந்த மனோரா கோட்டையை ஒரு ஆண்டிற்குள் கட்டி முடித்தார்.

இந்த நவீன காலத்தில் கூட இப்படி ஒரு உறுதியான கட்டிடத்தை ஒரு ஆண்டில் கட்ட
முடியும்மா என்பது சந்ததேகமே!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அதிராம்பட்டினம் பாண்டியர் கையில் மட்டுமல்ல வேறு யார் அதிகாரத்திலும் செல்லவில்லை என்பதைதான் காட்டுகின்றது//

அதிவீரராமபாண்டியனுகும் அதிரைக்கும் சம்பந்தமில்லை என்று தெரிகிறது. அதிரையின் வரலாறு சான்றுடன் நமக்கு தெரியப்பட்டுள்ள நிலையில், இனி அதிராம்பட்டினம் என்ற சொல்லை மாறி அதிரைப்பட்டினம் என்று நாம் எல்லாம் எழுத்துவடிவிலாவது முதலில் அழைப்பதில் தவரில்லை, காலப்போக்கில் அதிரைப்பட்டினமாக மாறலாம்.

malligaiputhalvan said...

//மல்லிப்பட்டினத்தின் ஆரம்பகால பெயர் 'துலுக்கன்வயல்' இதனை அவர்கள் ஆய்வுக்குட்படுத்த வேண்டியது காலத்தின் தேவை//

தகவலுக்கு மிக்க நன்றி சகோ.தேவைபடும் உதவிகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்ரேன் சகோ......

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் said...

//மல்லிப்பட்டினத்தின் ஆரம்பகால பெயர் 'துலுக்கன்வயல்' இதனை அவர்கள் ஆய்வுக்குட்படுத்த வேண்டியது காலத்தின் தேவை//

தகவலுக்கு மிக்க நன்றி சகோ.தேவைபடும் உதவிகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்ரேன் சகோ......//

இன்ஷாஅல்லாஹ்...
எப்போதும் தொடர்பு கொள்ளலாம்...

கால தாமத பதிலுக்கு வருந்துகிறேன்
அதிரை ஹிதாயத்

Unknown said...

Dear brother, My name is Mohamed Mukthar (known as "MALLIGAIPUTHALVAN") i need to talk to you on urgent basis regarding Mallippattinam. Please Contact: mmukhthar@gmail.com or +919750191239

Labels

 
TOP