Loading...
Tuesday 5 October 2010

அதிராம்பட்டினமும் அதிவீரராமபாண்டியனும்!அதிரை ஹிதாயத்

நில அறிமுகம்:

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சை மாவட்டத்தின் கடோலரப்பகுதியில், மேலத் தஞ்சை முடியும் இடமும் கிழத் தஞ்சை தொடரும் இடமுமான மாவட்ட எல்லைப் பிரிவுப் பகுதியில் மேலத் தஞ்சையில் அமையப்பெற்ற ஊர்தான் அதிராம்பட்டினம்.

கர்ண பரம்பரைக் கதை:


கர்ண பரம்பரைக் கதைகள் என்று நாம் அடிக்கடி கேள்விப்படுவதுண்டு. அது, மூதாதையர்கள் வழிவழியாக தமது அடுத்தடுத்த சந்ததியினருக்கு சொல்லி செவி வழியாகவே பரவுபவைத்தான் கர்ண பரம்பரைக் கதைகள்.(கர்ணம் என்றால் காது எனப்பொருள்)

கர்ண பரம்பரைக் கதையில் அதிராம்பட்டினமும் அதிவீரராமபாண்டியனும்:

2000 ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியை அரசாண்ட அதிவீரராம பாண்டியன் என்ற அரசன் பெயரைத் தாங்கி அதிவீரராமபட்டினம் என வழங்கப்பட்டதாவும் அப்பெயர் நாளடைவில் சுருங்கி அதிராம்பட்டினம் என வழங்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.(1)
(இங்கு கர்ண பரம்பரைக் கதையைதான் வரலாறு கூறுவதாக சொல்கிறார்கள்)

ஆனால், அதிவீரராம பாண்டியன் வரலாறு வேறுவிதமாக உள்ளது!

அதிவீரராம பாண்டியன் பற்றி உண்மை வரலாறு!

"*முதலாம் அதிவீரராம பாண்டியனின் காலம் கி.பி. 1564‍ 1606.
   

*இவன் புனர்வசு நட்சத்திரத்தில் பிறந்தவன்.
   
*அழகன் அதிவீரராம ஸ்ரீவல்லபன் என்பது இவனது முழுப்பெயராகும்.
 
*இவன் புதுக்கோட்டைச் செப்பேடுகளிலும், தென்காசி செப்பேடுகளிலும்    குறிக்கப்படுகிறான்.
 
*இவன் காலத்தில் விசய நகர அரசன் முதலாம் வேங்கடனின் ஆட்சிக்குப்பட்டு  இயங்கினான்.
 
*கோயில் திருப்பணிகளிலும் இலக்கியப் பணிகளிலும் சிறந்து விளங்கினான்.
 
*தென்காசியில் தந்தை குலசேகரரின் பெயரில் குலசேகர‌முடையார் என்ற    கோயிலைக் கட்டினான்.
 
*விசுவநாதர் கோயிலுக்குள் சொக்க நாதர் பெருமானுக்கும் சீவில விண்ணகர் 

*என்பெருமானுக்கும் தனிச்சன்னதிகள் கட்டினான்.
 
*ஸ்ரீ வில்லிபுத்தூரில் கிருஷ்ணன் கோயில் ஒன்று இவன் காலத்தில் கட்டப்பட்டது.

அதிவீரராம பாண்டியன் செந்தமிழ்ப் புலமையிற்சிறந்து விளங்கியவர் என்பது இவர் இயற்றிய நூல்களால் நன்கு விளங்கும்.

வட மொழியில் ஹர்ஷன் இயற்றியுள்ள நைஷதம் என்ற நூலை இவர் தமிழில் மொழிப்பெயர்த்து பாடியுள்ளார். இது நைடதம் என்று வழங்கப்படுகிறது.உயர்ந்த நடையும் கற்பனைத்திறனும் கொண்டு விளங்கும் இந்நூல் புலவர்களால் உயர்வாக மதிக்கப்படுகிறது.

இவர் இயற்றிய பிற நூல்கள் கூர்ம புராணம், காசி காண்டம், வாயு சங்கிதை, லிங்க புராணம், என்பவை இவரது தமிழ்ப் புலமைக்கும் வட மொழிப் புலமைக்கும் சான்று பகர்கின்றன. குழந்தைகளுக்காக அவர் எழுதிய நீதி நூலான வெற்றிவேற்கை என்பது மிகவும் எளிய நடையில் அமைந்த ஒரு சிறு நூல்." (2) 

உசாதுணை குறிப்புகள்:

(1)அதிரை கலைக் களஞ்சியம்
(2) பாண்டியர் வரலாறு பக்கம்39

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து

தொடரும்...

7 comments:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்ல தேடலின் பலனை இங்கே தொடராக பதிந்து வருகிறீர்கள்.. தொடருங்கள்...

இப்னு அப்துல் ரஜாக் said...

இது தவறான தகவல்.பரம்பரை கதைகளை நம்ப வேண்டாம்.பாபர் மசூதி பற்றிய சமீபத்திய தீர்ப்பு போன்று உள்ளது இது

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் said...

(மூத்த தமையன்) ஒருவனின் அடிமை:இது தவறான தகவல்.பரம்பரை கதைகளை நம்ப வேண்டாம்.//
நம்பவில்லை;உங்கள் கூற்று உண்மை!
கவலை வேண்டாம் அதிவீரராமபாண்டியனுக்கும் அதிராம்பட்டினத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை. அவன் ஒரு 'டம்பி பீஸ்' இனிவரும் தொடர்களில் இதனை நீங்கள் படிக்கலாம்!
ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்

Shameed said...

அதிவீரராமபாண்டியனுக்கும் அதிராம்பட்டினத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை. அவன் ஒரு 'டம்பி பீஸ்'

சொல்வதை பார்த்தல் அதிவீரராமபாண்டியன் ஒரு காமெடி பீஸ் ஆகிவிடும் போல் உள்ளது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அதிவீரராமபாண்டியனுக்கும் அதிராம்பட்டினத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை. அவன் ஒரு 'டம்பி பீஸ்' //

அதானே இது ஏற்கனவே எங்கோ கேட்ட மாதிரி இருக்கே.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அதிரை வரலாறு வலைப்பூவில் அதிரையில் இருக்கு பள்ளிவாசல்களின் வரலாறு பற்றி ஒரு தொடராக எழுதலாமே, பழைய புகைப்படங்களுடன்(இருந்தால்) வெளியிட முயற்சி செய்யுங்கள்.

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் said...

தாஜுதீன்,
அதிரை வரலாறு வலைப்பூவில் அதிரையில் இருக்கு பள்ளிவாசல்களின் வரலாறு பற்றி ஒரு தொடராக எழுதலாமே, பழைய புகைப்படங்களுடன்(இருந்தால்) வெளியிட முயற்சி செய்யுங்கள்.//

"இறையில்லங்கள்" இன்ஷா அல்லாஹ் விரைவில்.
ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்

Labels

 
TOP