அன்புமிக்க 'அதிரை வரலாறு' வாசிப்பாளர்களே! இத்தொடர் அதிரைப்பட்டினத்தின் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்,பெண் மூத்தகுடி மக்கள்,ஆலிம்கள், வரலாற்று நூல் வாசிப்பாளர்கள், அதிரைப்பட்டினம் அல்லாத நேர்மையான,நடுநிலையுடைய வரலாற்றாய்வாளர்கள் என பலதரப்பார்களிடம் கண்ட நேர்காணல் அடிப்படையிலும் அவர்கள் தந்த குறிப்புகளின் வழியிலும் எழுத்தப்பட்டவை. அதுப்போல் தாங்களிடமும் வரலாற்று தகவல்கள்,குறிப்புகள் இருக்குமானால் கருத்துரையாக பதியுங்கள். அன்புடன் அதிரை ஹிதாயத்.
1180ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காயல் நகரில்(கீழக்கரை) இருந்து தஹ்லா மரைக்காயர் என்பவரும் அவர் மனைவி ஆமினா உம்மா அவர்களும்,அவர்களுடன் ஆண்,பெண்,குழந்தைகளுமாக எழுபது நபர்கள் பல மரக்கலங்களில் கிழக்கு நோக்கி பயணப்பட்டார்கள். தங்களுக்கு எல்லா வகைகளிலும் ஏற்ற வாழ்விடம் ஒன்றை அமைக்கும் நோக்கத்தோடு!
சில நாட்கள் பயணத்திற்கு பின்பு அழகிய எழில் கொஞ்சும் கடற்கரை ஒன்று தென்படவே அங்கே முகாமிட்டனர்.
கடலைப்பற்றியும் அதன் அமைப்பைப்பற்றியும் நன்கறிந்தவர்கள் தஹ்லா மரைக்காயர் அவர்களும் அவர்களோடு வந்த சிலரும்.
எனவே தனது வசிப்பிடம் இதுதான் என முடிவெடுத்தனர் ஏகமனதாக!
அதுமுதல் அந்த கடற்கரைப்பட்டினம்தான் அவர்களின் வாழ்விடமானது;அவர்கள்தான் அந்த பட்டினத்தின் முதல் குடிமக்களாவர்.
கீழக்கரையிலிருந்து குடியேறிய அந்த அரபு முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் வியாபாரிகள் அதுவும் கடல் வழிசெய்யும் வியாபாரம்.
அதற்கு ஏற்றார்போல் அமைந்தது அந்த பகுதி இலங்கை தீவின் கீழ்க் கடலோரத்திற்கு மிக அருகில் இருந்தது.
அதுபோல் உண்மையிலேயே மிகச்சிறந்த இடங்களில் ஒன்று 'பெட்டி வளைகுடா' அதிலும் சிறந்த இடம். இந்த நிலப்பரப்பிற்கு அருகில் அமைந்துள்ள இயற்கை வளைவு, இப்படி பல காரணங்கள் உண்டு.
அந்த கடற்கரை அமைப்பு மட்டுமின்றி ஊரின் உள்ளேயும் நல்லதொரு இடமாக அமைந்திருந்தது.
எனவே, கடற்கரை அருகேயே தங்களது குடியிருப்புகளை அமைத்தனர்.
இப்போது, வியாபாரம்செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆயத்தமாயினர்.
அதற்கு, முதலாவதாக நல்லதொரு சிறு கப்பல் ஒன்று தேவைப்பட்டது.அவர்கள் பயனித்துவந்த மரக்கலம் வியாபார பயணத்திற்கு போதுமானது அல்ல;அதை நம்பி விலையுயர்ந்தப் பொருட்களை ஏற்றிச் செல்லமுடியாது!
கப்பல் கட்டுவதற்கான மரவகைகள் அணைத்தும் அங்கேயே கிட்டியது.
ஆகவே, கப்பல் கட்டும் வேலை போர்கால அடிப்படையில் நடைப்பெற்று பல மாதங்களில் முடிவுற்றது.
இப்போது, கீழக்கரை மற்றும் கீழக்கரையிலிருந்து பல ஊர்களுக்கும் இடம் பெயர்ந்த சொந்த பந்தங்களையும் வியாபார தொடர்புகளையும் கண்டு பேசி வியாபார பொருட்களை எடுத்துவந்தனர், ஒரு குழுவினர்.அதில் பல்வேறு வகைவகையான பொருட்கள் குவிந்திருந்தது.
1181ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வியாபாரக் கப்பல் பதினெழு பேர் கொண்ட குழுவாக இலங்கை சென்றது. அந்த வியாபார பயணத்திற்கு 'அபாப்' எனப் பெயரிட்டனர்.
'அபாப்' என பெயரிட்ட முதல் வியாபரப் பயணம் மிகவும் வெற்றியடைந்தது.
பல பயணங்கள் மேற்கொண்டு கிடைக்கும் லாபம் இது ஒன்றிலேயே கிட்டியது.
எனவே, அந்த பட்டினத்திற்கும் 'அபாப்' என பெயரிட்டனர்.
ஆகவே, அந்த பட்டினத்தின் முதல் பெயர் 'அபாப்பட்டினம்' என ஆயிற்று!
முதல் பயணம்தந்த ஊட்டம், பலப்பல பயணங்களுக்கு வித்திட்டது.செல்வம் குவிந்தது; வேறு பல ஊர்களிலும் இருந்த சொந்தங்களும் அபாப்பட்டினத்தில் குடியேறினர்.
அபாப்பட்டினத்தின் மொத்த மக்கள் தொகை அறநூறை(600)விஞ்சி நின்றது;கப்பல்களின் எண்ணிக்கையும் ஏழு ஆயிற்று!
இன்ஷாஅல்லாஹ் தொடரும்...
27 comments:
அருமை அடுத்த பதிவு எப்ப லேட்டாக்கவேனா
'அபாப்பட்டினம்'தான் நம் அப்பாக்கள் பட்டிணம் ஆஹா! அருமை. (தம்பி! பத்திரிக்கை அனுபவம் உனக்கு நிறையவே கை கொடுக்கிறது வாழ்துக்கள்).
'பட்டிணம்'அல்ல 'பட்டினம்'. இரண்டு சுழி 'ன' கடற்கரையுள்ள ஊரை இரண்டு சுழி'ன'. கடற்கரை அல்லாத ஊரை மூன்று சுழி 'ண' என்று பயன் படுத்தவேண்டும்.
ஆனால் நடைமுறையில் பலர் 'ண' என்றுதான் பயன் படுத்துகிறார்கள்.
ஆனாலும், நீண்ட காலமாக குழப்பமாகவே உள்ளது அஹ்மத் காக்காதான் சந்தேகம்போக்கவேண்டும்.
தூசிதட்டி எடுக்கப்பட்ட வரலாறே
எங்கள் 'அதிரைப்பட்டினம்'திசை காட்டிய அதிரைவரலாறே.
எங்கள் பாட்டன்,பூட்டன்,முப்பாட்டன்,முப்பாட்டனின் முப்பாட்டனையும்
அடையாளம் காட்டும் அதிரைவரலாறு குழுவே எங்கள் துஆ எப்போதும் உங்களுக்கு.
அதிரைவரலாறை படிக்கும்போது முப்பாட்டனின் எழுதலைமுறை முப்பாட்டனின் விரல் பிடித்து நடப்பதாய் உணர்வு.
அவர்களே எங்களுக்காய் எழுதிவைத்தாய் நினைவு.
என் பூட்டனுக்கு கூட தெரியாத வரலாறு,எனக்கு தெரியவந்துள்ளது என்ற பெருமை.
கல்வெட்டு இல்லாவிட்டாலும் கணிணியில் எங்கள் வரலாறு உண்டு.
அதை காலத்திற்கும் சேமிப்போம்.
எம் நிலத்தின் முதல் குடிமகனே தஹ்லாமரைக்காயரே எங்கள் பிரார்த்தனை உங்களுக்கு உரித்தாகட்டுமாக.
அபு ஹிஷாம்
மாஷா அல்லாஹ் ! தொடர்ந்து வாசிக்கிறேன் !
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) அபு இப்ராஹிம் காக்கா(அதிரைப்பட்டனத்தார்) தாங்களின் ஆர்வமூட்டும் தொடர் கருத்துரைகளுக்கும் அதிரைநிருபரில் தனிக்கட்டுரை எழுதியமைக்கும் நன்றி.
அதுப்போல் கட்டுரையிலிருந்து சுட்டிக்காட்டி கருத்தெழுதும் ஷாஹுல் ஹமீது காக்கா அவர்களுக்கும் நன்றி.
தாங்களைப்போன்ற தொடர் கருத்துரையாளர்கள் பலர் ஆர்வத்தை தூண்டிவருகிறார்கள் அவர்களுக்கும் நன்றி.
கருத்துரைகள்தான் 'கட்டுரை கருத்தை' மக்களிடம் கொண்டு செல்லும்.
அதிரைவரலாறை அதிரைமணத்தில் முதன்மைப்படுத்தியும்,கருத்துரை எழுதியும் வரும் தாஜுதீன் காக்கா அவர்களுக்கும் நன்றி.
அதிரைவரலாற்று தொடர் முக்கிய கட்டத்தை தொட்டுவிட்டது!
தொடர்ந்து கருத்துரைகளை எதிர்னோக்கியுள்ளேன்.
அதிரைஹிதாயத்
நன்றிகள் தொடரும்...!
(இதுவும் ஒரு தொடரா?னு யாரோ கேக்கிறப்ல தெரிது)
என்ன செய்ய அல்லாஹ் தந்த நேரத்த சிக்கமா செலவு செய்யனுமே!
(இதுவும் ஒரு தொடரா?னு யாரோ கேக்கிறப்ல தெரிது)
சிலருக்கு எறச்சி பிடிக்கும் சிலருக்கு காய்கறி பிடிக்கும்
எறச்சி சாப்பிடுபவர் காய்கறியை பார்த்து இது ஒரு கறியா என்பார் காய்கறி சாப்பிடுபவர் எறச்சி பார்த்து இது ஒரு கறியா என்பார்.அவரவருக்கு என்ன பிடிக்குதோ அதை சாபிட்டுகொள்ள வேண்டியதுதான்.ஆனால் சமைப்பவரை நோகடிக்கா கூடாது சமைப்பவருக்குதான் வலியும் வேதனையும் தெரியும்.
அது சரி 'அபாப்' னா என்னங்க அர்த்தம்
Blogger Shahulhameed said...
(இதுவும் ஒரு தொடரா?னு யாரோ கேக்கிறப்ல தெரிது)
சிலருக்கு எறச்சி பிடிக்கும் சிலருக்கு காய்கறி பிடிக்கும்
எறச்சி சாப்பிடுபவர் காய்கறியை பார்த்து இது ஒரு கறியா என்பார் காய்கறி சாப்பிடுபவர் எறச்சி பார்த்து இது ஒரு கறியா என்பார்.அவரவருக்கு என்ன பிடிக்குதோ அதை சாபிட்டுகொள்ள வேண்டியதுதான்.ஆனால் சமைப்பவரை நோகடிக்கா கூடாது சமைப்பவருக்குதான் வலியும் வேதனையும் தெரியும்.
அது சரி 'அபாப்' னா என்னங்க அர்த்தம்.
-----------------------------------
அபாப் .அரபு சொல்லுக்கு.மானம் காத்தல்.பாதுகாப்பு இப்படி பொருள்களும்,கப்பற்பயணம்னு அறியப்படுகிறது.
தம்பி(களா) நல்ல முயற்சி எங்கிருந்தாலும் வரும் திசை நோக்கமாட்டோம் நல்லவைகளைதான் பார்ப்போம் கருத்துச் சொல்லுக் காக்கா(மார்கள்) இங்கே !
மாஷா அல்லாஹ் நல்ல முயற்சி.. தொடருங்கள் ..!!
அதிரையைப்பற்றி இது வரை அறியாத தகவல்கள் பகிர்ந்தமைக்கு ந்ன்றி.தொடருங்கள்.
தொடருங்க ஹிதாயத்..நம்ம ஊரைப் பற்றின செய்திகள் படு சுவராஸ்யம்.
பகிர்ந்தமைக்கு நன்றி.தொடருங்கள்.
நா பொறந்தது என்னமோ பாபநாசம்ன்னாலும்ம் அடுத்த சிலமாசத்தத்திலேயே அதிரை வந்தீக்கிரன். அப்பஒன்னானம்பர் ஸ்கூல்ல சேந்து காதமீ ஸ்கூல்ல படிச்சு அப்புறம் காதமி காலேஜில டிகிரி முடிக்கிற வரை வளந்தது வாழ்ந்தது எல்லாமே அதிரையில்தான். (என் வாழ்விலிருந்து அதிரையை பிரிக்கவே முடியாது).
பின்னாடி கீழக்கரைக்கும் காயல்பட்டினத்துக்கும் போயீக்கும்போது
அந்த ரெண்டு ஊருவளுக்கும் போயி எறங்கிய உடனேயே எனக்கு ரொம்ப ஆச்சரியம் என்னன்னா, இவ்ளோதூரம் உம்மாநேரம் பயணிக்கவைத்து மருவாட்டியும் புறப்பட்ட ஊரான அதிரையிலேயே இறக்கிவுட்டுட்டு போய்ட்டானனே இந்த பஸ்ஸுகாரன்... கலுசல்ல போயிருவான்..." என்று குழம்பும் அளவுக்கு மூன்று ஊருக்கும் எல்லா விஷயங்களிலும் அப்படி ஒரு ஒற்றுமை. இது எப்படி சாத்தியம்?
இப்பதிவில், கீழக்கரைக்கான தொடர்பு விடை கிடைத்துவிட்டது. எனில் காயல்பட்டினம்? யாராவது விளக்குங்களேன்.
வாங்க முஹம்மத் ஆஷிக் காக்கா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உங்க கேள்விக்கு பதில் சொல்லமுன், உங்களுக்கு முன் வந்து கருத்து சொன்ன பிரபல பதிவர்கள் ஜெய்லானி காக்கா,ஸாதிகா ராத்தா,asiya omar ராத்தா,சகோதரர் அஹமது இர்ஷாத் ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அவர்கள் சொன்னது போல் இன்ஷாஅல்லாஹ் தொடரும்...இன்னும் பல நிறைய தகவல்கள் உள்ளது...அதிரை வரலாறுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்; கருத்து சொல்லுங்க, இயன்றால் 'அதிரைவரலாறை' உங்கள் வாசர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். இது அன்பு வேண்டுகோள்.
//அதிரை வரலாறு இப்போது தூசு தட்டப்படுவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இத்துனை காலமும் 'சிலரால்' திரிக்கப்பட்ட வரலாறு இங்கே 'அக்கு வேறு ஆணி வேறாக' அலசப்படுவது பாராட்டுக்குரியது...// என்று முந்தைய பதிவில் கருத்து சொன்ன அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா காக்கா அவர்களுக்கும் மிக்க நன்றி!
நான் வலைப்பூவை நுகர ஆரம்பித்த நாள் முதல் ஆக்கமும் ஊக்கமும் தந்துவரக்கூடியவர்கள் அவர்களுக்கு மீண்டும் நன்றி!
முஹம்மத் ஆஷிக் காக்கா //இப்பதிவில், கீழக்கரைக்கான தொடர்பு விடை கிடைத்துவிட்டது. எனில் காயல்பட்டினம்? யாராவது விளக்குங்களேன்.// என்ற உங்கள் வினாவிற்கு "காயல் நகர் எது? வரலாறு தரும் உண்மை!" என்ற கட்டுரையில் விடை கிடைக்கும். அதிலிருந்து சில வரிகள்...
//"பழைய காயல் துறையிலிருந்து கடல் விலகி சென்றதன் காரணமாக அத்துறை தன் சிறப்பினை இழந்த போது அங்கிருந்த மக்கள் வேறு ஊர்களுக்கு சென்று குடியேற தொடங்கினார்கள். பரங்கிப்பேட்டை,முத்துப்பேட்டை போன்ற இடங்களுக்கும் சென்றதுடன் தங்கள் பழம் பகுதியின் பெயரைக் கொண்ட புதிய ஊர்களாகிய பின்னைக்காயல், காயல்பட்டினம் ஆகிய ஊர்களையும் அமைத்தனர்.// இந்த ஊர்கள் அனைத்தும் பழையகாயல் என்று அழைக்கப்பட்ட கீழக்கரையிலிருந்து உருவானதுதான். ஒரு தாய்வயிற்று பிள்ளைகள்: 'தாயப்போல புள்ள நூலப்போல சேலை'.
சரி முஹம்மது ஆஷிக் காக்கா 'என் வாழ்விலிருந்து அதிரையை பிரிக்கவே முடியாது'என்று சொன்ன உங்களிடமிருந்து அதிரைப்பட்டினம் பற்றி நிறைய கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
சிலவரிகளில் 'வலி'யை சொன்ன ஷாஹுல் காகாவுக்கும் நன்றி!
அதிரை ஹிதாயத்
நன்றிகள் தொடரும்...
"அபாப்" அல்லது "அபாப்பட்டினம்" என்பதற்கு, அரபு மொழியிலிருந்து பொருள் தேடி வலிந்துரை சொல்வதற்கு மாறாக, அதனைத் தமிழ்த் தொடர்பாக்கிப் பார்த்தால், பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றேன். இவ்வூரின் முதற்குடிமகன் எனக் கருதப்படும் 'தஹ்லா மரைக்காயர்' தமிழ் முஸ்லிமாகத்தான் இவ்வூருக்குக் குடி பெயர்ந்திருக்க வேண்டும். தந்தை போன்ற தகையாளராக 'அப்பா' என்று மதித்த இந்து மக்களும், பாட்டனாரையும் முதியவரையும் 'அப்பா' என அன்போடு அழைக்கும் இப்பகுதி முஸ்லிம்களும் அவரை அன்போடு "அப்பா" என்றழைத்து, அவர் பெயரால், "அப்பாபட்டினம்" எனப் பெயர் சூட்டியிருக்கலாம். அதுவே பிற்காலத்தில் 'அபாப்' பட்டினமாகி, பின்னர் சுருங்கி 'அபாப்' ஆகியிருக்கக் கூடும்.
எனக்குத் தெரிந்தவரையில், 'அபாப்' என்பதற்குப் பின்னூட்டமிட்ட ஒருவர் கொடுத்த பொருள் அரபியில் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, 'அப்பாபட்டினம்' என்பது சரியாக இருக்கலாம். அருகில் 'அம்மாபட்டினம்' ஒன்று இருப்பது, கவனத்தில் கொள்ளத் தக்கது.
'பட்டினம்' என்ப்து, நெய்தல் நிலமாகிய கடலும் கடல் சார்ந்த பகுதியையும், 'பட்டணம்' என்பது பெருநகரையும் குறிக்கும் தமிழ்ச் சொற்களாகும். எ.கா.: அதிரைப்பட்டினம், சென்னைப் பட்டணம்.
விளக்கப் பதிவுக்கு விரைவின்மை குறித்து வருந்துகின்றேன்.
அஸ்ஸலாமு அலைக்கும். இந்த அதிரை வரலாறு பற்றியே முன்பே அறிந்திருந்த வகையில் அபாப்க்கு எழு வருடத்திற்கு முன் அர்தம் தேடி வந்த பொது நான் சந்தித்த பெரியவர் (அரபு தெரிந்த ) சொன்னதுதான் நான் இங்குப்பதிந்தேன்.அஹமது சாச்சா சொல்வது போல்(அப்பா என்பதிலிருந்து)யூகாமாக(guessing) இருந்திருக்கலாம்.ஆனால் கிரேக்கத்தில் அதற்கு படகை செலுத்துபவர்கள்(sailor, mariner, or seaman) என்ற அர்தம் கிடைத்தது அது இந்த அதிரை வரலாறை ஒட்டி வருவதால் அதுதான் என்பது நான் கற்ற அறிவு எனக்கு உணர்துவதால் அவ்வாறு குறிப்பிட்டுள்ளேன் நான் நிரம்ப படித்தவனல்ல விபரம் அறிந்தவர்கள் இங்கு பதியலாம்.
அதிரை அஹ்மது said...
எனக்குத் தெரிந்தவரையில், 'அபாப்' என்பதற்குப் பின்னூட்டமிட்ட ஒருவர் கொடுத்த பொருள் அரபியில் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, 'அப்பாபட்டினம்' என்பது சரியாக இருக்கலாம். அருகில் 'அம்மாபட்டினம்' ஒன்று இருப்பது, கவனத்தில் கொள்ளத் தக்கது.
-----------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சாச்சா பின்னூட்டமிட்டது நான் தான் .படிதவர்கள் சபைதனில் நான் கேள்விபட்டதை பதிந்தேன் . நீங்கள் தான் சரியான விடை சொல்லனும்.
Mohamed Thasthageer(usa)
To Bro.Adirai Ahamed,
பட்டனம் & பட்டணம் ...இதில் இவ்வளவு விசயம் இருக்கிறதா? தமிழில் உள்ள அர்த்த வித்யாசங்களை இவ்வளவு அழகாக விளக்கியமைக்கு நன்றி.
முஹம்மது ஆஷிக்...உங்கள் [ அல்லது எங்கள்] வட்டாரத்தமிழில் ஒரு ஆர்டிக்கிள் எழுதுங்களேன்...உங்கள் எழுத்து / ஸ்டைல் படிக்க நன்றாக இருக்கிறது.
அப்பப்பா "அபாப்" பற்றிய விளக்கங்கள் அருமை
சகோ அஹ்மத் காக்கா மற்றும் CROWN னுக்கும் நன்றி
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) ஷாஹுல் ஹமீது காக்கா, தாங்கள் எழுப்பிய ஒரு கேள்வியினால் ஒரு ஆய்வு கட்டுரைக்கூட அஹ்மத் சாச்சாவிடமிருந்து வரலாம்.இன்னும் நிறைய கேளுங்கள்; கேள்விகளே ஆய்வுக்கான வித்து!
ஜாஹிர் ஹுஸைன் காக்கா ரெம்ப நாளா கருத்து ஒன்னும் சொல்லலேயேன்டு, காத்திருந்தேன். தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதுப்போல்,கருத்துக்களை ஒவ்வொரு பதிவிற்கும் எதிர்பார்கிறோம்.'வட்டாரத்தமிழில் ஒரு ஆர்டிக்கிள் எழுதுங்களேன்' என முஹம்மது ஆஷிக் காக்காவை அழைத்திருப்பதும் அழகு.அவர்களை நாமும் அழைக்கிறோம்.
அதிரைஹிதாயத்
நன்றிகள் தொடரும்...
அதிரைவரலாறு தளத்திற்கு கட்டுரைகள் அனுப்ப:
adiraihistory@gmail.com
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ஆசிக்கை கைகாட்டிவிட்டு சகோ.ஜாஹீர் தப்பிக்கலாம்னு பாக்காதியோ(அப்பாட நம்ம ஊரு மொழி ஒரு ராஹத்) நீங்களும் ஆக்கம் அனுப்புங்கள்.என் தம்பி சார்பாக நான் அழைப்பு விடுகிறேன்.
எங்கிருந்து தோண்டி எடுத்தீர்கள் ???
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்) ஷாஹுல் ஹமீது காக்கா, தாங்கள் எழுப்பிய ஒரு கேள்வியினால் ஒரு ஆய்வு கட்டுரைக்கூட அஹ்மத் சாச்சாவிடமிருந்து வரலாம்.
வலைக்கும் முஸ்ஸலாம்
இததான் நாங்க எதிர் பாத்தோம்
அதிரை புதியவன், கேட்டார்...
எங்கிருந்து தோண்டி எடுத்தீர்கள் ???
'இத்தொடர் அதிரைப்பட்டினத்தின் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்,பெண் மூத்தகுடி மக்கள்,ஆலிம்கள், வரலாற்று நூல் வாசிப்பாளர்கள், அதிரைப்பட்டினம் அல்லாத நேர்மையான,நடுநிலையுடைய வரலாற்றாய்வாளர்கள் என பலதரப்பார்களிடம் கண்ட நேர்காணல் அடிப்படையிலும் அவர்கள் தந்த குறிப்புகளின் வழியிலும் எழுத்தப்பட்டவை.' என்று கட்டுரைத் தொடகத்திலேயே எழுதியுள்ளேன்.படிக்கவில்லையா?
Post a Comment