Loading...
Thursday 15 August 2013

அதிராம்பட்டினத்தின் இடைக்கால பெயர் “வீரசோழன்பட்டினம்”

அதிராம்பட்டினத்தில் 1961ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு-மூன்றாம் இராசராசனின் கல்வெட்டாக கருதப்படும் எழுத்தமைதியைக் கொண்ட கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு(ARE 1961:310) இப்பட்டினத்தை வீரசோழன்பட்டினம் எனக் குறிப்பிடுவதோடு தமிழகத்தின் முக்கியத் துறைமுகமாகவும் இருத்ததையும் அது, இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் இருத்தது என்பதையும் தெரிவிக்கிறது.

கல்வெட்டு(ARE 1961:311) அதிராம்பட்டினம்  இடைக்காலத்தில், பெரும் வணிகர்களின் செயல்படுகளைக் கொண்ட சிறந்த துறைமுகமாக விளங்கியதை உறுதிப்படுத்துகின்றன.

கி.பி.11ஆம் நூற்றாண்டில் சென்னைக்கு அருகில் உள்ள கோவளமும் வீரசோழன்பட்டினம்  என அழைக்கப்பட்டதை முதலாம் வீரராசேந்திரன் கல்வெட்டு காட்டுகிறது. ஆகவே, அதிராம்பட்டினத்திற்கு வீரசோழன்பட்டினம் என்ற பெயர் மேற்சுட்டிய அரசனது பெயராலோ அல்லது முதலாம் குலோத்துங்கன் கொண்டிருந்த வீரராசேந்திரன் எனும் சிறப்புப் பெயராலோ வந்திருக்கவேண்டும்.

அர.ஹிதாயத்துல்லாஹ்

ஆதார நூற்கள்: 
1) தமிழகத் துறைமுகங்கள்-பா.ஜெயக்குமார்
2) கடல்வழி வணிகம்- நரசய்யா
Next
This is the most recent post.
Older Post

0 comments:

Labels

 
TOP