சீரியசான தகவல்கள் பரிமாற்றம் செய்துகொண்ட பின்னர், கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பதற்கு, நகைச்சுவையின் பக்கம் திரும்பினால் நன்றாயிருக்கும்தானே? அதனால்தான் இச்சிறிய தொகுப்பு:
1. என் இளமைக் காலம் அது. எங்கிருந்தோ 'தெட்டித் தெறிச்சு' அதிரைக்கு வந்து சேர்ந்தது, ஒரு வினோதமான 'ஜென்மம்'. அதன் பெயர் 'அந்தோனி' என்று பின்னர் தெரியவந்தது. வீடுகளில் - குறிப்பாக ஆலடித்தெரு - கொடுக்கும் 'மிச்சம் மீதி'களை வாங்கித் தன் அபாரப் பசியைத் தீர்த்துக்கொள்ளும். அதே வேளை, அப்பகுதியின் வீட்டார் சொல்லும் வேலைகளை 'மாட்டேன்' என்னாமல் செய்யும் குணம். "அந்தோனி ஒரு குடம் தண்ணியள்ளிக் கொண்டுவா" என்று குடத்தைக் கொடுத்து அனுப்பினால், அவ்வளவுதான். அருகிலிருக்கும் கிணற்றிலிருந்து அள்ளிக்கொண்டு வர அரைமணி நேரமாவது ஆகும். என்ன செய்வான் தெரியுமா? மூன்று வாளியால் நிரப்பப்பட வேண்டிய குடத்தில் முப்பது வாளித் தண்ணீர் இரைப்பான் அந்தோனி! "அந்தோனி, போதும், போதும்" என்றால் கேட்காமல், "உம்" என்ற பதில்தான் அந்தோனியிடமிருந்து வரும்.
சில நேரங்களில் சிறுவர்களின் கல்லடிக்கும் ஆளாவான், அந்தோனி. கெட்ட வார்த்தை கூறித் துரத்துவான். ஒருமுறை பையன் ஒருவன் (அவர் இப்போது பேரன் பெயர்த்தி எடுத்தவர்) அந்தோனியிடம் மாட்டிக்கொண்டான். அவன், "அந்தோனிக் காக்கா! அடிக்காதீங்கோ! உட்டுருங்கோ!" என்று கெஞ்சியதைக் காணப் பரிதாபமாகவும் இருந்தது; சிரிப்பும் வந்தது.
2. எங்கள் உறவினரிடம் 'ராமலிங்கம்' என்பவர் வேலைக்கு வந்து சேர்ந்தார். அவரும் ஓர் அரை. தோட்டத்திற்கு 12 மணிக்குச் சாப்பாடு கொடுத்தனுப்பினால், பிள்ளைமார் தெருவிலிருந்த தோட்டத்திற்குப் போய்ச் சேர 2 மணியாகும். காரணம், சற்று நேரம் முன்னோக்கி நடப்பான்; பிறகு, அதே வழியில் பின்னோக்கித் திரும்பி வருவான். தானாகப் பேசுவான்; தண்ணீரில் தூங்குவான்!
3. என் பள்ளித் தோழன் அஹ்மது ஹாஜா. பள்ளி வாழ்க்கை முறிந்துபோன பின்னர், அவன் கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டான். பேப்பர்களில் அல்ல; வீட்டுச் சுவர்களில்! "அஹ்மது ஹாஜா அதிரைக்கு ராஜா" என்று இருவரிக் கவிதை தொடங்கும். என்னைக் காணும்போதெல்லாம், 'அஹ்மது' என்று என்னைக் காட்டுவான். பின்னர் தன்னைக் காட்டி, 'ஹாஜா' என்று கூறி, அதையே இரண்டு மூன்று முறை திருப்பிக் கூறுவான். அவனது இருவரிக் கவிதைகளுள் சில:
"தாய் தாலாட்டும்; நாய் வாலாட்டும்", "ஒருவனுக்கு ஒருத்திதான் மனைவி; கொறவனுக்குக் கொறத்திதான் மனைவி", "டெய்லி குளிக்கணும்; கைலி தொவைக்கணும்", "செந்தளையில் பொண்ணு; எந்தலையில் ஒண்ணு". (அதாவது, அவனுடைய மனைவி, செந்தலைப் பட்டினம் என்ற ஊர்ப் பெண்) அவனுடைய சுவர்க் கவிதைகளை நினைவுகூர்ந்தால், இன்றுகூட எனக்குச் சிரிப்பு வரும்.
4. எனது உயர்நிலைப் பள்ளி நாட்களில், முதிர்ந்த ஆசிரியர் ஒருவர் வந்து சேர்ந்தார். அவருடைய மூத்த வயதைக் கருதி, மாணவர்கள் அவரை, "அப்பா வாத்தியார்" என்று அழைப்பார்கள்; அவருடைய காதில் விழுந்தால், வருமே கோபம்! அதனால், சில சுட்டிப் பையன்கள், அவரை முன்னால் விட்டுப் பின்னால் இருந்துகொண்டு, "அப்பா!" என்பார்கள். திரும்பிப் பார்த்து, "எவண்டா அது கழிசடை! அபிஷ்த்து!" என்று கூறிக் காறித் துப்புவார்.
அவருக்குச் சின்ன வயது மகன் ஒருவன் இருந்தான். அவன் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தான். ஒரு நாள், அவனைச் சக மாணவர்கள் கிண்டல் பண்ணினர். அது அந்த 'அப்பா' வாத்தியாரின் சோஷியல் வகுப்பு. தன்னைக் கிண்டல் பண்ணியவனைக் காட்டிக் கொடுப்பதற்காக எழுந்து நின்றான் பையன். 'சார்' என்று சொல்லிப் புகார் செய்வதற்கு பதிலாக, அவன் வாயிலிருந்து வந்தது: "அப்பா! இவன் என்னைக் கிண்டல் பன்றான்!" வகுப்பில் மாணவர்கள் 'கொள்'ளென்று சிரித்துவிட்டனர். அப்பா வாத்தியாருக்குக் கோபம் வந்துவிட்டது, அவர் மகன்மீது! அவன் தன் மகன் என்பதை மறந்தார். "என்னடா நீனும் 'அப்பா'னு கிண்டல் பண்ட்றா?" என்றாரே, பார்க்கலாம்; வகுப்பு மாணவர்களின் சிரிப்பு கூடியதே தவிர, குறையவில்லை!
பெருமைக்குரிய பின்னூட்டக்காரர்களே! உங்களின் நகைச்சுவை வரிகளுக்கு வழி விட்டு, இப்போதைக்கு நகர்ந்துகொள்கிறேன். ஜமாய்ங்க!
- அதிரை அஹ்மது adiraiahmad@gmail.com
அபுஇபுறாஹிம் சொன்னது…
அசத்தல் ஆக்கம் ! அதிரைப்பட்டினத்தின் மைந்தர்களில் என்றுமே நக்கலடித்து விக்கல் வரவைக்கும் நகைச்சுவை நாயகர்கள் ஏராளம்.. வருவார்கள் வரிசையில் காத்திருப்போமே !
Tuesday, November 02, 2010 10:40:00 AM
அபுஇபுறாஹிம் சொன்னது…
வீட்டிலிருக்கும் அழுக்குத் துணிகள் கழுவித்தர ஒரு குறிப்பிட்ட ஏரியாவிலிருந்து ஒரு பெண் வருவார் அவரிடம் கொடுத்து கழுவிய டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு ஸ்கூலுக்கு அவரிருக்கும் வழி தாண்டிச் செல்லும்போது வழியிலே அந்தப் பெண் கண்டுவிட்டால் தானாக பேசுவாரோ அல்லது சாடையாக சொல்வாரான்னு தெரியாது..
"இனிமே அடிச்சுதான் துவைக்கனும்"னு ஏன் இப்படிச் சொன்னார் கேட்டா சட்டையில இருக்கிற அழுக்கைச் சொன்னேன் சொல்லிடுவார் !!
Tuesday, November 02, 2010 10:46:00 AM
Shahulhameed சொன்னது…
கொறவனுக்குக் கொறத்திதான் மனைவி",அரக்கனுக்கு அரக்கிதான் "மனைவி",
Tuesday, November 02, 2010 3:57:00 PM
அபுஇபுறாஹிம் சொன்னது…
சாஹுல் காக்கா ஒரு கடி(ச்சுக்குவா) "ஆணுக்கு பெண் தான் மனைவியாமே" ?
Tuesday, November 02, 2010 4:02:00 PM
Shahulhameed சொன்னது…
அபுஇபுறாஹிம் சொன்னது…சாஹுல் காக்கா ஒரு கடி(ச்சுக்குவா) "ஆணுக்கு பெண் தான் மனைவியாமே" ?
உண்மையில் அதையும் எழுத தான் இருந்தேன் ஏனோ விட்டுவிட்டேன்
Tuesday, November 02, 2010 4:26:00 PM
அதிரைpost சொன்னது…
அந்தோனி' பற்றி ஏற்கனவே வீட்டில் கேள்விப்பட்டுள்ளேன்.
வீட்டில் சோறு தீத்தும் போது கூட 'அந்தோனி'என்று சொல்லித் தான் தீத்துவார்கள்.(அந்தோனி சாக்கு மஸ்தான் வர்ரான்; புள்ளைய புடிச்சிக்கிட்டு போப்போரான்)
அந்தோனி என்றால் அவ்வளவு பயம்.அந்தோனி இறந்து பல காலத்திற்கு பிறகும் அவருக்கு பயந்துள்ளது நினைத்தால்
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது...
சாச்சாவின் நியாபக சக்தி...அல்ஹம்துலில்லாஹ்.நம்முடன் மூன்று வருடங்களுக்கு ஒன்னா கிளாஸ்ல படிச்ச 5பேரின் பேர் சொல்ல சொன்னா.....முடியல....
Tuesday, November 02, 2010 5:24:00 PM
அபுஇபுறாஹிம் சொன்னது…
/// நம்முடன் மூன்று வருடங்களுக்கு ஒன்னா கிளாஸ்ல படிச்ச 5பேரின் பேர் சொல்ல சொன்னா.....முடியல... ///
உண்மைதான்... ஆனாலும் கொஞ்சம் ஞாபகம் இருக்கு சொல்லவா with பட்டப் பெயருடன் :)
Tuesday, November 02, 2010 5:42:00 PM
Yasir சொன்னது…
அகமது காக்காவின் மற்றுமோரு கலக்கல் ஆக்கம்....வாத்தியார் மேட்டர் சூப்பர்..சாகுல் காக்கா நம்ம தெரு ஓடாவி (நடமாடும் சுமைதாங்கி ) / நெய்னா (கண்ணியத்திற்குரிய தூண்டிமுள் ஆலிம்சா சொந்தகாரர்) /எருமைமாடு / கோழிமாப்ள பற்றி கொஞ்சம் பின்னூட்டம் எழுதுங்களேன்
Tuesday, November 02, 2010 5:44:00 PM
ZAKIR HUSSAIN சொன்னது…
இது மாதிரி ஆட்கள் ஒவ்வொரு தெருவிலும் இருப்பார்கள். கடற்கரைத்தெரு இயற்கையாகவே ரிசோர்ட் மாதிரி இருப்பதால் [ அமைதிக்கு ரயிலடி / காற்றுக்கு கஸ்டம்ஸ் / சாப்பாடு .டீ என் வாங்கித்தர துபாய் / சவூதியிலிருந்து வந்த ஆட்கள் [ முன்பு மலேசியாவிலிருந்து] வெட்டிகதை பேச தர்கா...காலையில் புளியமரம், குளிக்க வெட்டிக்குளம் ] இப்படி பல வசதிகளும் இருப்பதால் சமயத்தில் வெளியூரிலிருந்து கூட ஆட்கள் வந்து சேர்ந்து நிரந்தரம் ஆகிவிடுவார்கள்.
இது மாதிரி ஆட்களை அடையாளம் காண ஒரு வழியிருக்கிறது ..லுஹர் தொழுகையில் துஆ வில் சத்தமாக 'ஆமீன்' சொல்வார்கள் [அன்றைக்கு நிச்சயம் யார் வீட்டிலாவது கல்யாண விருந்து இருக்கவேண்டும்]
Tuesday, November 02, 2010 6:54:00 PM
sabeer சொன்னது…
அஹமது காக்கா,அழகாக எழுதப்பட்டிருக்கும் இந்த ஆக்கம், துவக்கம் முதல் முடிவு வரை மெல்லிய நகைச்சுவை இழையோட துள்ளிச் செல்கிறது. இன்னும் நிறைய எழுத இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
Tuesday, November 02, 2010 11:01:00 PM
அதிரை அஹ்மது சொன்னது…
"ஆமீன்" சொல்கிறேன் தம்பி சபீர். உங்கள் துஆவுக்கு மிக்க நன்றி.
Wednesday, November 03, 2010 1:08:00 AM
Rafia சொன்னது…
சாச்சா அசலாமு அலைக்கும்.
"பெருமைக்குரிய பின்னோட்டக் காரர்களே" என தாங்கள் எழுதியிருந்ததால் பெருமையுடன் எழுதுகிறென்....(எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்)
அப்பா சாரப்பத்தி எழுதி-அந்தோனியைசொல்லி எஙகளுக்கு "மலரும் நினைவுகள்" தந்து விட்டீர்கள். பன்னா 'என்கின்ற ஊரைப் பற்றி சார்
கேட்க எமது பக்கத்து சீட் காரர் மேதாவித்தனமாக பண்ணா என்றால் "மீனு " என்று சொல்ல சைவ சமயத்தவரான அவருக்கு கோபம் கொப்பளிக்க கற்றுறை நோட்டு கட்டி வந்த காத்தாலே வாங்கு - வாங்குன்னு விளாசினார். அந்த மாணவர் என் மாமா வுக்கும் கிளாஸ் மேட -எனக்கும்.(பெயிலாகி பெயிலாகி ) ஒரு வேலை உங்களுக்கும் இருக்கலாம்!
Wednesday, November 03, 2010 2:47:00 AM
அதிரைpost சொன்னது…
/// நம்முடன் மூன்று வருடங்களுக்கு ஒன்னா கிளாஸ்ல படிச்ச 5பேரின் பேர் சொல்ல சொன்னா.....முடியல... ///
உண்மைதான்... ஆனாலும் கொஞ்சம் ஞாபகம் இருக்கு சொல்லவா with பட்டப் பெயருடன் :) //
அதுல காக்காவுமா...? தூண்டிவிட்டுட்டான் என்று என்மேல கோபப்படபோரஹ..
Wednesday, November 03, 2010 4:15:00 AM
அதிரைpost சொன்னது…
sabeer சொன்னது…
அஹமது காக்கா,அழகாக எழுதப்பட்டிருக்கும் இந்த ஆக்கம், துவக்கம் முதல் முடிவு வரை மெல்லிய நகைச்சுவை இழையோட துள்ளிச் செல்கிறது. இன்னும் நிறைய எழுத இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.//
சபீர் காக்கா உங்களோட நானும் சேர்ந்து தூஆ கேட்கிறேன்.
Wednesday, November 03, 2010 4:18:00 AM
crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.சாச்சா வழக்கம் போல் வித்தியாசமானவர்களைப்பற்றிய வித்தியாசமான் ஆக்கம்.ஆனால், நான் தலைப்பை பார்த்ததும் நினைத்தேன். நம்ம ஊரில் உள்ள விகடகவிகளைப் பற்றி யேழுதி,சரவெடி(சிரிப்பு வெடி)எதிர்பார்த்தேன். ஆனால் இது ஊசிவெடிதான் .தயவு செய்து சரவெடி ஒன்னு தாருங்கள்.
Wednesday, November 03, 2010 5:29:00 AM
crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும். நான் காதர்மொகைதீன் பள்ளியிலே படித்துக்கொண்டிருக்கும் போது ஆண்டுவிழாவிற்கு அபூர்வசகோதர்கள் படத்துக்கு கமல்ஹாசன் போட்ட குள்ளன் அப்பு வேடம் போட்டு நடிக்க ரிகல்சல் நடந்து கொண்டிருந்தது.எல்லாம் செட் ஆகிவிட்டது.ஆனால் சூ மட்டும் சரியான அளவில் கிடைக்கலே.சிறிய அளவில் மேலும்கொஞ்சம் அகலாமா எந்த கடையில் கிடைக்கும்ன்னு பேசிகொண்டிருக்கும் போது நண்பன் சொன்னான்,கடைத்தெருவில் அரிசிக்கடை வச்சிருக்கிற மொம்மதுல்லா காக்காட்ட கேட்டுப்பாக்கலாமான்னு!!!! ஒரே சிரிப்பலைதான் போங்க.இப்படி ஏதாவது சம்பவம் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளலாமே???
Wednesday, November 03, 2010 5:40:00 AM
அபுஇபுறாஹிம் சொன்னது…
என் சிறு வயதில் என்னோட அப்பா அவர்களோடு செல்லும் போது அவர்களின் கைபிடித்து நடப்பேன் அன்று அவர்களின் அன்று அவர்க்ளின் நண்பரோடு வந்து கொண்டிருந்ததால் அவர்களின் பின்னாலேயே நானும் நடந்து சென்று கொண்டிருந்தேன்.
இங்கே கிரவ்ன் சொன்ன அதே அரிசிகடை காக்கா அவர்கள் என் அப்பாவைப் பார்த்து "என்ன மரைக்கா எப்போது துரும்பு ஒட்டிகிட்டு வரும் இன்னைக்கு துண்டா வருதேன்னு" கேட்க அதுக்கு..
என் அப்பா அவர்களின் பதில் "யார்ராப்பா அது ! என் பேரன் துரும்புன்னு எங்களுக்கு கரும்புடா"ன்னு சொன்னதும் அதுக்கு அரிசி கடைக் காக்கா "ஆஹா நீங்களுமா கட்சி ஆரம்பிக்க போறியன்னு" டைமிங் கடி வைத்தார் வாய் விட்டுச் சிரித்தார்கள் அந்தச் சூழலில் இருந்தவர்கள்,
Wednesday, November 03, 2010 7:18:00 AM
crown சொன்னது…
அபுஇபுறாஹிம் சொன்னது…
என் பேரன் துரும்புன்னு எங்களுக்கு கரும்புடா"
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.இதுக்குப்பேர்தான் குறும்பு!!!!
Wednesday, November 03, 2010 7:55:00 AM
jalal சொன்னது…
சகோ.அஹமது,
அஸ்ஸாலாமு அலைக்கும் (வரஹ்..,)
தாங்கள் எழுதியவிதம், அதன் நடை முதலிருந்து கடைசி வரை உண்மையில் அருமை, அதை படிக்கும்போதே !
எப்படியிருந்தது என்றால் பெரியவர்கள் சிறுவர்களை அழைத்து அருகில் வைத்துக்கொண்டு கதை சொல்வார்களே அப்படி ஒரு அலாதி இன்பம் (அதில் கருத்தும் உண்டு, நகைச்சுவையும் உண்டு) உங்களது படைப்பு மேலும் மேலும் தொடர துஆ செய்கின்றேன் ஆமீன்.
Wednesday, November 03, 2010 9:00:00 AM
jalal சொன்னது…
சகோ.RAFIA
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)
இது யாரு ஜித்தா காரவங்களா ! (ஆமா என்றால் இது உங்களுக்குதான்)
எழுதுங்க எழுதுங்க யாத்திராவைப்பற்றி ?
யாருக்கு புரியுதோ இல்லையோ உங்களுக்குமா!
ஒன்னுவிடாம எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாத்தையும் எழுதுங்கமா.
Wednesday, November 03, 2010 9:23:00 AM
அபுஇபுறாஹிம் சொன்னது…
///jalal சொன்னது…
சகோ.RAFIA
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,) //
ஜலால் காக்கா: கம்பார்ட்மெண்ட் மாறிட்டியலோ ! அதான் யாத்திரா மேட்டரு இங்கே வருது ! :) smile please !
Wednesday, November 03, 2010 9:29:00 AM
sabeer சொன்னது…
//கம்பார்ட்மெண்ட் மாறிட்டியலோ !//
இந்த ஊமைக்குசும்புக்குத்தான் கவிதை கம்பார்ட்மென்ட்ல உதை வாங்கினீங்க (அதுசரி அந்த "புத்துல பாம்பு மேட்டர்ல தப்பிச்சாச்சா?)
TTER நீங்கதானே என் மச்சான் புதுசு. இங்கேர்ந்து இறக்கி சகோ ரஃபிய கம்பார்ட்மென்ட்ல ஏத்திவிட்டா குறைஞ்சா போய்டுவீங்க. (அ.அ.காக்கா மன்னிக்கனும் உங்க ஏரியாவுல தொல்லை தருவதற்கு)
Wednesday, November 03, 2010 10:55:00 AM
crown சொன்னது…
sabeer சொன்னது…
//கம்பார்ட்மெண்ட் மாறிட்டியலோ !//
இந்த ஊமைக்குசும்புக்குத்தான் கவிதை கம்பார்ட்மென்ட்ல உதை வாங்கினீங்க (அதுசரி அந்த "புத்துல பாம்பு மேட்டர்ல தப்பிச்சாச்சா?)
TTER நீங்கதானே என் மச்சான் புதுசு. இங்கேர்ந்து இறக்கி சகோ ரஃபிய கம்பார்ட்மென்ட்ல ஏத்திவிட்டா குறைஞ்சா போய்டுவீங்க. (அ.அ.காக்கா மன்னிக்கனும் உங்க ஏரியாவுல தொல்லை தருவதற்கு)
---------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.போகப்போற நோக்(கு)கம் ஒன்னா இருந்தா பரிசோதகர்ட சொல்லி சமாளிச்சிக்கிடலாம்.
Wednesday, November 03, 2010 11:01:00 AM
crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.போகப்போற நோக்(கு)கம் ஒன்னா இருந்தா ரஃபியா காக்காவும் no come னு சொல்லமாட்டாங்க.காரணம் இங்கு நோக்கம் தான் முக்கியம் என்பது தெரிந்தவர்கள்தானே அவர்கள்.
Wednesday, November 03, 2010 11:05:00 AM
அபுஇபுறாஹிம் சொன்னது…
கவிக் காக்கா: அதிரைநிருபரில் சோதனைகள் இல்லை, ஆனாலசுயபரி(சுத்த)சோதனை அவரவர்களாலே செய்யப் படுகிறதே தாங்கள் தான் கண்டும் வருகிறீர்களே :)
பாம்பு புத்துல கைய விடல அவ்வ்வ்வ்வ்வ்ளோ பயம்... ! :))
கிரவுனு வச்சாலும் நச்சுன்னு வைப்பே(டா)ப்பா "no come" இதைத்தான் நோக்கம்(னு) சொல்லுறதோ ! காவேயிரில தண்ணி கேட்டா என் காதுல இருக்குன்னு சொன்னவனாச்சே !!
Wednesday, November 03, 2010 11:25:00 AM
ZAKIR HUSSAIN சொன்னது…
அது என்னப்பா 'கம்பார்ட்மென்ட் / புத்துலெ பாம்பு" ஒன்னும் வெலங்கலியே...
Wednesday, November 03, 2010 1:54:00 PM
அபுஇபுறாஹிம் சொன்னது…
ஆஹா ஜாஹிர் காக்கா A/C கம்பார்ட்மெண்டிலா இருந்திய, சரி சரி இப்போ என்ன செய்றீய காலம் கலிகாலம் கவிதை ஸ்டேஷனின் ஒரு லூக்கும், அதிரை நகைச்சுவையாளர்கள் ஸ்டேஷனில் ஒரு லுக்கும் விட்டுட்டு இங்கே வந்திங்கன்னா பயணம் சூப்பரா இருக்கும் !
Wednesday, November 03, 2010 2:13:00 PM
Shahulhameed சொன்னது…
எங்கள் தெருவில் ஓடவி என்று ஒருவன் இருந்தான் (தற்போதும் இருக்கிறான்)வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் பெட்டி தூக்கி கொண்டு வருவது அவன் தான் கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு "உண்டு உண்டு அமத்து" என்று சொல்லிவிட்டு போவான் இவனுக்கு வீட்டில் சோறு கொடுப்பதாக இருந்தால் மேஸ்திரி வைத்து தான் சமைக்க வேண்டும்.
எங்கு விருந்து நடந்தாலும் இவனுக்கு ஒரு ஷஹன் சோறும் இரண்டு மல்லா கறியும் கண்டிப்பாக உண்டு சாப்பாட்டை கொடுத்தும் "உண்டு உண்டு அமத்து" என்று சொல்லிவிட்டுதான் சாப்பிட ஆரம்பிப்பான்.
Wednesday, November 03, 2010 4:11:00 PM
crown சொன்னது…
Shahulhameed சொன்னது…
எங்கள் தெருவில் ஓடவி என்று ஒருவன் இருந்தான் (தற்போதும் இருக்கிறான்)வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் பெட்டி தூக்கி கொண்டு வருவது அவன் தான் கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு "உண்டு உண்டு அமத்து" என்று சொல்லிவிட்டு போவான் இவனுக்கு வீட்டில் சோறு கொடுப்பதாக இருந்தால் மேஸ்திரி வைத்து தான் சமைக்க வேண்டும்.
எங்கு விருந்து நடந்தாலும் இவனுக்கு ஒரு ஷஹன் சோறும் இரண்டு மல்லா கறியும் கண்டிப்பாக உண்டு சாப்பாட்டை கொடுத்தும் "உண்டு உண்டு அமத்து" என்று சொல்லிவிட்டுதான் சாப்பிட ஆரம்பிப்பான்.
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.ஓனிடாடீவி பிசாசை எப்படி எளிதில் மறக்க முடியாதோ அது போலவே ஓடாவி.அவரின் பிம்பம் தோன்றி மறைகிறது.உண்டு,உண்டு,அமத்து ரொம்ப சமத்து போங்க....
Wednesday, November 03, 2010 8:25:00 PM
jalal சொன்னது…
தும்பி அபுஇபுறாஹிம் (சாரிமா டங்க் ஜஸ்ட் ஸிலிப்பாயிடுச்சு)
தம்பி அபுஇபுறாஹிம்..,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)
அடுத்த கம்ப்பார்மென்ட் கொஞ்சம் குளிர்ச்சியா இருந்துச்சு அதான் மாறிட்டேன்............! ...? (நீங்கவேற ஏசி கோச் தாம்மா)
குளிரு அதான் எல்லாமே ஸிலிப்பாவுது.
Thursday, November 04, 2010 6:24:00 AM
அபுஇபுறாஹிம் சொன்னது…
ஜலால் காக்கா நீங்க cool sleepingதான் தெரியும் அதான் நாங்க உறங்கியதும் ஏறியிருக்கீங்க (உங்க நேரம் அப்படி usa time) பரவாயில்லை உங்கள் பாசக்கார மச்சான்ஸ் இருக்காங்க அவங்க கம்பார்மெண்டிலும் ஏசி போடச் சொல்லிடுவோம் ! cool smile :)
Thursday, November 04, 2010 7:16:00 AM
crown சொன்னது…
அபுஇபுறாஹிம் சொன்னது…
ஜலால் காக்கா நீங்க cool sleepingதான் தெரியும் அதான் நாங்க உறங்கியதும் ஏறியிருக்கீங்க (உங்க நேரம் அப்படி usa time) பரவாயில்லை உங்கள் பாசக்கார மச்சான்ஸ் இருக்காங்க அவங்க கம்பார்மெண்டிலும் ஏசி போடச் சொல்லிடுவோம் ! cool smile :)
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நான் நம்ப மட்டேன் பெரியவங்கல நீங்க "ஏசி" நான் பார்ததில்லை,"பேசி"ப்பார்தேன்னு சொல்லுங்க.உங்களுக்கும் டங்க் ஸிப்பாயிட்டுச்சா?(சும்மா தாமஸூக்குதான்). cool smile plz.
Thursday, November 04, 2010 7:56:00 AM
அதிரை அஹ்மது சொன்னது…
அன்புச் சகோதரர்களே! தயை கூர்ந்து தலைப்புக்குத் தொடர்பற்ற பின்னூட்டங்களைத் தவிருங்கள். தலைப்புடன் ஒட்டிய நகைச்சுவைகளுக்கு நம்மூரில் பஞ்சமா?
Thursday, November 04, 2010 9:44:00 AM
jalal சொன்னது…
தம்பி...அ அ அ அ அ அச்ச்ச்ச்ச்சு (அல்ஹம்துலில்லா) அ அ அ அ அச்ச்ச்ச்சு (அல்ஹ்ம்துலில்லாஹ்) அ அ அ அச்ச்ச்சு (அல்ஹ்ம்துலில்லா).இம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,)
தம்பி அபுஇபுறாஹிம், க்ரவுன்
இரண்டுபேரும் சேர்ந்து வைத்த கூல்ல தலையை தூக்க முடியலமா முதலில் டாக்டர்கிட்ட போய்ட்டு வந்துடுறேன்
Thursday, November 04, 2010 9:48:00 AM
அபுஇபுறாஹிம் சொன்னது…
அதிரை அஹ்மது சொன்னது…
அன்புச் சகோதரர்களே! தயை கூர்ந்து தலைப்புக்குத் தொடர்பற்ற பின்னூட்டங்களைத் தவிருங்கள். தலைப்புடன் ஒட்டிய நகைச்சுவைகளுக்கு நம்மூரில் பஞ்சமா? ///
(எங்கள் அன்பின் மாமா) கவனத்தில் ஏற்றோம் (இனிமேல் தவிர்த்துக் கொள்கிறேன் sorry) !
நம்மூரில் அ.க. (பெயரைச் சுருக்கியிருக்கேன்) இன்னும் இருக்கிறார் அப்படியே ! நான் ஊருக்குச் சென்றிருக்கும் போது என்னை வழியில் கண்டார் வீட்டுக்கு வந்து பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கும் வந்தார்... அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது கேட்டார் என்னிடம்.
"ரிட்டர்னுலதானே வந்திருக்கே"
"ஆமா காக்கா" என்றேன்
"அதுதான் நல்லது" என்று சொன்னவர் ஏன் அப்படிச் சொல்றீங்கன்னு கேட்டேன்.
அதற்கு அவர் "ரிட்டர்னு தெரிஞ்சாதான் மாமியா வீட்டு ரூமில டேபில் இருக்கும் மூடிபோட்ட தண்ணீர் கூஜா இருக்கும், ஐஸ்வாட்டர் கிடைக்கும், காலையில ஈரல் கிடைக்கும்" ன்னு சிரிப்போடு அடுக்கிக் கொண்டே சென்றார்..
நானும் ரசித்துக் கொண்டே ஏன் காக்கா அப்போ ரிட்டர்ன் இல்லைன்னா என்னா நடக்கும் கேட்டேன்
"அட நீ வேற முதல் நாள் இருந்த சேர் அடுத்த நாள் காணாமல் போகும், டேபில் போட்டிருந்து விரிப்பு காணாமல் போகும், கூஜா சொம்பாக மாறும், டேபிளும் அடுத்த நாள் வெளியிலெடுக்கப் பட்டுவிடும், ஜன்னல் திரை கழற்றப் படும், மாதங்கள் ஒன்றோ இரண்டோ கழிந்ததும் அறை வாசல் கதவில் உட்கார்ந்து கொண்டு யாரோ முனுமுனுப்பதுபது போல் பிரமை வரும்... " அடுக்கிக் கொண்டே சென்றார் என்னால் அவர் சொல்லி வந்த பேச்சு நடையே அடக்க முடியாத சிரிப்பை வரவாழைத்து..
இங்கே எப்படி ? smileலாவது வருகிறதா ?
Thursday, November 04, 2010 10:07:00 AM
அதிரை அஹ்மது சொன்னது…
Excellent!
Thursday, November 04, 2010 10:34:00 AM
Mansoor சொன்னது…
அது மட்டுமா, சோறு கூப்பன் அரிசியில் ஆக்கப்படும், வேட்டி பழுத்து போகும், ஆனத்தில்()உப்பு குறையும் இதெல்லாம் சொல்லாம விட்டுட்டார அவர் ஸ்மைல்
Friday, November 05, 2010 4:20:00 AM
Mansoor சொன்னது…
மாமா அவர்களுக்கு, தாங்களின் இந்த ஆக்கத்தை படிக்கும் போது எனக்கு பக்கத்தில் இருந்து கதைத்தது போல் இருந்தது, மேலும் இது போன்றா ஆக்கங்கள் நிறைய எழுத என்னுடைய துஆக்கல் என்னெறும்
Friday, November 05, 2010 4:24:00 AM
Rafia சொன்னது…
பின்னூட்டம் அனுப்பிய அனைவருக்கும் நன்றி!
US யாத்ரா பற்றி எல்ல்ல்லல்ல்ல்லாத்தையும் எழுதச்சொல்லி
உசுப்பேத்தி விட்டுடீன்கள்.இன்ஷா அல்லா விரைவில் பகுதி பகுதியாக எழுதி
அனுப்புகிறேன்..தற்போது சாச்சா கண்ட நகைச்சுவையாளர்கள் பகுதி அருமை.இன்னும் கச்சுமாமவன்,அம்மாக்கல்லன்.அரக்கல்லு,ஆலடிதேருப்பகுதில்
பிரசுத்தியான காக்கரு(லேடி)போன்றோரைப் பற்றி கூட எழுதலாம்.
Saturday, November 06, 2010 2:27:00 AM
9 comments:
சாச்சாவின் நகை சுவை கட்டுரை அருமை.ஆனால் சில பின்னூட்டக்காரர்கள் சிலரது தனிப்பட்ட விஷயங்களை - மற்றவர்களைப் பற்றி இப்படி சொல்வது ரசிக்கும்படி இல்லை
தம்பி ஒருவனின் அடிமை: இக்கட்டுரையின் கிழ்த் தொடரிலேயே பின்னூட்டங்களும் பதிந்து இருப்பது அத்ரைப்பட்டினத்துக் காரர்களே இதுவரை "கண்ட"நகைச்சுக்குரியவர்கள் கட்டுரையில் சொல்லப் பட்டாலும் கண்டு நகைச்சுவையாளர்களை சொல்லியதில் தவறில்லை, இருந்தாலும் பின்னூட்டத்தின் தடம் மாறியது அதனை சுட்டிக் காட்டப் பட்டதும் மீண்டும் சரியான தடம் கணப்பட்டது.
ரசிக்கும்படி இல்லை என்பது உங்களின் கருத்து, பின்னுட்டத்திலும் சொல்லலாம்னு அனுமதியிருந்ததால்தான் தொடர்ந்தோம் ஏன்னா அங்கே என்னோட பின்னூட்டமு இருப்பதால் என் கருத்தை இங்கே பதிகிறேன் தம்பி!
அஸ்ஸலாமு அலைக்கும் அஹமது காக்கா அவர்களின் நகைச்சுவை கட்டுரையில் திருத்தம் அஹமது ஹாஜா அவர்களிடம் நீங்கள் எங்கு திருமணம் செத்ய்துள்ளீர்கள் என்று கேட்ட பொழுது சொன்ன பதில் செந்தலையில் ஒன்னு எந்தலையில் ஒன்று சொன்னார்
அப்துல் கபூர் அபுதாபி
அஸ்ஸலாமு அலைக்கும் அஹமது காக்கா அவர்களின் நகைச்சுவை கட்டுரையில் ஒரு திருத்தம் அஹமது ஹாஜாவிடம் நீங்கள் எங்கு திருமணம் செய்துள்ளீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்ன அடுக்கு மொழி பதில்
செந்தலையில் ஒன்னு
எந்தலையில் ஒன்னு என்று சொன்னார்
அஹமது ஹாஜாவின் இரு வரிக் கவிதைகள் நிறையவே உண்டு அவைகளில் சில
ஹாஜாவிடம் குணம் உண்டு
ரோஜாவிடம் மணம் உண்டு
ஓட ஓட கால் வலிக்கும்
ஓத ஓத கல்பு ஜொலிக்கும்
ஓடினால் ஆபத்து
ஓதினால் ராஹத்து
அப்துல் கபூர் அபுதாபி
உங்களுரில் அந்தோனி... எங்களுரில் இதே போல் இருவர் அவர்கள் பெயர் தண்டபானி, குட்டியாண்டி
இவர்களை ஞாபகப்படுத்தியது உங்களின்
"அதிரை வரலாற்றில் நான் கண்ட நகைச்சுவைக்குரியவர்கள்: நன்றி சகோதரரே
நான் கேட்டது.... அதிரை அஹமது ஹாஜா துபாயில் பாடியது..
“அதிரை நகரில் பிறந்தவனாம்
அஹமது ஹாஜா என்பவனாம்
அரபி உடையில் இருப்பவனாம்
மிர்காப் மஸ்ஜித் நாத்தூராம்”
ஊரில் தொடர்ந்து மழையாக இருப்பதால், குடையின் தேவை இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில், சில நிமிடங்களுக்கு முன் ஏன் நண்பர் சொன்ன, ஆனால் நான் பார்த்திராத ஆளைப் பற்றிய நகைச்சுவைத் துணுக்கு ஒன்றைப் பதிகின்றேன்:
நெசவுத் தெருவில் வசித்த அந்த ஆறடி மனிதர் (அ.இ.செ. முஹிதீன் பி.ஏ. அவர்களின் பெரியப்பா) நினைவாற்றலில் 'புலி'. ஒருமுறை, அவர் இக்ராம் டாக்டர் வீட்டுக்குப் போனாராம் கையில் குடையுடன். 'ஆகா! நாம ஞாபக மறதிக்காரர்' என்று நினைத்துக்கொண்டு, தனது குடையை டாக்டர் வீட்டு வாசலில் தனது செருப்புக்கு நேராக முகட்டில் மாட்டிவிட்டு, 'திரும்பி வரும்போது நமக்கு மறக்காது' என்று நினைத்துச் சென்றாராம். டாக்டரிடம் காட்டிவிட்டு வெளியில் வந்தவருக்கு, தான் செருப்பைக் கழற்றிய அதே இடத்தில் எவனோ குடை ஒன்றை மாட்டி இடைஞ்சல் செய்துவிட்டான் என்ற சிந்தனை வரவே, "அட படவா! எந்தப் பய புள்ளே இந்த வேலையைச் செய்தான்" என்று சொல்லிக்கொண்டே, அந்தக் குடையை எடுத்து மறு பக்கம் மாட்டிவிட்டு வீடு வந்து சேர்ந்தாராம்! வீட்டுக்கு வந்தவரிடம் அவர் மனைவி, "எங்க, உங்க கொடை எங்கே?" என்று கேட்க, அந்த 'நினைவாற்றல் மிக்கவர', "அட, நான்தான் அந்தப் பய புள்ளையோ?" என்று கூறியவராகத் திரும்பி நடந்தாராம் இக்ராம் டாக்டர் வீட்டுக்கு!
அந்தச் சகோதரர் ஞாபக சக்தியின் சிகரம் என்று கருதுகிறேன். பிள்ளை ஒல்லிப் பிள்ளையாக இருந்ததால் பிள்ளையைக் கையில் வைத்துக் கொண்ட தேடிய வரலாறும் உண்டு. தேடப்பட்ட்ட குழந்தையே (54 வயது)என்னிடம் சொன்ன செய்தி அவர் துபையில் தற்
பொழுதும் பணிபுரிந்து
வருகிறார் அப்துல் கபூர் அபுதாபி
Post a Comment