லண்டன் வட்ட மேஜை மாநாட்டில்
ஷம்சுல் இஸ்லாம் சங்கம்!
அதிரை அஹ்மது
நமது ஷம்சுல் இஸ்லாம் சங்கம் எத்தகைய பாரம்பரியமானது என்பதற்குக் கீழ்க் காணும் தகவல் ஓர் எடுத்துக்காட்டாகும்:
நமது சங்கம் 1920 இல் தோற்றுவிக்கப்பட்டது என்பதால், இதன் செயல்பாடுகளும் அக்கால கட்டத்தின் நிகழ்வுகளுடன் பின்னிப் பிணைந்து வந்துள்ளது. நம் இந்திய நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது, 1947 இல் என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த நேரத்தில் ஷம்சுல் இஸ்லாம் சங்க முக்கிய நிர்வாகிகளாக இருந்தவர்கள்:
தலைவர்: முஹம்மது முஹிதீன் (சுண்டைக்கா மோமியாக்கா)
செயலாளர்: அ.மு.க. அபுல் பரகாத் (புலவர் பஷீர் அவர்களின் தந்தை)
பொருளாளர்: சேகனா வீட்டு அப்துல் லத்தீப் ஹாஜியார்
இளைஞரும் ஆர்வமுள்ள காந்தியவாதியுமாக இருந்த செயலாளருக்கு ஒரு சிந்தனை முகிழ்த்தது. 'இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பது பற்றி, லண்டனில் வட்ட மேஜை மாநாடு கூடுகிறார்களாம். அதற்கு அதிரையின் பங்கு வேண்டாமா?'
அன்று ஆங்கில அறிவைப் பெற்றிருந்த சங்கச் செயலாளர், சங்கத்தின் சார்பாக, இங்கிலாந்து ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் இந்தியாவுக்குக் கட்டாயம் சுதந்திரம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தை ஆங்கிலத்தில் எழுதினார்கள். அதன் கீழே மூவரும் கையொப்பமிட்டு, லண்டனில் நடந்துகொண்டிருந்த வட்ட மேஜை மாநாட்டிற்குத் தந்தி மூலம் அனுப்பிவைத்துள்ளார்கள்.
இந்தியாவின் கடைக்கோடி கிராமமான அதிரையிலிருந்து வந்த அந்தத் தீர்மானம், நம் தேசியத் தலைவர்களும் ஆங்கில ஆட்சியாளர்களும் குழுமியிருந்த அந்த மாநாட்டில் வாசிக்கப்பட, அவர்களின் பதிவேட்டில் இடம்பெற்றது.
இந்தியச் சுதந்திரத்தில் நம் அதிரைக்கும் பங்குண்டு என்பதை உணர்த்தும் இந்த வரலாற்று நிகழ்வை, அண்மையில் நமதூர் எ.எல்.எம். பள்ளி ஆண்டுவிழாவின்போது, அதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட 'அதிரை அறிஞர்', தமிழ்மாமணி, புலவர், அல்ஹாஜ் அஹமது பஷீர் அவர்கள் வெளியிட்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்கள்.
7 comments:
பொக்கிஷங்கள் புலர்ந்தெழுகிறது !
அரிய தகவல் தேடிச் சென்றாலும் இப்படி கேட்டிருக்க முடியாது, தானாக வந்த வரலாற்றுச் சான்று என்னைப் பொறுத்தவரை...
புலவர் அவர்களிடம் இன்னும் தேடனும் அவர்கள் மேலும் வெளிக் கொண்டுவரனும் எங்களுக்காக இன்ஷா அல்லாஹ்...
மாமா நன்றிகள் !
எப்படி இருந்த நம்ம சங்கம் இப்படி எதற்கும் உதவக்கரை போல் ஆகிவிட்டது.
இப்போது உள்ள நிர்வாகிகள் சங்கத்தில் நடந்த தவறுகளுக்கு கூட்டம் போட்டு மன்னிப்பு கடிதம் கூட வாங்க முடியவில்லை.
இவர்கள் எல்லாம் எப்படி நம்ம தெருவுக்கு ஒரு ஜீவாதார உரிமையை பெற்றுத்தர முடியும்?.
வசை பாடுவதே தங்கள் வழக்கமாகக் கொண்ட சிலர், 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' முன்பு போல் உள்ளதென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு!!!
முன்பொரு பின்னூட்டத்தில் நாம் சொன்னபடி, சங்கத்தின் தற்போதையப் புதிய நிர்வாகம், சங்கத்தின் பழைய Bad name மாற்றப்பட வேண்டும் என்பதற்காக, முனைந்து பாடுபட்டு வருவது கண்கூடு. இப்போதெல்லாம், சங்கச் செயல்பாடுகளில் Transparency உண்டு என்பதைக் குறை கூறும் சகோதரர்கள் உணரட்டும்! Change may not happen overnight.
தலைப்பு வைத்திருப்பதை பார்த்தால் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள்லண்டன் வட்டமேஜை மா நாட்டில் கலந்து கொண்டது போல் உள்ளது .இப்படி தவறான தலைப்பை கொடுத்து தந்தி கொடுத்த செய்தியை சொல்லுவது கட்டுரையாளருக்கு அழகல்ல! தலைப்பை மாற்றவும்
எழுத்தில் அழகு எது என்பதைச் சொல்லித் தா தலைவா!
வா தொண்டா! வா சொல்லி தருகின்றேன் தம்பதி என்று போடும் "தபதி" என்று போடா தே
Post a Comment