அதிரைக் குடும்ப வரலாறு:மரியம்மா குடும்பம்-
அதிரை அஹ்மது
அதிரை வரலாற்றைத் தொகுக்கும் பணிகளில் ஈடுபடும்போது, நமதூர் முதியோர் பலரிடமிருந்தும் தகவல்களைத் திரட்டவேண்டியுள்ளது. அத்தகைய நேரங்களில் அவர்களிடமிருந்து செவிவழிச் செய்திகளாக அருமையான சில தகவல்களும் நமக்குக் கிடைக்கின்றன. அவை, அதிரை வரலாற்றின் அங்கங்களாகக்கூட இருக்க முடியும். எனவே, அவற்றையும் விடாமல் பதிவு செய்வது, இம்முயற்சியில் ஈடுபடுவோர் அனைவரின் கடமையாகும். இவ்வடிப்படையில், அண்மையில் என் தாய் மாமாவான ஹாஜி எம்.ஏ.எம். உமர் அவர்களிடமிருந்து சுவையான ஒரு தகவல் கிட்டியது. இது போன்ற பற்பல சுவையான தகவல்கள் வாசகர்கள் பலரிடமிருந்தும் வரக்கூடும் என எதிர்பார்த்தவனாக அத்தகவலைப் பதிவு செய்கின்றேன்:
அதிராம்பட்டினத்தில் பண்டைக் காலந்தொட்டு மார்க்க அறிஞர்கள் பலர் இருந்துவந்துள்ளனர். அவர்கள் வழங்கிய தீர்ப்புகளைப் பொதுமக்கள் மனமுவந்து ஏற்றுச் செயல்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஓரிடத்தில் ஓர் அசம்பாவிதம் ஒன்று நடந்துவிட்டிருந்தது. ஒரு வீட்டில் வேலை பார்த்த இந்துப் பெண்ணை யாரோ விபச்சாரம் செய்து, அவள் வயிற்றில் கரு வளர்ந்தது, ஊரில் பெரும் சர்ச்சையை உண்டாக்கிற்று. இதற்கான தீர்ப்பு வழங்கும் பொறுப்பை மக்கள் 'பெரிய ஆலிம்சாஹிப்' என்று பெயர் பெற்ற மார்க்க அறிஞரிடம் ஒப்படைத்தார்கள். அன்றைய அதிராம்பட்டினத்து முஸ்லிம்கள், இஸ்லாமியத் தீர்ப்புகளை ஏற்று நடக்கும் பக்குவத்தில் முழுமையாக இருந்ததால், மார்க்க அறிஞர்களின் தீர்ப்புகளுக்கு மாற்றமாகக் காவல் நிலையத்திற்கோ வழக்கு மன்றங்களுக்கோ செல்வதில்லை.
வழக்கைத் தீர விசாரித்த அவ்வறிஞர், சம்மந்தப்பட்ட பெண் விபச்சாரம் புரிந்தது உறுதியாகிவிட்டதால், அவளுக்குக் கசையடி கொடுக்க வேண்டும்; அல்லது, ஊரை விட்டு மூன்று மைல்களுக்கு அப்பால் கடத்தப்பட்டுவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். அத்தீர்ப்பைக் கேட்ட அந்த இந்துப் பெண், தான் உயி பிழைப்பதை நாடியவளாக, மெதுவாக அங்கிருந்து ஓடிப் போய்விட்டாள்!
அவளைப் பிடித்து வரும்படிப் பெரிய ஆலிம்சாஹிப் தம் ஆட்களை அனுப்பினார்களாம். அவர்களின் தேடுதல் வேட்டையில், அப்பெண் நடுத்தெரு வீடொன்றில் தஞ்சம் புகுந்திருந்தது புலனாயிற்று. நடுத்தெருவிற்குள் 'சல்லடை போட்டுத்' தேடியதில், 'மரியம்மா' என்ற மூதாட்டி, அந்த அபலைப் பெண்ணுக்குத் தஞ்சம் கொடுத்திருந்ததாகத் தகவல் கிட்டவே, தேடி வந்த ஆட்கள் அவ்வீட்டை முற்றுகையிட்டு, அப்பெண்ணை விடுவிக்கும்படிக் கோரினர்.
வெளியில் நின்ற ஆட்களிடம் மறைந்து நின்று விசாரித்த அந்த மூதாட்டி, 'பெரிய ஆலிம்சாஹிப்' அவர்களிடமிருந்து வந்த ஆட்கள் அவர்கள் என்பதைக் கேட்டறிந்துகொண்டார். "வாப்பாமாரா! ஆலிம்சா அவங்களை இங்கே வரச் சொல்லுங்கோ; நான் பேசிக்கிறேன்" என்று தைரியமாகச் சொல்லியனுப்பிவிட்டார்!
'ஆலிம்சாவுடைய உத்தரவுக்குக் கட்டுப்படாத இந்தப் பொம்புளை யார்?' என்று சிந்தித்தவர்களாக, அந்த ஆட்கள் வந்த வழியே திரும்பிச் சென்று, ஆலிம் அவர்களிடம் நடந்ததைக் கூறினர். அப்படிச் சொன்னது யார் என்பதை அறிந்துகொண்ட பெரிய ஆலிம்சாஹிப், "சரி, நீங்கள்லாம் போங்கள்" என்று சொல்லிவிட்டு, அந்த மரியம்மா வீட்டை நோக்கி நடந்தார்கள்.
நடுத்தெருவிலிருந்த மரியம்மா வீட்டு நெடுந்திண்ணையில் வந்து அமர்ந்த பெரிய ஆலிம்சாஹிப், "தங்கச்சீ மரியம்!" என்று குரல் கொடுக்க, உள்ளேயிருந்து, "வாங்க ஆலிம்சா" என்று பதில் குரல் வந்ததை அடுத்து, "என்னெ வரச் சொன்னியாம்லோ" என்று ஆலிமவர்கள் கேட்க, மரியம்மாவின் குரல் உரத்து ஒலித்தது:
"ஆமா, ஒரு காஃபிர் பொம்புளெக்கி, அவ 'ஜினா' செஞ்சுட்டாங்கிற காரணத்தே வச்சு, அதிராம்பட்டினத்தெ விட்டு மூனு மைல் அப்பாலெ கொண்டுபோய் விட்டுவரச் சொன்னீங்களாமே?"
"ஆமா, அதுக்கு என்ன இப்போ?" ஆலிம்சா கேட்டார்கள்.
"அது சரி ஆலிம்சா, இந்தத் தண்டனையை நெறவேத்த, இவளை நம்மூரின் எந்தத் திசைலே கொண்டுபோய் விடணும்?" மரியம்மாவின் கேள்வி.
"எங்கிட்டு வேணுமானாலும் சரிதான்." ஆலிமவர்கள் பதிலளித்தார்கள்.
மரியம்மா சற்று நிதானத்துடன் பேசினார்கள்: "நம்மூருக்கு மேற்கே 3 மைலில் மகிழங்கோட்டை; கிழக்கே மஞ்சவயல்; வடக்கே சேண்டாகோட்டை; தெற்கே கடல். இதிலெ எந்தத் திசைலே கொண்டுபோய் விட்டாலும் இவள் பாழாப் போய்டுவா. இந்த நிலைலே இவளெக் காப்பாத்தணும் எங்கிறதுதான் என் விருப்பம். அதுக்கு ஒரு வழி உண்டு. அதாவது, இவளுக்கு உங்க வாயாலெ 'கலிமா'ச் சொல்லிக் கொடுங்க. அவளும் இஸ்லாத்துலே வரத் தயாரா இருக்கா."
"அப்படியா? அவளெக் கூப்புடு" என்ற ஆலிம்சாவின் உத்தரவு பிறந்த மறு நிமிடம், அந்தப் பெண் கொண்டுவந்து நிறுத்தப்பட்டாள். அவளுக்குக் 'கலிமா' சொல்லிக் கொடுக்கப்பட்டது. அதுவே, அவள் செய்த பாவத்திற்குப் பரிகாரம் ஆயிற்று.
அவள் மரியம்மாவின் கண்காணிப்பிலேயே இருந்து, சில மாதங்களில் பிள்ளையையும் பெற்றெடுத்தாள்! அந்தப் பிள்ளை வளர்ந்து, அதன் 'பிச்சலங்கள்' பெருகின.
பெரிய ஆலிம்சாவுக்கு அரிய ஆலோசனை கூறிய அந்த மரியம்மாவின் வழித்தோன்றல்கள்தாம், இன்றுள்ள 'மரியம்மா குடும்பம்'!
Home
»
அதிரை அஹ்மது
»
அதிரைக் குடும்ப வரலாறு
»
மரியம்மா குடும்பம்
» அதிரைக் குடும்ப வரலாறு:மரியம்மா குடும்பம்- அதிரை அஹ்மது
95 comments:
தீர்ப்பை மாத்திப்போட்ட அந்த ஆலிம்ஷா யாருன்னு சொல்லாம உட்டுட்டீங்களே மாமா !
அதுதான் 'பெரிய ஆலிம்சா' என்று மேற்கோல் குறிக்குள் வந்துவிட்டதே மருமகனே! இன்றிருக்கும் சென்ற தலைமுறையினரிடம் விசாரித்துப் பாருங்கள். அது சரி, தீர்ப்பை மாற்றிப் போட்டது ஆலிம்சாவா? அல்லது மரியம்மாவா?
அஸ்ஸலாமு அலைக்கும் சாச்சா.குலப்பெருமை பேசுவது நம் இஸ்ஸாத்தில் தடை செய்யப்பட்டது.என் தாயும்,தந்தையும் மாரியம்மா குடும்பத்தினர் என்பது என் பெருமையா?ஏதேனும் சிறப்பா?எனக்குத்தெரிந்து இல்லை என்பதே பட்டார்த்த உன்மை.(ஆனால் இதேயே என் சொந்தங்களில் சிலர் குலப்பெருமை பேசிவருகின்றனர்)சிலர் அவ்வழி வராவிட்டாலும் அவ்வழி வந்தவர்கள் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.ஆனாலும் எம் முன்னோர் நல்லவர் என்ற வகையில் எனக்கு சந்தோஷம் என்பது முற்றிலும் உன்மை.
MohamedThasthageer
ஆகா புதிய தகவல்.
அடுத்தது எந்த குடும்பம் வழித்தோன்றல்கள் பற்றிய வரலாறு?
அந்த மைனருக்கு என்ன தண்டனை என்று சொல்லவில்லையோ ! மார்க்க அறிஞர் கொடுத்த அந்த தீர்ப்பு சரியான தீர்ப்பாக இல்லை இதை படிக்கும் நம் அக்கம் பக்க ஊர்காரர்கள் நம்மை கேலியும் கிண்டலும் செய்ய வாய்ப்பாக அமைத்துவிட்டது .
ஒரு குடும்பத்தின் பெருமையை சொல்வதற்காக ஒரு தெரு வாசிகளின் மனதை நோகடிப்பது பாவத்தின் உச்சம்.நோன்பு நேரத்தில் வேண்டாம் இந்த --------- அதிரை வரலாறு.
அதிரையின் நல்ல வரலாற்றை சொல்லுங்கள்
//அந்தக் குடும்பம்தான், நமதூரின் ------ தெருவிலிருக்கும் 'ஒரு' குடும்பம்!//
இந்த வரிகளை நீக்கினால் தான் இந்த கட்டுரை சர்ச்சையற்றதாக இருக்கும்.
பிறகு யாராவது ஒரு வரலாறை சொல்லி, விபச்சாரம் செய்த ஒரு குடும்பம் நடுத்தொருவில் உள்ளது என்று பொடி போட்டால் ஒத்துக்கொள்வீர்களா?
ஒரு சகோதரர் அல்லது சகோதரரியின் தவற்றை காற்றில் பறக்கவிட்டு அவர் ஒரு குறிப்பிட்ட(100% இஸ்லாமியர்கள் உள்ள) தெருவில் உள்ளார் என்று பலரை சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்க வைப்பது நியாயமா?
தயவு செய்து சர்ச்சையான அந்த வரிகளை மட்டும் நீக்குங்கள்.
சகோதரர்கள்: நட்புடன் ஜமால், 'ஒருவனின்' அடிமை, shahulhameed, Mohammed ஆகியோருடன் நானும் உடன் படுகிறேன்.
சர்ச்சையான செய்தியை தயவு செய்து நீக்குங்கள்.
Mohammed said
பிறகு யாராவது ஒரு வரலாறை சொல்லி, விபச்சாரம் செய்த ஒரு குடும்பம் நடுத்தொருவில் உள்ளது என்று பொடி போட்டால் ஒத்துக்கொள்வீர்களா?
சரியான கேள்வி.
இன்னும் சர்ச்சையான பகுதியை நீக்கவில்லையோ?
சகோ crown
மாரியம்மா குடும்பத்தினர் என்பதை மரியம்மா குடும்பத்தினர் என்று திருத்தாம் செய்யவும்
ஒரு குறிப்பிட்ட தெருவின் பெயர் பதிவிலிருந்து நீக்கப்பட்டது. அத்துடன் சுட்டிக்காட்டுவதற்காக வாசகர்கள் பயன்படுத்திய தெரு பெயரும் நீக்கப்பட்டது.
அதனாற்றான், இன்றும் ‘மரியம்மா’ குடும்பத்தவர்கள் ஆலிம்களை மதிக்காமல் இயக்கங்களில் இணைந்து கொண்டனரோ? என் செய்வது? இரத்தம் படுத்தும் பாடு?!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.சாகுல் எங்கே ஆளையேகானோம்??? நோம்பெல்லாம் எப்படிப்போகுது.எங்க பூட்டி மரியம்மா இந்துவை முஸ்லிம் ஆக்கினாங்க நான் ஒரு சிறு எழுத்துப்பிழையினால் அவங்க பேர இந்து பேராமாத்திட்டேன் பிறகுதான் கவனித்தேன் மத்தவங்க திருத்தி கொண்டு படிப்பாங்க என்ற நம்பிக்கை.ஆனாலும் சுட்டிக்காட்டியதற்கு நன்றி!(திருத்தாம் செய்யவும்???)
அட க்ரவுன் நீ இங்கே தான் இருக்கியா(ப்பா), நான் இந்தக் கட்டுரையை வசிக்கும்போது எந்தவிதமன உள்ளார்த்தம் (நோக்கம் அதுவாக இல்லாதிருக்கும் பட்சத்தில்) என் மனதில் படவில்லை ஆனால் இங்கே நம் சகோதரர்கள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய வரிகளையும் வார்த்தைகளையும் நீக்கியது சரியே !
மரியம்மாவின் ஆலோசனையை ஏற்று தீர்ப்பை மாற்றிப் போட்ட "பெரிய" ஆலிம்ஷா இன்னும் பிடிபடலயே (மாமா) !
Mohammed said...
//பிறகு யாராவது ஒரு வரலாறை சொல்லி, விபச்சாரம் செய்த ஒரு குடும்பம் நடுத்தொருவில் உள்ளது என்று பொடி போட்டால் ஒத்துக்கொள்வீர்களா?//
வரலாறு அல்லது சம்பவம் என்ற பெயரில் அவதூறாக எடுத்துவைக்கும் பட்சத்தில் கண்டிப்பாக எதிர்ப்பும் ஆட்சேபனைகளும் வீரிடும் சந்தேகமில்லை. உங்கள் கருத்து முற்றிலும் ஏற்றுக் கொள்ள வேண்டியது.
மரியம்மாவின் ஆலோசனையை ஏற்று தீர்ப்பை மாற்றிப் போட்ட "பெரிய" ஆலிம்ஷா இன்னும் பிடிபடலயே (மாமா) !
-------------------------------------
சேக்'(பெரிய)னா ஆலிம்?????சாச்சா விடை சொன்னால் எத்தனை பொற்காசு தருவீங்க???
சர்ச்சையான வரிகளை நீக்கி அதிரை வரலாறு வலைப்பூ குழுவுக்கு மிக்க நன்றி.
தொடருங்கள் நம் அதிரை வரலாற்று செய்திகள்.
ஆவலும் நல்ல செய்திகள் பலவற்றை எதிர்ப்பார்கிறோம்.
சர்ச்சையான வரிகளை நீக்கியதற்கு நன்றி
தவறை திருத்திக்கொள்வது பெரிய விஷமல்ல தவரே இல்லாமல் பதிவதுதான் பெரிய விஷயம்
crown said...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.சாகுல் எங்கே ஆளையேகானோம்??? நோம்பெல்லாம் எப்படிப்போகுது
வலைக்கும் முஸ்ஸலாம் நோன்பு அதான் அதிகம் தலை(வலி)காட்டமுடியவில்லை.
Kavianban KALAM, Adirampattinam said...
அதனாற்றான், இன்றும் ‘மரியம்மா’ குடும்பத்தவர்கள் ஆலிம்களை மதிக்காமல் இயக்கங்களில் இணைந்து கொண்டனரோ? என் செய்வது? இரத்தம் படுத்தும் பாடு?
------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் கவி???????அவர்களே.இயக்கங்கள் மேல் எங்களுக்கு மயகங்கங்கள் அல்ல.அதேவேளை நல் இயக்கம் என்றால் அதில் சேர்ந்து பணியாற்ற எந்த தயக்கமும் இல்லை.அதனால் வசை சொல் வரும் என்ற கலக்கமும் இல்லை.ஆனால் நீங்கள் தான் இந்த அமைதி மாதத்தில் கலகம் செய்கிறீர் உம்முடைய கவி எழுத்தினால்.பேனா பிடித்தால் எதுவும் எழுதலாம் என்று நினைக்கிறீகளா திரு.கலாம் நீங்கள் எப்படியும் இருக்கலாம் அது உங்கள் இ(ஷ்)ட்டம்,மற்றவர்களை தாக்கும் திட்டம் ஏனோ?அல்லாஹுக்கு அஞ்சி கொள்ளுங்கள் அன்பு சகோதரரே!
அந்த "பெரிய"ஆலிம்ஷாவைக் கூப்பிடுங்கப்பா நம்ம(மரியம்மா)வூட்டு புள்ளைட்ட இரண்டு வார்த்த பேச்சிட்டு போவட்டும். சரி நம்மூர்ல குரைஷிக் குலம்னு யாரோ இருக்காங்கலாம்ல.. வரலாற்றை பொறட்டி ஏதாச்சும் கெடச்சா சொல்லுங்க(மா) !
இங்கே ஒன்றை கண்டிப்பாகச் சொல்லியே ஆகவேண்டும் "அதிரை வரலாறு"ன்னு ஒரு வலைபூவை தேடிப்போய் வாசித்திருப்பேனான்னு என்னால் சொல்லமுடியாத வினாவே, ஆனால் "அதிரைமணம்" என்று ஒரு வலைத் திரட்டி இருப்பதானால் எல்லாமே ஒரே பக்கத்தில் பளிச்சென்று தெரிவதால் ஒற்றை (click)தட்டில் எங்கும் செல்ல முடிகிறது.
அபுஇபுறாஹிம் said
இங்கே ஒன்றை கண்டிப்பாகச் சொல்லியே ஆகவேண்டும் "அதிரை வரலாறு"ன்னு ஒரு வலைபூவை தேடிப்போய் வாசித்திருப்பேனான்னு என்னால் சொல்லமுடியாத வினாவே, ஆனால் "அதிரைமணம்" என்று ஒரு வலைத் திரட்டி இருப்பதானால் எல்லாமே ஒரே பக்கத்தில் பளிச்சென்று தெரிவதால் ஒற்றை (click)தட்டில் எங்கும் செல்ல முடிகிறது.
உண்மைதான் அதிரைமணம் உள்ளதால் வசதியாகத்தான் உள்ளது .
ஆமா "பெரிய" "ஆலிம்ஷா" தவறான தீர்ப்பை கொடுத்தும் ஆலிம்ஷா பெயரை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களே ஏன் ஆலிம்ஷாவிற்கு ஏதும் தண்டனை கொடுக்கவா?
இந்தச் செவிவழித் தகவலை எழுதி அனுப்பிய பின்னர், வலைப்பூவின் இயக்குநர், "அந்தக் குடும்பத்துப் பெயரை நீக்கிவிடவா?" என்று கேட்டார். அது எனக்குச் சரியாகப் பட்டதால், "சரி" என்றேன். அப்படியிருந்தும், வாசக அன்பர்கள் தம் பின்னூட்டங்களில் 'பின்னி உதறிவிட்டார்கள்'! 'அதிரை வரலாறு' நூலுருப் பெறும்போது, இது போன்ற சர்ச்சைக்குறிய தகவல்கள் கண்டிப்பாக 'எடிட்' செய்யப்படும் என்று உறுதி கூறுகின்றேன். செவிவழிச் செய்திகளிலும் நல்ல சில தகவல்கள் கிட்டலாம் என்ற எண்ணத்தில்தான் இத்தகவல் இடம்பெற்றது. அதுவன்றி, குலப் பெருமை பேசுவதோ, குறறம் காண்பதோ இதன் நோக்கமன்று. சகோதரர் 'கவியன்பனின்' பின்னூட்டம் தேவையற்றது; கண்டிக்கத் தக்க்து!
Shahulhameed said...
ஆமா "பெரிய" "ஆலிம்ஷா" தவறான தீர்ப்பை கொடுத்தும் ஆலிம்ஷா பெயரை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களே ஏன் ஆலிம்ஷாவிற்கு ஏதும் தண்டனை கொடுக்கவா?///
நீங்க வேற சாஹுல் நமக்கும் ஆலிம்ஷா(க்களுக்கும்)வுக்கும் அப்படி ஒரு பினைப்பு கொஞ்சம் கொடுக்கல் வாங்கல் இருக்கு அதான் இப்படி ஒரு பாக்கி வச்சுபுட்டரேன்னு ஒரே கவலயாயீக்கு !
அதிரை வரலாறு தளத்தில் உள்ள பழைய பதிவுகளை எளிதில் காண பதிவு பெட்டகத்தை (blog archive) இணைத்தால் பயனுள்ளாதாக இருக்கும்.
வரலாறு என்று வருமேயானால் அங்கே நிச்சயமாக சர்ச்சைகள் உருவாகும் எதிர்ப்புகள் வரும், இங்கே வாய்வழித் தகவல் என்றுதான் சொல்லி பதியப் பட்டு எழுந்த ஆட்சேபனைகளை ஏற்று உடனே நீக்கமும் செய்யப்பட்டு விட்டது, கருத்துச் சொல்கிறேன் என்று மீண்டும் அதனையே திருப்பிப்போட்டு மற்றுமொரு அவதூறு அவசியமற்றதே சிந்திப்போம்...
தவறு / உண்மைக்கு மாறு என்று தெரியவருமேயானால் எடுத்துச் சொல்வோம் அதற்காக எதிர்வினையாக வாதத்திற்காக மீண்டும் எடுத்து வைப்பதில் பலனுண்டா ?
வரலாறு என்று வருமேயானால் அங்கே நிச்சயமாக சர்ச்சைகள் உருவாகும் எதிர்ப்புகள் வரும், இங்கே வாய்வழித் தகவல் என்றுதான் சொல்லி பதியப் பட்டு எழுந்த ஆட்சேபனைகளை ஏற்று உடனே நீக்கமும் செய்யப்பட்டு விட்டது, கருத்துச் சொல்கிறேன் என்று மீண்டும் அதனையே திருப்பிப்போட்டு மற்றுமொரு அவதூறு அவசியமற்றதே சிந்திப்போம்...
தவறு / உண்மைக்கு மாறு என்று தெரியவருமேயானால் எடுத்துச் சொல்வோம் அதற்காக எதிர்வினையாக வாதத்திற்காக மீண்டும் எடுத்து வைப்பதில் பலனுண்டா ?
---------------------------
அஸ்ஸலாமு அலைகும்.சகோ.ஜாஹீர் உங்கள் கேள்விகள் நியாயமானதே.வாய்(தவறி)சொல் என்று வந்து பின் அதை மனமாற உணர்ந்து நீக்கியப்பின் அந்த செய்திக்கு பதிலாக நீங்கள் சொல்லிய செய்தியும் சரியா?இந்த அமைதி மார்கத்தில் அமைதியான மாதத்தில் வீண் விவாதங்களை தவிர் போமாக.ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு சரியாகாது.கட்டுரையாளர் வேண்டுமென்றே எழுவும் குறிப்பிடாத போது இன்னும் ஏன் இந்த கோபம்?தூபம்?அல்லாஹ் அனைவனரையும் மன்னிப்பானாக ஆமீன்.சகோ.அபுஇபுறாகீமின் வார்த்தையை நானும் வழிமொழிகிறேன்.
'ஜாஹிர்' என்பவரின் வரம்பு மீறிய பின்னூட்டம் பற்றி: குறிப்பிட்ட தகவலை நான் 'செவிவழிச் செய்தி' என்றுதான் கூறினேன். பாவம் செய்தவர் என்றோ இறந்துவிட்டார். அவரைப் பிடித்து வந்து இவர் தண்டனையா கொடுக்கப் போகிறார்? அல்லது, அவரின் சந்ததியில் ஒருவரை ஊர்விலக்கு சேய்யப் போகின்றாரா? அல்லது அந்தக் குடும்பத்தைப் புறக்கணிக்கப் போகின்றாரா? ஒன்றுமே இவரால் முடியாது என்பதுதான் நிதர்சனம். இந்த இயலாமையினால், தகவல் தந்தவரையே, அவர் யார் என்று அறியாமல், அவர் உயிரோடிருக்கும்போதே விபச்சாரக் குற்றம் சுமத்துகின்றார்! அதற்கு இவர்தான் மறுமையில் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும். சம்மந்தப்பட்ட நிகழ்வில், அக்குற்றம் செய்தவர் ப்ற்றி வெளிப்படையாகக் கூறாதது, 'ஒருவரின் குற்றத்தை மறைத்தால், மறைத்தவரின் குற்றத்தை நாளை மறுமையில் அல்லாஹ் மறைத்துவிடுவான்' என்ற நபிமொழியின் அடிப்படையில்தான் என்பதைத் தம்பி ஜாஹிர் விளங்கிக் கொள்ளட்டும்! சம்மந்தப்பட்ட செய்திக்கு உரிய முறையில், விவேகமாக மறுப்புக் கொடுக்கலாமே தவிர, திமிர் பிடித்த நிலையில் எழுதினால், அவர் சிந்தனை மழுங்கிப் போகும்! பின்னூட்டமிட்டவர்களுள் பலருக்கு இச்சம்பவம் நெருடலாக இருந்தும்கூட, எத்துணை நாகரிகமாக எழுதியுள்ளார்கள் என்பதைப் பார்த்துத் திருந்திக் கொள்ளட்டும் இந்தப் 'புத்திசாலி'!
அதிரை அஹ்மது காக்காவின் விளக்கம் சரியே.
ஜாஹிர் நிதானமா எழுதுங்கமா.
தம்பி ஜாஹிர், இவ்விசயத்தை இத்துடன் விடவும்.ஜமீல்
ஜமீல் காக்க மன்னிக்கவும் வரம்பு மீறி எழுதியது நானா அல்லது அதிபுத்திசாலி அஹமதுவா. அவரின் வாதப்படி, ( அக்குற்றம் செய்தவர் ப்ற்றி வெளிப்படையாகக் கூறாதது, 'ஒருவரின் குற்றத்தை மறைத்தால், மறைத்தவரின் குற்றத்தை நாளை மறுமையில் அல்லாஹ் மறைத்துவிடுவான்' என்ற நபிமொழியின் அடிப்படையில்தான்) இது ஆணுக்கு மட்டும்தானா????? மேலும் அவர் குறிப்பிட்டது தற்பொழுதும் அந்த தெருவில் அந்த குறிப்பிட்ட பெண்ணின் குடும்பம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்று மேற்கோள் காட்டினார் இதை படிக்கும் அந்த தெருவை சேர்ந்த நபர் என்ன நினைப்பார் சில சமயம் தன் குடும்பத்தை பற்றி சந்தேகம் கொள்ளும் சூழ்நிலை உருவாகாதா? இது எப்படி என்றால், அடி பட்டவருக்குதான் அந்த அடியின் வலி தெரியும். அல்லாஹ் காப்பாற்றி விட்டான் இதுவரை அந்த தெருவை சேர்ந்த நபர் யாரும் அதிபுத்திசாலி எழுதியதை படிக்கவில்லை. என்னுடைய நோக்கம் உமர் காக்கவையோ, அஹமது காக்கவையோ காயப்படுத்த வேண்டும் என்பது இல்லை, ஆனால் காயம்பட்டவர்களின் வலி என்ன என்று உணர வைக்க முயன்றேன். அப்படி இதை எழுதிய புத்திசாலி உணர்ந்தாள் சந்தோசம். (குறிப்பு : நான் அதிபுத்திசாலி குறிப்பிட்ட தெருவை சார்ந்தவன் இல்லை. என் சகோதரன் யாராவது ஒருவன் காயப்படுத்தப்பட்டால் எனக்கு வலிக்கும்) மேலும் சில விசயங்களை எழுதும்போது அதிபுத்திசாலி அஹமது காக்காவுக்கு எப்பொழுதும் அடுத்த தெரு என்றால் இலக்காரந்தான். உதாரணம்: கந்தூரி எடுப்பதையும் பள்ளிவாசல் திறப்பதையும் சேர்த்து எழுதியது / பிச்சைக்காரர்கள் நடுத்தெரு மற்றும் புதுமனை தெருவில் மட்டும் பிச்சை எடுத்து விட்டு பஸ் ஏறி போய்விடுவார்கள் என்று எழுதியது / விளம்பரதைப்பற்றி எழுதி இருந்தார் / இதிலிருந்து தெரிகிறது காக்காவுக்கு அவரையும் அறியாமல் தெரு பாகுபாடு அவர் எண்ணங்களில் புறையோடி கிடக்கிறதென்று. அல்லாஹ் என்னையும் அஹமது காக்காவையும் மன்னிப்பானாக. வரலாறு என்றால் செய்திதான் முக்கியம் அதில் உள்ள பாத்திரங்கள் அல்ல. தனி நபர் வரலாறு என்று இருந்தால் அஹமது காக்க எப்படி வேண்டும் என்றாலும் எழுதிக்கொள்லட்டும், இது நம் ஊர் சம்மந்தப்பட்டது எத்தனையோ நல்ல விசயங்கள் நம் ஊரைப்பற்றி உள்ளன அதைத்தான் நம் ஊர்வசிகள் தெரிந்து கொள்ள வேண்டும், அதை விட்டுவிட்டு இதை போன்ற செய்தி கேள்விப்பட்டால் நாம் அதை மறைக்கத்தான் முயல வேண்டும் இப்படி வாய்வழி , வான்வழி , கடல்வழி என்று எழுதி நாம் நம் ஊரைப்பற்றி கேவலபடுத்த்க்கூடாது. மேலும் இதை சுவையான செய்தி என்று வேறு குறிப்பிட்டு மேலும் பலரையும் இதுபோல் எழுத ஆர்வமூட்டினார் இது போன்ற கீழ்த்தரமான வரலாறு நமக்கு AVA இதை நாம் எல்லோரும் புரிந்து கொண்டால் நமக்கும் , நம் ஊருக்கும் பெருமை.
//(குறிப்பு : நான் அதிபுத்திசாலி குறிப்பிட்ட தெருவை சார்ந்தவன் இல்லை. என் சகோதரன் யாராவது ஒருவன் காயப்படுத்தப்பட்டால் எனக்கு வலிக்கும்) ///
அட அவனா நீ இங்கேயும் ஆரம்பிச்சுட்டியா ? ஏற்கக்னவே Xபிரஸ் வழி அடைக்கப் பட்டதும் முட்டி போதி எங்கேடா குட்டையை குழப்பலாம்னு இங்கே வந்துட்டியா ? பலநாள் திருடன் ஒருநாள் மாட்டுவான் ! எச்சரிக்கை இந்தப் பெயர் மாற்றி எழுதும் குழப்பவாதியை..., கிரவுன் பாய் இன்னுமா தெரியல இங்கே கருத்துக் கக்கியிருப்பவன் யாரென்று ?
அஸ்ஸலாமு அழைக்கும் அதிரை வரலாறு நிர்வாகிகளே தாங்கள் தாங்கள் தளத்தின் பின்னுட்டத்தை சில நாட்களுக்கு நிறுத்தி வைப்பது நன்றாக படுகின்றது பலரும் குழப்பம் விளைவிக்க முற்படுவதை தடுக்க மேற் சொன்னது உதவியாக இருக்கும்.என்பது என் தாழ்மையான கருத்து .
அதிரை front டாக் நீ ஒன்றை தெரிந்து கொள், எனது வாப்பா உம்மா வைத்தபேர்தான் ஜாகிர் நான் உன்னைப்போல் பெயர்மாத்தி அல்ல உன் வாப்பா உம்மா வைத்தபேர் உனக்கு அதிரை front talk கா சொல் ? நீ பேரை மாத்தி எழுதிக்கொண்டு, மற்றவர்கள் பெயர் மாற்றி எழுதுவதாக குற்றம் சொல்லும் புத்திசாலி பையா. நீ நினைத்த ஆல் யார் என்று எனக்கு தெரியாது, ஆனால் நீ நினைத்த ஆல் நான் அல்ல இதை நீ தெரிந்து கொள். மேலும் தேவைப்பட்டால் என் முழு விலாசத்தையும் தருகிறேன். நீ முதலில் நியாயமான நிலையில் இருந்து சிந்தித்து பார். நாளை வேறு யாராவது ஒருவர் நீ சார்ந்த தெருவில் இதேபோல் ஒரு வாய்வழி கதை சொல்லி உன் தெருவில் இப்பொழுதும் பல குடும்பம் (பிச்சலங்கள்) உள்ளது என்று எழுதினால் நீ ஆமா ஆமா என்று சும்மா இருப்பியா? நீ crown அவர்களை கூப்பிட்டாய் அவர் நியாயமாக இருவரையும் கண்டித்தார் நீ உன் சொந்தக்காரன் என்பதால் அந்த புத்திசாலி எழுதியதை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதா. நான் எழுதியது தவறு என்று உணர்ந்து தான் எழுதினேன் ஆனால் இந்த பிரச்சனை தொடங்கி வைத்த புத்திசாலி தவறை உணர்ந்தபாடில்லை அவரை சார்ந்த உன் போன்றோரும் உணரவில்லை அல்லாஹ் மன்னிப்பானாக.
Can anybody stop the arrogance of this 'jahir'? What he gains by contradicting in the published article? If he couldn't agree with what was written, he could have argued in a gentle manner like others. Instead, he only spit the venom in the discourse. The guy seems to be a psychic rot!
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்)
2:177
Thanks Allah! You have instilled a soul by turning to You with Your heavenly revelation after a Satanic slander was started by it! Let us all pray that when a controversy arises we will enter in to gentle discourses by not instilling hatred in anybody's heart! And, thank you brother.
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.ஜஹிர் மற்றும் அஹமது சாச்சாவின் பரஸ்பர புரிதலும்,உள்ளார்ந்த கவலையும் அல்லாஹ் அக்பர்!!!!, நாம் சைத்தானை வென்றுவிட்டோம் என மனம் குதூகலிக்கிறது.இனியும் இப்படியே ஆகட்டும் இன்ஷாஅல்லாஹ்.
Peace ! - அல்ஹம்துலில்லாஹ்
சகோ ஜாகிர் சொல்வதில் உண்மை இருக்கிறது.அவருடைய கருத்து எல்லாரும் ஆதரிக்கக் கூடியது.எனவே கட்டுரையாசிரியர் தேவையில்லாத பகுதிகளை நீக்கி விட்டு,வெளியிடலாமே?அதுமட்டுமில்லீங்க,அதுராம்பட்டினம் வரலாத்தை எழுதுனா,எதுனா கூலி கிடைக்குமா?இல்லன்னா இஸ்லாத்தைப் பத்தி எழுதுனா கூலி கிடைக்குமா?பேசாமே ஊர் வரலாத்தை நிருத்திப்புடலாமே,காக்காமார்களே?(பொதுவா பொம்பளைங்கதான் சண்ட வளப்பாங்க,இங்க ஆம்பிளை சண்டை,ஹும்)
பேசாமே ஊர் வரலாத்தை நிருத்திப்புடலாமே,காக்காமார்களே?(பொதுவா பொம்பளைங்கதான் சண்ட வளப்பாங்க,இங்க ஆம்பிளை சண்டை,ஹும்).
-------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.ஊர் என்றால் ஆயிரமும் இருக்கும்,இதுவும் வரலாறுதான் இப்பத்தான் எல்லாம் சரியாயிடுச்சுல!தொடரட்டுமே நம்மின் வேர் நோக்கியப்பயணம்.(பொம்பள தான் சண்டை புடிப்பாங்க-பெருந்தன்மையா சொல்லிருக்கிங்க மத்த சகோதரிகள் உங்கள்ட்ட சண்டைக்கு வராம இருந்தா சரி)
இந்த நோன்பு நேரத்தில் இப்படி காரசாரமான கமென்ட்ஸ் தவிர்க்க.....உடனே யாராவது ஒரு புது ஆர்டிகிள் எழுதி வெளியிடுங்கள். கமென்ட்ஸ் திசை திரும்பும்.
ZAKIR HUSSAIN
இந்த நோன்பு நேரத்தில் இப்படி காரசாரமான கமென்ட்ஸ் தவிர்க்க.....உடனே யாராவது ஒரு புது ஆர்டிகிள் எழுதி வெளியிடுங்கள். கமென்ட்ஸ் திசை திரும்பும்.
யாரவது என்ன நீங்களே எழுதி வெளியிடுங்கள் .
அதிரை வரலாறு, வரலாறு படைத்து விட்டது பின்னுட்டங்களில்.
சகோதரர் அஹமது காக்கா அவர்களுக்கு, உங்களின் அதிரை வரலாறு தொடரட்டும், தொடர்ந்து எழுதுங்கள், சில கேட்ட விஷயம் நடந்தால்தான் நல்லது எது என்று நமக்கு தெரியும். உங்களின் , கட்டுரைகள் , கருத்துக்களை விரும்பி படிக்கும் வாசகன் நான் அதனால்தான் உரிமையுடன் என்னுடைய கருத்துக்களை நான் சில சமயங்களில் பதிகிறேன். வஸ்ஸலாம். இனியும் பதிவேன் உரிமையுடன்.
தம்பி ஜாஹிர், அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் புரிதலுக்கும் பாராட்டிற்கும் நன்றி. நான் கேள்விப்பட்டதை எழுதினேன். ஆனால் நீங்களோ, இலாத ஒன்றை இட்டுக்கட்டி (உமர் மாமாதான் விபச்சாரம் செய்திருப்பார் என்று) எழுதிவிட்டீர்கள். அங்குதான் பிரச்னையே ஆரம்பித்தது. இனிமேல் இப்படி அவதூறுகளை நீங்கள் எழுதாமலிருந்தால் சரி. தள நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய பகுதியை நீக்கிவிட்ட பின்பும் பிடிவாதம் பிடித்தது, இதரப் பின்னூட்டக்காரர்களையும் சலிப்படைய வைத்துவிட்டது. அல்லாஹ் நம் அனைவரையும் மன்னிப்பானாக! ஆமீன்.
ஆஹா சண்டையா போட்டோம் அப்படியேதும் இல்லையே... அதான் தெளிவாயிட்டோம்ல !
அது சரி ஒவ்வொரு பள்ளியிலும் குறிப்பாக மரைக்கா பள்ளி, பழைய மிஸ்கீன் பள்ளி, தக்வா பள்ளி, மக்தூம் பள்ளி இங்கேயெல்லாம் நான் கண்டிருக்கிறேன் நாட்காட்டி முள் அதாவது சூரியனின் சாய்மானம் பொருத்து தொழுகையின் வக்த் கண்டறியும் முறையை யார் அறிமுகப் படுத்தியது ? இந்த வழக்கு முறை எங்கேயிருந்து நமக்கு கிட்டியது... சொல்லுங்களேன் please !
இன்னைக்கு Sun(day)தான்
உண்மை. இந்த முறைக்கு, 'ஜவால்' (Zawal) முறை எனப் பெயர். இது, நம் முன்னோர்களான அரபுகளின் சூரிய ஓட்டத்தை வைத்துத் தொழுகை நேரங்களைக் கணிக்கும் முறையாகும். சூரியன் எப்போதுமே நேர் உச்சியில் இருக்காது. சூரியனின் சரிவைத் துள்ளியமாகக் கணித்து, நேர் கோடும் வளைவுக் கோடும் இட்டு, அதிலிருந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து 'லுஹர்' தொழுகையின் நேரமென்றும், நடுவில் நாட்டப்பட்டுள்ள ஆணியின் நீட்டத்தின் அளவுக்குச் சூரியனின் சாய்வு வந்துவிட்டால், அது 'அஸ்ரு' தொழுகையின் நேரமென்றும் முன்னோர்களான வானியல் வல்லவர்கள் கணித்த துள்ளியமான கணக்காகும். தற்போது கடிகாரங்கள் புழக்கத்தில் வந்துவிட்டதால், அதன் தேவை அருகிவிட்டது.
அன்புள்ள ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்களும் அன்புத் தம்பி crown அவர்களும் என்னைக் கண்டித்ததில் எனக்கு உடன்பாடே. என் மனவருத்தம் அந்த குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் ஆலிம்களை மதிக்காமைதான் என்ற ஆற்றாமையில் தான் எழுதினேன். உள்ளத்தில் உள்ளதை எழுதுவதால் என் கவியுள்ளம் ஒன்றும் பொய்யுள்ளம் ஆகிவிடாது. நிற்க. காலம் காலமாக அதிரைக்கே இழுக்குத் தேடி தரும் “தெரு பாகுபாடு” தான் இக்கட்டுரையில் பட்டபாடு..!!!
நம்மூர் ரயில்வே நிலையத்தில் அந்த காலத்து வால் CLOCK ஒன்று இருந்ததே அது தற்போது ஓடிக்கொண்டு உள்ளதா விபரம் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்
//அந்த குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் ஆலிம்களை மதிக்காமைதான்//
யார் சொன்னது ஜனாப் கவி? நீங்களாகவே சுயமாக யூகித்துக்கொண்டால் அதற்கு அக்குடும்பம் பொறுப்பில்லையே.
உங்கள் குடும்பத்தில் (கொழும்பு ஸ்டோர் வீட்டிலும் கடையிலும்) வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்று சொல்லி ராமனின் சிலையை வைத்திருந்தார்களாமே...மறந்து விட்டதோ அல்லது மறைத்து விடார்களா?
ஒரு ஆலிம்தான் அதனை கேள்விப்பட்டு மிகவும் கண்டிப்புடன் அதனை அகற்றினார்.
“தெரு பாகுபாடு” தான் இக்கட்டுரையில் பட்டபாடு..!!!//
கவியுள்ளம் இலக்கியம் பழகவில்லையோ? வரலாறை எழுதினால் ''பாகுபாடு'' என்ற கூப்பாடு ஏன்?
எதையாவது குறை காணவேண்டுமோ? நன்பா சின்ன வயசு புத்தி இன்னும் போகவில்லையோ?
அதிரை வரலாறுன்னுதானே நெனச்சு வாசிக்கிறோம் இங்கே எப்படி பூகோலம் வந்தது (தெ.பா) பா(ட்)டு?
அபுஇபுறாஹிம் said...
இன்னைக்கு Sun(day)தான்
28 August 2010 16:29
நாளைக்கு தானோங்க sunday 28 /08 /2010 .என்ன ஒருநாள் அடுவான்சா இருக்கியளே !
Shahulhameed, said...
நாளைக்கு தானோங்க sunday 28 /08 /2010 .என்ன ஒருநாள் அடுவான்சா இருக்கியளே ///
நான் தான் சொன்னேனே Sunday(இல்லைன்னு) ! ஆன எழுதினது Sundayலதான் ஆனா timezone அங்கேதான் அப்படிபோலும் ! நமதான் வரலாறுபற்றி பேசுறோம் ஆனா இங்கே பூகோலமும் பேசறாங்களே.. (ஒரே பாடர் பிரச்சினைதானுங்க)
உள்ளத்தில் உள்ளதை எழுதுவதால் என் கவியுள்ளம் ஒன்றும் பொய்யுள்ளம் ஆகிவிடாது. நிற்க. காலம் காலமாக அதிரைக்கே இழுக்குத் தேடி தரும் “தெரு பாகுபாடு” தான் இக்கட்டுரையில் பட்டபாடு..!!!
-------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.கவி சகோதரரே!என்மேலும் அஹமது சாச்சாமேலும் கொண்ட அன்பிற்கு நன்றி.ஆனாலும் மேற்கண்ட வரி " நெஞ்ச தொட்டுச்சொல்லுங்க எங்கள் மேல் கொண்ட அன்பு வஞ்ச புகழ்சிஅல்லவே??? எங்கேயாவது தெரு பாகு பாடு கண்டால் சாச்சவிடம் உரிமையுடன் நான் சுட்டிக்காட்டுவேன்.வாய்வழிச் செய்தியை அப்படியே பதிந்தாதால் சொல்கிறீரோ?
இல்லாத தெரு வெறியை தூண்டும் 'கவி'யை கண்டிக்கிறோம். நத்தர்ஷா கடற்கரைதெரு.
உங்கள் குடும்பத்தில் (கொழும்பு ஸ்டோர் வீட்டிலும் கடையிலும்) வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்று சொல்லி ராமனின் சிலையை வைத்திருந்தார்களாமே...'','கவி' பதில் எங்கே?
என்ன குழப்பம் அப்பா இங்கே நாங்கள் சண்டே என்று சொன்னது sundayயை ஆனால் இங்கு சண்டை அல்லவா நடக்கிறது !!!!
உணர்வு பத்திரிகையில் ஒரு முறை அதிரையின் “தெரு பாகுபாடு’ பற்றி அதிரை சகோதரர் எழுதியிருந்தார். மேலும், இங்கு வெளிநாடுகளில் வந்து பல ஊர் காரர்களும் நம் முன்பாகவே “ உங்கள் ஊரில் தெரு விட்டு தெரு திருமணம் செய்வது இல்லையாமே”’ என்று கேட்பதும் எல்லார்க்கும் தெரிந்த செய்தி என்பது அறிக. நிற்க். என் குடும்பம் என்பது என் தந்தை வழி (SOS)பற்றி தான் நான் கூற இயலும். நான் திருமணம் செய்த குடும்பத்தினர் செய்த-செய்யும்-தவறுகள் என் குடும்பம் என்பதாகாது. இன்னும் உண்மையில் அப்படிப்பட்ட ‘ஷிர்க்” விட்யங்களில் அவ்வீட்டாருடன் பல முறை மோதியுள்ளேன்.இன்னும் என்ன என்ன தவறுகள் அவ்வீட்டார் செய்தாலும் அதனை எதிர்த்தும் இன்றும் நான் எதிரியாகவே பார்க்கப் படுகின்றேன். யாவற்றையும் “அல்லாஹ்வுக்காக’ ஏற்றவன். மரியம்மா குடும்பத்தின் மீதுள்ள அக்கறைக்கு காரணம்: அந்த குடும்பத்தில் இருந்து தான் எனக்கு ஓர் “உயிர் நண்பனை” அல்லாஹ் தந்தான். நான் வெளிப்படையாகவும்; என் மனதின் ஆற்றாமையும் தான் வெளிப்படுத்தினேன், தவிர யாரையும் திட்டவோ தாக்கவோ அன்று.
Assalammu alaikkum kalaam kaka,
please remove your astrological option in your profile...it is haraam too...
அதை சொல்ல நீ யார்?
அபுல் ஹஸன் மகனே!
இந்த 'ஹராம்'என்ற யோசனையை உம் வாப்பா,மாமனாருக்கு சொல்லக்கூடாதா?
முதலில் தன்....முகர்ந்து பார்த்துவிட்டு அடுத்து,மாற்றானிடம் வருக!
சகோதரர் கலாம், உங்களை கவிஞர் என்று சொல்வதே கேவலம்.
தம்பி harmys அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டார். உங்கள் profileல் உள்ள astrological option மாற்றுங்கள் என்று தானே கேட்டுள்ளார். நீங்கள் அதை வைத்திருப்பது சரி என்றால் அதற்கு சரியான விளக்கம் தருவதுதானே புத்திசாலித்தனம். சும்மா கலண்டு போய் சம்பந்தமில்லாம, இறந்தவர் பற்றி எல்லாமா எழுதுவது.
இதன் மூலம் தெரிகிறது நீர் பக்குவமற்ற பிற்போக்கு சிந்தனை காவீஞீர் (இனி கவிஞர் அல்ல). அதிரை கவிஞர் என்று பெயரை தயவு செய்து பயன்படுத்தி ஊர் கேட்டுப்போன அதிரைப் பெயரை இனியும் கெடுக்கவேண்டாம்.
தேவையில்லாமல் பிரச்சினையை மட்டும் எழுப்பும் இந்த மாதிரி பேர்வழிகளின் கவிதைகளை(பொய் குப்பைகளை) படிப்பதை தவிற்பது நல்லது.
நீங்கள் உங்கள் உங்கள் profileல் உள்ள astrological option ஆதரிக்கிறீரா இல்லை எதிர்க்கிறீரா முதல்ல அதை சொல்லுமைய்யா.. சும்மா வெட்டியா ஏதாச்சும் எழுதாதைய்யா...
Kavianban KALAM, Adirampattinam, 6 September 2010 06:45
அதை சொல்ல நீ யார்? >>>>
ஏனுங்க யார் சொன்னா கேட்பீங்க ? அப்ப்டி என்னாதான் சொல்லிட்டாரு "harmys" ??
ஏன் இந்தக் காட்டமான வரட்டு வாதம் ? நீங்கள் செய்வது சரியென்றால் அதனை நியாயப் படுத்த சரியான வாதம் வைப்பதை விட்டுட்டு இப்படி நீங்கள் எப்படிப் பட்டவன்னு சொல்லாமலே சொல்லிட்டீங்களே ?
"கவியன்பன்" பட்டம் நீங்களே வச்சுகிட்டதுதான்னு எல்லோருக்கும் தெரியும் அதுக்காக இப்படியா ?
""கவியன்பன்" பட்டம் நீங்களே வச்சுகிட்டதுதான்னு எல்லோருக்கும் தெரியும் அதுக்காக இப்படியா ?" சிறிக்க முடியல. மனுசன் இனி "பட்டம்"விட மாட்டார்.நம்புகிறேன்.
விட்டா...
விட்டா.........பட்டம் எப்படி கிழியும் என தெரியும்.
கலாம் காக்கா அவர்களே .......
என் தந்தை சர்ச்சைக்குரியவராக இருந்தாலும் ...
இறந்துபோனவர்களை பற்றி விமர்சிக்கும்
உங்களை அல்லா மன்னிபானாக ...ஆமின் ..
இருந்தாலும் .....
நீங்கள் உங்கள் ஜாதக பகுதியை
சரி என்று நீங்கள் நினைகிறீர்களா ?.........
தம்பி harmys, உங்களின் பெருந்தன்மையான பதில் பாராட்டக்கூறிது. காவீஞீர் (கவிஞர் அல்ல) கலாமுக்காக துஆ செய்திருப்பதும் உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கிறது.
தன் தவறை உணர்ந்தால் அவராக வைத்திருந்த பட்டம் காற்றில் கேவலமாக பறப்பதை தடுக்கும் என்பதில் அய்யமில்லை.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க காக்கா.. நீங்கள் ஜாதக குறிப்பு வைத்திருப்பது சரியா தவறா? சொலுங்க பிலீஸ்.. எல்லோரும் ஆவலாக காத்திருக்கிறோம்.
நான் போடாத கருத்துரைகள் எப்படி என் மின்னஞ்சல் முகவரி போட்டு இவ்வளவு அசிங்கமாக யார் போட்டார்களோ அவர்கள் மனசாட்சி பதில் கூறட்டும்
என்னுடைய profie பற்றி கூறுவதும்; எனது id பக்கத்தில் படம் இல்லாததும் இங்கு id திருட்டு நடப்பது கேவலம்...
என்ன மாமு சொல்றிய?
பெருந்தகை கடகராசிக்காரரே, இதென்ன புதுக்கவிதையா இருக்குது ?
சரிதான் போங்க இப்படி ஒரு ஹைக்கூ வாழ்நாளில் பார்த்ததே இல்லையே..
கவிதைக்கு பொய்தான் அழகுன்னு எவனோ சொன்னாங்கிறதுக்காக இப்படியா..
இன்று உங்களுக்கு நல்ல நாள், இனிமேல் யாரும் உங்களை அசைக்க முடியாது.
கடகராசிக்காரரே உங்க ஜாதகத்தை யாரும் இதுவரை திருடவில்லைன்னு சந்தோஷப்படுங்க.
// Kavianban KALAM, Adirampattinam said...
நான் போடாத கருத்துரைகள் எப்படி என் மின்னஞ்சல் முகவரி போட்டு இவ்வளவு அசிங்கமாக யார் போட்டார்களோ அவர்கள் மனசாட்சி பதில் கூறட்டும்
என்னுடைய profie பற்றி கூறுவதும்; எனது id பக்கத்தில் படம் இல்லாததும் இங்கு id திருட்டு நடப்பது கேவலம்...//
யப்பா.... இப்பவே கண்ண கட்டுதே...
என்னாமா காதுல பூ சுத்துறாரு பாருங்க. ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.
பூனை கண்ணை மூடுனா உலகமே இருட்டாயிடுச்சுண்டு நினைக்கிற காலமெல்லாம் கடந்துவிட்டது என்பது இன்னுமா புரியவில்லை. இவர் idயை யாரோ திருடிட்டாங்கலாம்.... அப்போ ஜாதக குறிப்பு பற்றி எங்கே பதில்? அது சரி கடைசி பின்னூட்டத்திற்காக ரூம் போட்டு யோசிச்சிருக்கீங்க போல தெரியுது. இருக்கட்டும்.. இருக்கட்டும்...
உங்கள் profileல் ஜாதக குறி வைத்திருப்பது சரியா? தவறா? இதற்கு சரியான விளக்கம் தேவை, அதைவிட்டுட்டு ஆவிக்கேள்ளாம் திருட்டுப் பட்டம் கட்டி பூச்சாண்டி வேலை காட்டுறது தான் கேவலம்.
சகோதரரே, தயவு செய்து கண்டதை உளரி ஊர் பெயரை கெடுக்காதிங்க. முடிஞ்சா நல்ல பதில் தாருங்கள் இல்லாட்டி சும்மா மவுனமா இருங்கள். அதான் கவிதை என்று கிரிக்கி தள்ளும் உங்கள் பொழுதுபோக்கு துறைக்கு நல்லது.
புரிஞ்சிக்கிட்டா சரி......
அதிரை வரலாறு நிர்வாகிக்கு..
நம்ம எல்லோரையும் இந்த கவீஞீர் கவீயன்பின் "கடுப்பேத்துறார் மை லாட்"
excellent ! if you change your relegion, all your sins are washed out !!
Hello Mr Abulkalam pls aware of islamic limits. may allah forgive You
Hello Mr Abulkalam pls aware of islamic limits. may allah forgive You
அதிரையில் இரண்டு வகயான குடும்பங்கள் உள்ளது ஒன்று விலாசம் உள்ளது, மற்றொன்று பட்டப்பெயர் சுட்டி அழைக்கப்படுவது,
உம்: மரியம்மா, பிச்சம்மா
நாச்சிகுலத்து பல்லக்கு தூக்கிகள் அதிரரையில் குடியேறி தங்களை மரக்காயர்கள் என்று அழைத்துக்கொண்டதை அஹமது காக்கா விரிவாக எழுதுவார்கள் என்று எதிபார்ப்போம்
நல்லது என்று எழுதப்பட்ட அதிரை வரலாற்றின் பின்னூட்டங்கள். நாற்றமெடுக்கத் துவங்கி விட்டன.நல்ல கருத்துக்கள் நன்மை சேர்க்கும் தவறான கருத்துக்களுக்கு அல்லாஹ்விடம் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம் என்று உனர்ந்து எழுதுங்கள் சகோதரர்களே
அப்துல் கபூர் அபு தாபி
தெருப் பெருமையும் குலப் பெருமையும் எப்பொழுது ஒழிக்கப் படுகிறதோ அந்த நாள் தான் அதிரையின் பொன்னாள். அதிரை வரலாறு எழுதி முடிக்கப்படும்போதாவது இன்ஷா அல்லாஹ் அதனை எதிர்பார்ப்போம் அப்துல் கபூர் அபுதாபி
மதிப்பிர்க்குரிய அதிரை அஹமத், நீங்கள் உங்கள் வரலாறு எழுதும் தரத்தை முதலில் உயர்த்தவும். உங்களுக்கு அதிகம் அறிவு உள்ள விசயத்தில் விவாதிக்கவும், இல்லை என்றால் காலத்தை படைத்த இறைவனிடம் பதில் சொல்ல கடமை உண்டு. உண்மையான வரலாற்றை விரும்பும் வாசகன்.
மதிப்பிர்க்குரிய அதிரை அஹமத், நீங்கள் உங்கள் வரலாறு எழுதும் தரத்தை முதலில் உயர்த்தவும். உங்களுக்கு அதிகம் அறிவு உள்ள விசயத்தில் விவாதிக்கவும், இல்லை என்றால் காலத்தை படைத்த இறைவனிடம் பதில் சொல்ல கடமை உண்டு. உண்மையான வரலாற்றை விரும்பும் வாசகன்.
மதிப்பிர்க்குரிய அதிரை அஹமத், நீங்கள் உங்கள் வரலாறு எழுதும் தரத்தை முதலில் உயர்த்தவும். உங்களுக்கு அதிகம் அறிவு உள்ள விசயத்தில் விவாதிக்கவும், இல்லை என்றால் காலத்தை படைத்த இறைவனிடம் பதில் சொல்ல கடமை உண்டு. உண்மையான வரலாற்றை விரும்பும் வாசகன்.
மதிப்பிர்க்குரிய அதிரை அஹமத், நீங்கள் உங்கள் வரலாறு எழுதும் தரத்தை முதலில் உயர்த்தவும். உங்களுக்கு அதிகம் அறிவு உள்ள விசயத்தில் விவாதிக்கவும், இல்லை என்றால் காலத்தை படைத்த இறைவனிடம் பதில் சொல்ல கடமை உண்டு. உண்மையான வரலாற்றை விரும்பும் வாசகன்.
மதிப்பிர்க்குரிய அதிரை அஹமத், நீங்கள் உங்கள் வரலாறு எழுதும் தரத்தை முதலில் உயர்த்தவும். உங்களுக்கு அதிகம் அறிவு உள்ள விசயத்தில் விவாதிக்கவும், இல்லை என்றால் காலத்தை படைத்த இறைவனிடம் பதில் சொல்ல கடமை உண்டு. உண்மையான வரலாற்றை விரும்பும் வாசகன்.
மதிப்பிர்க்குரிய அதிரை அஹமத், நீங்கள் உங்கள் வரலாறு எழுதும் தரத்தை முதலில் உயர்த்தவும். உங்களுக்கு அதிகம் அறிவு உள்ள விசயத்தில் விவாதிக்கவும், இல்லை என்றால் காலத்தை படைத்த இறைவனிடம் பதில் சொல்ல கடமை உண்டு. உண்மையான வரலாற்றை விரும்பும் வாசகன்.
மதிப்பிர்க்குரிய அதிரை அஹமத், நீங்கள் உங்கள் வரலாறு எழுதும் தரத்தை முதலில் உயர்த்தவும். உங்களுக்கு அதிகம் அறிவு உள்ள விசயத்தில் விவாதிக்கவும், இல்லை என்றால் காலத்தை படைத்த இறைவனிடம் பதில் சொல்ல கடமை உண்டு. உண்மையான வரலாற்றை விரும்பும் வாசகன்.
Post a Comment